Monday, December 17, 2012

பாமாலை 13 - யூதேயாவின் ஞானசாஸ்திரி (Laus Deo)

(Bright the Vision that delighted)
Tune: Laus Deo
Meter:  8, 7, 8, 7

மனதைத் தொடக்கூடிய அழகிய ராகத்தில் அமையப்பெற்ற இப்பாமாலை 1837ம் ஆண்டில் உருவான மிகப் பழமையான பாடலாகும். ஐயர்லாந்தைச் சேர்ந்த அருள்திரு. ரிச்சர்ட் மன்ட் (Rev. Richard Mant 1776-1848) என்பவரால் உருவாக்கப்பட்டது இப்பாடல்.

Rev. Richard Mant 1776-1848
வின்செஸ்டரிலும் (Winchester) ஆக்ஸ்ஃபோர்ட் ட்ரினிட்டி கல்லூரியிலும் (Trinity College, Oxford) பயின்ற இவர் தமது 26வது வயதில் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு, பரிட்டன் (Buriton), ஹாம்ப்ஷெயர் (Hampshire) மற்றும் சவுத்ஹாம்ப்ட்டன் (Southampton) பகுதிகளின் குருசேகரங்களில் பணிபுரிந்தார்.  லண்டனில் வசித்து வந்த இவர் 1820ம் ஆண்டு ஐயர்லாந்தின் Killaloe என்ற இடத்தில் பேராயராகப் பணிபுரிந்தார். ரிச்சர்ட் தாம் ஐயர்லாந்தில் பணிபுரிந்தபோது அங்கிருந்த ஆலய வரலாற்றைத் தொகுப்பதிலும், இரண்டு தொகுதி பாடல்களை எழுதுவதிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் எழுதிய பாடல்களுள் ‘Bright the Vision’ பாடலும் ‘For all the saints, O Lord’ பாடலும் இன்றும் பாடப்படுகின்றன.

இப்பாமாலையின் முதல் சரணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘யூதேயாவின் ஞானசாஸ்திரி’ ஏசாயா தீர்க்கதரிசி ஆவார். ஏசாயா 6:1-4’ல் குறிப்பிட்டிருக்கும் ”ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன் .. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்” என்று ஏசாயா தீர்க்கன் விவரிக்கும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ரிச்சர்ட் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

நம் திருச்சபைகளில் ‘யூதேயாவின் ஞான சாஸ்திரி’ பெரும்பாலும் Laus Deo என்ற ராகத்தில் பாடப்படுகிறது.  30 வருடங்களாக St Mary Magadalene’s, Paddington ஆலயத்தில் ஆர்கன் இசைக்கலைஞராய் இருந்த ரிச்சர்ட் ரெட்ஹெட் (Richard Readhead 1820-1901) என்பவர், 1853’ல் எழுதிய ஒரு இசைக்கோர்வையிலிருந்து இந்த ராகம் எடுத்தாளப்பட்டுள்ளது.
  

History of Hymn Source : "Book of Hymns" by Ian Bradley

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant
Unison with Descant










































1.    யூதேயாவின் ஞான சாஸ்திரி
விந்தைக் காட்சியைக் கண்டான்
கோடாகோடி தூதர் கூடி
பாடும் கீதத்தைக் கேட்டான்

2.    உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா
வானம் பூமி நிரப்பும்
தூய தூய தூய கர்த்தா
உந்தன் துதி பெருகும்.

3.    என்றே ஆசனத்தைச் சூழ்ந்து
கேரூப் சேராபீன்களும்
ஆலயம் நிரம்ப நின்று
மாறி மாறிப் பாடவும்.

4.    தூயர் தூயர் தூயரான
சேனைக் கர்த்தர் எனவும்
தூதர் பாட்டு விண்ணில் ஓங்க
மண்ணில் இன்றும் ஒலிக்கும்

5.    உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா
வானம் பூமி நிரப்பும்
தூய தூய தூய கர்த்தா
உந்தன் துதி பெருகும்

6.    என்றே வான சேனையோடு
பூதலத்தின் சபையும்
கர்த்தாவை நமஸ்கரித்து
துதி கீதம் பாடிடும்.

