Tuesday, October 22, 2013

பாமாலை 59 - ஒப்பில்லா திரு இரா

பாமாலை 59 – ஒப்பில்லா திரு இரா
Silent Night, Holy Night

கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது’. லூக்கா 2 : 9

கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு ஆண்டு முழுவதிலும் உள்ள இரவுகளில் மிகவும் முக்கியமானதும், மகிழ்ச்சியானதுமான இரவு, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தின நாள் இரவாகும். ஏனெனில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், அமைதியான இந்த இரவில்தான், திடீரெனப் பிரகாசமான ஒளியுடன் தெய்வ தூதர் வானத்தில் தோன்றி, பூலோகத்திற்கு ஒளியாயிருக்கிற ஆண்டவரின் பிறப்பை அறிவித்தனர்.  அன்றிரவில் பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் தோன்றிய ஒளியானது, இன்று உலக முழுவதிலும் பரவி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கிக்கொண்டிருக்கிறது.  கிறிஸ்மஸ் தினத்தை நாம் பலவிதமாகக் கொண்டாடினாலும், இரவில் நாம் பாடும், ‘Christmas Carols’ என்னும் பாடல்களே நமக்குக் கிறிஸ்மஸ் ஒளியைத் தருகின்றன. இவ்விதமான ஓரிரவில் பாடுவதற்காக எழுதப்பட்ட ஒரு பாடலே, ‘ஒப்பில்லா திரு இரா’ என்னும் பாடலாகும்.

1818ம் ஆண்டு, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தின நாள், ஆஸ்திரியா நாட்டில், ஓபண்டார்ப் கிராமத்திலுள்ள (Oberndorf bei Salzburg, Austria) தூய நிக்கலாஸ் ரோமன் கத்தோலிக்க ஆலயத்தின் (St Nicholas parish church) வாத்தியக் கருவி (Organ) பழுதடைந்துவிட்டது. அவ்வாலயத்தின் உதவிக் குருவாயிருந்த ஜோசப்மோற் (Joseph Mohr) பாதிரியார் இதைக் கண்டு, தனது சபை மக்கள் பாடல்கள் இல்லாமல் கிறிஸ்மஸ் ஆராதனை அனுபவிக்க வேண்டுமே என வருந்தினார். இதை நிவிர்த்தி செய்ய, Organ இல்லாமல் பாடக்கூடிய ஒரு பாடலைத் தாமே எழுதத் தீர்மானித்து, ‘ஒப்பில்லா திரு இரா’ என்ற பாடலை சிறிது நேரத்தில் எழுதினார்.  உடனே, ஆலயப் பாடகர் தலைவரும் அவ்வூர் ஆசிரியருமான ப்ரான்ஸ் க்ரூபர் (Franz Gruber) என்பவர் Guitar வாத்தியத்துடன் அப்பாடலைப் பாடுவதற்கேற்ற ஓர் ராகத்தையும் அமைத்து, அன்றிரவு ஆராதனையில், க்ரூபர் Guitar வாசிக்க, மோற் பாதிரியார் இப்பாடலைப் பாடினார். 
An old photo of St. Nicholas Church
Source: inmozartsfootsteps.com)
சபையார் இதைக் கேட்டு பரவசமடைந்தனர்.  பின்னர், Organ பழுதுபார்க்கப்பட்டவுடன் அதின் தொனியைப் பரீட்சிக்க, க்ரூபர் இந்த ராகத்தை அதில் வாசித்தார்.  பழுதுபார்க்க வந்தவர் இதைக் கேட்டு மிகவும் பாராட்டி, அதின் பிரதி ஒன்றைக் கேட்டு வாங்கித் தனது கிராமமாகிய ஸில்லர்தாலுக்கு (Zillertal) எடுத்துச் சென்றார்.  அவ்வூரிலுள்ள ஒரு மேல் ஜோடு வியாபாரியின் நான்கு பெண் மக்கள் இப்பாடலைப் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று பாடினர்.  அதைக் கேட்டவர்களெல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  இவ்விதமாக இப்பாடல் ஐரோப்பா முழுவதும் பரவியது.  இப்போது இப்பாடல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிறிஸ்மஸ் பாடல்களில் மிகச் சிறந்த பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.  ஆகவே, ஒரு வாத்தியக் கருவி பழுதடைந்ததின் விளைவாக ஓர் அழகிய கிறிஸ்மஸ் பாடல் உருவாகிற்று.


