Sunday, October 20, 2019

பாமாலை 145 - விண்போகும் பாதை தூரமாம்

பாமாலை 145 – விண்போகும் பாதை தூரமாம்
(We have not seen we cannot see)

பரி. தோமா திருநாளுக்கான இப்பாடலை எழுதியவர் போதகர் ஜான் மேஸன் நீல் (John Mason Neale) என்பவர் ஆவார். ஜான் மேஸன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  17ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதகரும் பாடலாசிரியருமான அருள்திரு. ஜான் மேஸன் அவர்களின் நினைவாக இவரது பெற்றோர் அவரது பெயரையே தம் மகனுக்கும் வைத்தனர்.

John Mason Neale
ஜான் மேஸன் நீல் பண்டிதரின் தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்திருச்சபை மறையில்ஆக்ஸ்வர்டு குழுவை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லைஉடல்நிலை குன்றியதால், அவர் இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது

போதகர் ஜான் மேஸன் நீல் ஒரு சிறந்த கல்விமான்ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.

”விண்போகும் பாதை தூரமாம்” எனும் இப்பாடலை ஆங்கிலத்தில் போதகர் ஜான் மேஸன் இவ்வாறு எழுதினார்.

1. We have not seen, we cannot see,
The happy land above,
From sin and death and suffering free,
Where all is peace and love.

2. We only see the path is long
By which we have to go;
We only feel the foes are strong
Who seek to work us woe.

3. We have not seen, we cannot see
The cross our Master bore,
With all its pains, that we might be
The slaves of sin no more.

4. We only think it hard to part
With every pleasant sin,
And give to God a perfect heart,
And make Him Lord within.

5. We walk by faith, and not by sight;
And, blessèd saint, like thee,
We sometimes doubt if faith tells right,
Because we cannot see.

6. Upon the promise we would lean
Thy doubting heart received;
Blessèd are they that have not seen,
And that have yet believed.

George Mursell Garrett
இப்பாடலுக்கான ‘Beulah’ எனும் ராகத்தை ஜார்ஜ் கேரட் என்பவர் (George Mursell Garrett) என்பவர் எழுதினார். ஜார்ஜ் இயற்றிய இந்த ராகம் Ancient & Modern புத்தகத்தின் 1889ம் ஆண்டு பதிப்பில் வெளியானது.

நம் ‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தில், கீழ்க்கண்ட பாடல்கள் போதகர் ஜான் மேஸன் நீல் அவர்களால் எழுதப்பட்டவை / மொழிபெயர்க்கப்பட்டவை ஆகும்:

பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே
பாமாலை 95 – மாட்சி போரை போரின் ஓய்வை
பாமாலை 93 – சிலுவைக் கொடி முன்செல்ல
பாமாலை 92 – ஓசன்னா பாலர் பாடும்
பாமாலை 46 – இம்மானுவேலே வாரும் வாருமே


போதகர் ஜான் மேஸன் நீல் 1866ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் நகரின் அருகே East Grinstead எனும் இடத்தில் மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano1. விண் போகும் பாதை தூரமாம்
என்றே நாம் எண்ணுவோம்;
பகைஞரின் கொடூரமாம்
வன்மையை உணர்வோம்.

2. ஆனால் எப்பாடும் பாவமும்
இல்லா அவ்விண்ணையே
நாம் கண்டிலோம், நாம் காணவும்
இம்மையில் கூடாதே.

3. சிற்றின்பத்தை வெறுத்தலும்,
உள்ளத்தை முற்றும் நாம்
கர்த்தாவுக் கொப்புவித்தலும்
அரிதென் றெண்ணலாம்.

4. ஆனாலோ, பாவம் நீக்கிட
அகோர வேதனை
மீட்பர் அடைந்து மாண்டதும்
நாம் காணக்கூடாதே.

5. பக்தன் தோமாவே, உன் போலும்
கண்ணால் காணாமலே
விஸ்வாசம் தக்கதாயினும்
சந்தேகம் கொள்வோமே.

6. என்றாலும், 'காணாதிருந்தும்
விஸ்வாசித்தோர் பாக்கியர்'
என்றே நீ பெற்ற வாக்கையும்
நாங்களும் சார்ந்தவர்.

Post Comment