Post Comment

Sunday, December 2, 2012

பாமாலை 12 - முன்னோரின் தெய்வமாம் (Covenant)

பாமாலை 12 - முன்னோரின் தெய்வமாம் 
The God of Abraham praise
Tune : Covenant

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  முன்னோரின் தெய்வமாம்
உன்னத ராஜராம்
அநாதியானோர் அன்பராம்
மா யெகோவா
சர்வ சிருஷ்டியும்
உம் பேர் நாமம் சாற்றும்
பணிந்து போற்றுவோம் என்றும்
உம் நாமமே
 
2.  உன்னத பரனை
தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே
என்றிசைப்பார்
நேற்றும் இன்றும் என்றும்
இருக்கும் கர்த்தரும்
மா யெகோவா நம் பிதாவும்
துதி ஏற்பார்
 
3. மீட்புற்ற கூட்டமே
மா நாதர் போற்றுமே
பிதா சுதன் சுத்தாவிக்கே
துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும்
தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும்
உண்டாகவும்.

Post Comment

Thursday, October 25, 2012

பாமாலை 370 - எந்தன் ஆத்ம நேசரே (Hollingside)

பாமாலை 370 – எந்தன் ஆத்ம நேசரே
Tune : Hollingside


‘உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்’. சங்கீதம் 143:9

1861ம் ஆண்டு, அமெரிக்க உள்நாட்டுப்போரில், ஒரு போர்வீரன், இரவில் தனியாக ஒரு காட்டில் காவல் வேலையில் நிற்கும்போது, மனக்கலக்கம் அடைந்து, ‘எந்தன் ஆத்ம நேசரே’ என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தான். எதிரி ஒருவன் அவன் நிற்பதைக் கண்டு, மெதுவாக அவனை அணுகி, அவனைச் சுட்டுக்கொல்வதற்காகத் தன் துப்பாக்கியை நோக்கினான்.  அவன் பாடுவதைக் கேட்டு அதைக் கவனிக்கலானான்.  இரண்டாவது கவியில், ’ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர்’ என்ற வார்த்தைகளைக் கேட்டவன், அவனைச் சுடாமல், சத்தமில்லாமல் திரும்பிப் போய்விட்டான். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின், இவர்கள் இருவரும் ஒரு கப்பல் பிரயாணத்தில் சந்திக்க நேரிட்டது.  போர்வீரன் அதிசயமாகக் காக்கப்பட்டதை அப்போதுதான் உணர்ந்தான் ‘வெள்ளம்போன்ற துன்பத்தில் திக்கில்லாமல் தடுமாறிப் போகையில்’ இப்பாடலைப் பாடி ஆறுதலும் பாதுகாப்பும் பெற்றான்.

இதை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரரான சார்ல்ஸ் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகர்.  அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் ஊரில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் என்னுமிடத்திலும், பின்னர் ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று பட்டம் பெற்றார். ஆக்ஸ்வர்டில் பயிலும்போது, ‘ஆக்ஸ்வர்டு மெதடிஸ்டுகள்’ என்னும் ஒரு குழுவை ஸ்தாபித்தார்.  இந்தக் குழுதான், பின்னர் மெதடிஸ்டு சபையாகத் துளிர்த்தது.

சார்ல்ஸ் வெஸ்லி தன்னுடைய வாழ்க்கையில் 6500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.  அப்பாடல்களில் அநேகமாக திருமறையிலுள்ள பதங்களே உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘எந்தன் ஆத்ம நேசரே’ என்னும் பாடல் 1740ம் ஆண்டு எழுதப்பட்டது. ‘உலகத்திலுள்ள எல்லா அரசர்களும் பெற்ற கீர்த்தியை விட, இந்தப் பாடலை எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்குமானால், அதையே மேலானதாகக் கருதியிருப்பேன்’ என்று ஹென்ரி பீக்கர் என்னும் போதகர் ஒருமுறை கூறியுள்ளார்.  ஆனால் அதை எழுதிய வெஸ்லி போதகர் அதை ஒரு சிறந்த பாடலாகக் கருதவில்லை.  ஆகையால் அவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இது முதல் முறையாக வெளியிடப்பட்டது.  ஆயினும் கிறிஸ்தவ உலகில் இது மிகச் சிறந்த பாடலாகக் கருதப்பட்டு அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

இப்பாடல் எழுதப்பட்ட சந்தர்ப்பத்தைக் குறித்து பல அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. வல்லூறினால் துரத்தப்பட்ட பறவை ஒன்று, ஒருமுறை வெஸ்லி போதகரின் அறைக்குள் புகுந்து, அவரது அங்கியில் அடைக்கலம் புகுந்ததைக் கண்டு இப்பாடலை எழுதியதாகவும், கடலில் அலைகள் திரண்டு அவர் பிரயாணமான கப்பலைத் தாக்கியபோது இதை எழுதியதாகவும், ஒரு கூட்டம் வெறியர்கள் அவரைத் தாக்கியதால், அவர் தப்பியோடி மறைந்திருந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியதாகவும் கூறப்படுகின்றன.  ஆனால் அவர் உண்மையில் அவர் ஆண்டவரின் அன்பைக் குறித்துப் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்றேயொழிய வேறு காரணங்களால் எழுதப்பட்டதென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை.  மெதடிஸ்டு சபை ஆரம்பமான சில மாதங்களில் அவருக்கு ஏற்பட்ட ஆவிக்குரிய மாறுதலின் விளைவாகவே இது எழுதப்பட்டதென்று ஐயமறக் கூறலாம்.

இப்பாடலை எழுதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், 1788ல் சார்ல்ஸ் வெஸ்லி போதகர் லண்டன் மாநகரில் காலமானார். ஆயினும் அவர் எழுதிய ‘எந்தன் ஆத்ம நேசரே’, ‘இன்று கிறிஸ்து எழுந்தார்’, ‘அன்பின் ரூபி மோட்சானன்ந்தம்’, ‘பாவிக்காய் மரித்த இயேசு’, ‘கிறிஸ்துவின் வீரரே’ முதலிய ஆயிரக்கணக்கான பாடல்களின் வாயிலாகக் கிறிஸ்து சபை அவரை நன்றியுடன் நினைவுகூருகிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  எந்தன் ஆத்ம நேசரே
வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே
திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்.

2.  வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை
நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்

3.  குறை யாவும் நீக்கிட
நாதா நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்
நான் அசுத்த பாவிதான்
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான்
நீர் நிறைந்த நித்தியரே

4.  பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே
எந்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமி என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊறுமேன்.

Post Comment

Monday, October 15, 2012

பாமாலை 21 - சேனையின் கர்த்தா

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.    சேனையின் கர்த்தா
சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம்
கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்
 
2.    ராஜாதி ராஜா
சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
உம் வீடடைந்தே
உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே
 
3.    சேனையின் கர்த்தா
சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
விண்ணப்பம் கேளும்
கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை
 
4.    மன்னா நீர் சூரியன்
என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
உம் பக்தர் பேறு
நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்
 
5.    திரியேக தேவே
மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
நித்தியம் ஆளும்
சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.

Post Comment

Sunday, September 23, 2012

பாமாலை 366 - அருள் நிறைந்தவர் (Olivet)

பாமாலை 366 – அருள் நிறைந்தவர், பூரண இரட்சகர்
(My faith looks up to Thee)
Tune : Olivet

‘என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருந்தேன்’ கலாத் 2 : 20

நமது ஆராதனைகளில் பாடப்படும் பாடல்கள், கிறிஸ்தவ ஜீவியத்தைக் குறித்த வெவ்வேறு பொருள்களின் பேரில் எழுதப்பட்டவை.  ‘அருள் நிறைந்தவர்’ என்னும் இப்பாடல், ‘பிரார்த்தனை’ என்னும் பொருளில் எழுதப்பட்டது.  முதல் மூன்று கவிகளில் ஆண்டவரின் சகாயத்தை வாழ்நாள் முழுவதும் அளிக்க ஜெபித்து, கடைசிக்கவியில், மரிக்கும் காலத்தில் ஆறுதல் தந்து, மோட்சத்தில் சேர்க்கும்படி மன்றாடிப் பாடும் பாடலாகும் இது.


இதை எழுதிய ரே பாமர் (Ray Palmer) போதகர் அமெரிக்காவில் ரோட் ஐலண்டு மாகாணத்தில், காம்ப்ட்டன் நகரில், 1808ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பிறந்தார்.  இவரது தந்தை ஒரு நீதிபதி. தமது இளவயதில் பாஸ்டன் நகரில் வளர்ந்து, பின் அங்குள்ள ஒரு மளிகைக் கடையில் கணக்கராக வேலைபார்த்தார். பின்பு யேல் பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் கற்றுத் தேறிப் பட்டமும்பெற்று, நியூயார்க் நகரில் ஒரு பெண் பாடசாலையில் ஆசிரியராக அமர்ந்தார்.  வேலை பார்க்கும்போதே சுயமாக வேதசாஸ்திரம் கற்று, 1830ல் குருப்பட்டம் பெற்றார்.  பின்பு முப்பது ஆண்டுகள் இரு சபைகளில் போதகராக ஊழியம் செய்தார்.

ரே பாமர் குருப்பட்டம் பெற்றுப் போதகரானபின், அவருக்கு கிறிஸ்தவப் பாடல்கள் எழுத ஆவல் உண்டாயிற்று.  ஒருநாள் மாலையில் தமது அறையில் உட்கார்ந்து, ஏதாவது பாடல் எழுத ஆவல்கொண்டு, தமது முதல் பாடலாக, ‘அருள் நிறைந்தவர்’ என்னும் பாடலை ஆறு கவிகளுடன் எழுதி, தன் சட்டைப்பையில் வைத்துவிட்டு, இரண்டு ஆண்டுகளாக அதை மறந்துவிட்டார்.  1832ல் பாஸ்டன் நகரில் அவரது நண்பரான லவல் மேசன் பண்டிதரைச் சந்தித்தார்.  அப்போது மேசன் பண்டிதர், ‘சமுதாய வழிபாடுகளில் பாடுவதற்கேற்ற ஆவிக்குரிய பாடல்கள்’ என்னும் ஒரு பாட்டுப் புத்தகத்தைத் தொகுப்பதில் ஈடுபட்டிருந்தார்.  இப்புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளத்தக்க பாடல்கள் தம்மிடம் உண்டா என மேசன் பண்டிதர் பாமர் போதகரைக் கேட்க, அவர் இரு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டு, தமது சட்டைப் பையிலிருந்த, ’அருள் நிறைந்தவர்’ என்னும் பாடலைக் கொடுத்தார். பண்டிதர் இதை ஒரு சிறந்த பாடலாகக் கருதி, தாமே அதற்கு, ‘Olivet’ என்ற ஒரு இராகத்தையும் எழுதினார்.  மேலும் அவர் போதகரை நோக்கி, ‘நீங்கள் அநேக ஆண்டுகள் உயிருடன் இருந்து மக்களுக்கு அநேக நற்காரியங்களைச் செய்யக்கூடும்.  ஆனால் பின் சந்ததியார் இந்த ஒரே பாடலின் மூலமாகத்தான் உங்களை அறிந்துகொள்வார்கள்’ என்று போற்றியுள்ளார்.

இப்பாடல்தா பாமர் போதகர் தமது வாழ்க்கையில் எழுதிய முதல் பாடல்.  இதன் இறுதி அடிகளை எழுதும்போது, அதிக உணர்ச்சியால் பரவசமடைந்து, கண்களில் நீர் ததும்பியதாக அவரே கூறியுள்ளார்.  நமதாண்டவர் அருள் நிறைந்தவராகவும், பூரண இரட்சகராகவும் இருப்பதைத் தமது உள்ளத்தில் உணர்ந்து, எவ்வகைக் கலக்கம் நேரிடினும் அவரே தகுந்த சகாயமும், ஆறுதல் செய்ய வல்லவர் என்பதை இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார்.  இப்பாடல் முதல்முறையாக இங்கிலாந்தில் பிரசுரமானபோது, ‘பரிசுத்தவான்கள் உலக வாழ்க்கையை நீத்து, விண்ணுலகம் செல்லும்போது பாட, அல்லது பாடக்கேட்க விரும்பும் பாட்டு’ என்று போற்றப்பட்டது.  பாமர் போதகர் இப்பாடலுக்கு ஆறு கவிகள் எழுதினார்.  ஆனால் நமது புத்தகங்களில் நான்கு கவிகள்தான் உள்ளன.

தமது வாழ்க்கையில் அநேக பாடல்கள் எழுதியதுடன், லத்தீன் மொழியிலிருந்தும் பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  ஆனால் இவற்றிற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார்; அவர் எழுதிய இதர பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

ரே பாமர் போதகர் 1887ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி, தமது 79ம் வயதில் காலமானார்.

Unison
Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர்
தேவரீரே
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.

2.    சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து
பெலன் கொடும்.
ஆ! எனக்காகவே
மரித்தீர், இயேசுவே;
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்.

3.    பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும்
வருகினும்
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்.

4.    மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில்,
சகாயரே,
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே.

Post Comment

Thursday, September 20, 2012

பாமாலை 248 - கிறிஸ்துவின் வீரர் நாம்

 Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    கிறிஸ்துவின் வீரர் நாம்;
ரத்தத்தால் மீட்டாராம்
இப்போது சேனை சேர்ந்து நாம்
அவர்க்காய்ப் போர் செய்வோம்
அபாயத்தினூடும்
மகிழ்ந்து பாடுவோம்
தம் வீரரை நடத்துவோர்
நெஞ்சில் திடன் ஈவார்.
 
கிறிஸ்துவின் வீரர் நாம்
புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை
எக்காலும் சேவிப்போம்.
 
2.    கிறிஸ்துவின் வீரர் நாம்
அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம்
மாண்போடு தாங்குவோம்
நஷ்டமும் லாபமே
எந்நோவும் இன்பமே,
அவரின் நாமம் ஏற்றிடும்
கிறிஸ்துவின் வீரர்க்கே
 
3.    கிறிஸ்துவின் வீரராய்
அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும்
அவரோடாளுவோம்
காலம் சமீபமே,
ஓங்கிப் போர் செய்வோமே
மாண்பாக கிரீடம் சூடுவோம்
கிறிஸ்துவின் வீரரே.

Post Comment

Monday, September 17, 2012

பாமாலை 356 - களிகூருவோம்

Unison

Soprano
Alto
Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano









































1.  களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்.

கர்த்தர் நம் பட்சம் 
கர்த்தர் நம்மோடு
கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்?
யார்? யார்? யார்?
யார் எதிர்க்க வல்லோர்
யார் வல்லோர்?

2.  திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்;
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால்

3.  வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும், இது மெய் மெய்யே.

4.  நிலைத்திருப்போம், கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்.

Post Comment

Tuesday, August 28, 2012

பாமாலை 43 - உலகத்தைப் பலமுள்ள

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1.  உலகத்தைப் பலமுள்ள
கையால் ஆண்டு, தினமே
என்னைக் காக்கும் உண்மையுள்ள
மா பெரிய கர்த்தரே,
என்னைத் தெய்வ துதிக்கும்
இந்த நாள் எழுப்பிடும்.

2.  கர்த்தரின் திருநாளான
இந்த நாள் மா இன்பமே
இதில் ஓய்வும் உண்மையான
ஆறுதலும் ஈவீரே;
இதில் ஆவியானவர்
மோட்ச வழி காட்டுவர்.

3.  என் ரட்சிப்பை நடப்பிக்க
இந்த வேளை தக்கதே;
தெய்வ தயவைச் சிந்திக்க
என்னைத் தூண்டி ஏவுமே;
என் ஜெபம் புகழ்ச்சியும்
வானமட்டும் ஏறவும்.

4.  தேனைப்பார்க்கிலும் தித்திக்கும்
உம்முடைய வசனம்
ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும்
ருசியான அமிர்தம்;
ராப்பகலும் அதை நான்
சிந்தித்தால் மெய்ப் பாக்கியவான்.

5.  எங்கள் ஜெபத்துக்கன்பாக
நீரே ஆமேன் என்கவும்,
மோட்சத்தில் உம்மை நேராக
நாங்கள் பார்க்குமட்டுக்கும்,
ஏகமாய் வணங்குவோம்,
உம்மைப் பாடிப் போற்றுவோம்.

Post Comment

Wednesday, August 15, 2012

பாமாலை 16 - ஆ கர்த்தாவே தாழ்மையாக

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

2.  வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

3.  என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்;
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

Thanks to dear brother Mr. Pon Vijay for his contribution to this post.

Post Comment

Saturday, August 11, 2012

பாமாலை 342 - கர்த்தர் என் பக்கமாகில்

 பாமாலை 342 - கர்த்தர் என் பக்கமாகில்

Unison

Soprano
Ato
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano






















1.  கர்த்தர் என் பக்கமாகில்
எனக்குப் பயம் ஏன்
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்
அப்போதென்மேலே வந்த
பொல்லாவினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்பு போலே ஆம்.
 
2.  என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே
அதாலே பக்தர் யாரும்
திடன் கொள்வார்களே
நான் ஏழை பலவீனன்
வியாதிப்பட்டோனே
அவரில் சொஸ்தம் ஜீவன்
சமஸ்தமும் உண்டே
 
3.  என் நீதி இயேசுதானே
அவர் இல்லாவிட்டால்
பிதாவுக்குமுன் நானே
மா பாவியானதால்
விழிக்கவும் கூடாதே
என் இயேசுவன்றியே
ரட்சிப்புக் கிடையாதே
என் மீட்பர் அவரே
 
4.  என் சாவு இயேசுவாலே
விழுங்கப்பட்டது
இவர் இரக்கத்தாலே
என் பாவக் கேட்டுக்கு
நான் நன்றாய் நீங்கலானேன்
நான் நியாயத் தீர்ப்புக்கும்
பயப்படாதோனானேன்
வாழ்வெனக்கு வரும்
 
5.  தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே
அப்பாவே என்று சொல்ல
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம் செய்ய
என் ஆவி தேறுதே
 
6.  என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ
கர்த்தர் என் மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே

Post Comment

பாமாலை 271-யாரை நான் புகழுவேன்? (Tune - Barmouth)

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. யாரை நான் புகழுவேன்?
யாரை நான் அறிகிறேன்?
என் கதியும் பங்கும் யார்
நான் பாராட்டும் மேன்மை யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
 
2.  யார் நான் நிற்கும் கன்மலை
யார் என் திட நம்பிக்கை?
குற்றத்தை சுமந்தோர் யார்
தெய்வ நேசம் தந்தோர் யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்
 
3.  எந்தன் பிராண பெலன் யார்
ஆத்துமத்தின் சாரம்  யார்?
யாரால் பாவி நீதிமான்
யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால்.
 
4.  கஸ்தியில் சகாயர் யார்
சாவின் சாவு ஆனோர் யார்?
என்னைத் தூதர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்
 
5.  இயேசுதான் என் ஞானமே
அவர் என் சங்கீதமே
நீங்களும் புகழுங்கள்
அவரைப் பின்செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை.

Post Comment