Autograph (c. 1860) of the carol by Franz Gruber
Source : Wiki
இப்பாடலை எழுதிய மோற் பாதிரியார், 1792ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ம் தேதி ஆஸ்திரியா நாட்டில் லால்ஸ்பர்க் (Salzburg) நகரில் பிறந்தார்.  அவரது தந்தையான பிரான்ஸ் மோற் என்பவர் அந்நாட்டு மேற்றிராணியாரின் சேனையில் ஒரு துப்பாக்கி வீரனாக வேலை பார்த்து வந்தார்.  வேலை காரணமாக அவர் அயலூர்களிலேயே சுற்றித் திரிய நேர்ந்ததால், டோம்விகார் ஹின்லே என்னும் பாதிரியார், ஜோசப் சிறுவனின் வளர்ப்புத் தந்தையாக நியமிக்கப்பட்டார்.  அவரது மேற்பார்வையில் ஜோசப் குருத்துவ ஊழியத்திற்காகவே பயிற்றுவிக்கப்பட்டு, கல்வி முடிந்தவுடன், ரோமன் கத்தோலிக்க சபையின் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார்.  பின்பு லால்ஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள அநேகச் சபைகளில் பணியாற்றி 1828ல் ஹிண்டர்ஸீ நகரத்தின் தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார்.  1837 முதல் 1848 வரை உவாக்ரீன் நகரத்தில் ஊழியம் செய்து, அவ்வாண்டில் டிசம்பர் மாதம் 4ம் தேதி காலமானார்.  1818ல் அவர் ஓபண்டார்ப் கிராமத்தில் தூய நிக்கலஸ் ஆலயத்தில் உதவிக் குருவாக பணியாற்றும்போதுதான், ‘ஒப்பில்லா திரு இரா’ என்னும் பாடலை உருவாக்கி உலகப் பிரசித்தி பெற்றார்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.            ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2.            ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;

3.            ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் 
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

Silent Night Holy Night

Post Comment

Monday, October 21, 2013

பாமாலை 66 - நள்ளிரவில் மா தெளிவாய் (Noel)

பாமாலை 66 - நள்ளிரவில் மா தெளிவாய் 
It came upon the midnight clear
Tune: Noel

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.
 
2.  இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.
 
3.  விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்
ஈராயிரம் ஆண்டும்,
மண்ணோரின் பாவம் பகை போர்
பூலோகத்தை இன்றும்
வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்
கேளார் அக்கானமே
போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
 
4.  பார் வாழ்க்கையின் மா பாரத்தால்
நைந்து தவிப்போரே,
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து
தள்ளாடிடுவோரே,
நோக்கும், இதோ உதித்ததே
மா நற் பொற் காலமே
நோவை மறந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
 
5.  தோன்றிடும் இதோ சீக்கிரம்
பேரின்ப காலமே
சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்
உரைத்த காலமே!
போர் ஓய்ந்து பூமி செழிக்கும்
பூர்வ மாண்போடுமே
பாரெங்கும் பரந்தொலிக்கும்
விண் தூதர் கீதமே.

Post Comment

Sunday, October 20, 2013

பாமாலை 57 - இப்போ நாம் பெத்லெகேம்

பாமாலை 57 - இப்போ நாம் பெத்லெகேம்
Let us now go to Bethlehem

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano






 


1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று 
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
வான் ஜோதி மின்னிட
தீவிரித்துச் செல்வோம்,
தூதர் தீங்கானம் கீதமே
கேட்போம் இத்தினமாம்.

2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று 
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
தூதரில் சிறியர்
தூய தெய்வ மைந்தன்;
உன்னத வானலோகமே
உண்டிங் கவருடன்.

3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று 
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
நம்மை உயர்த்துமாம்
பிதாவின் மகிமை!
முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
போற்றுவோம் தெய்வன்பை.

4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
விஸ்வாசத்தோடின்றே
சபையில் தங்கும் பாலனின்
சந்நிதி சேர்வோமே;
மகிழ்ந்து போற்றுவோம்
ஜோதியில் ஜோதியே!
கர்த்தா! நீர் பிறந்த தினம்
கொண்டாடத் தகுமே.

Post Comment

பாமாலை 71 - மெய் பக்தரே நீர்

பாமாலை 71 – மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்
Christians Awake! Salute the happy morn

இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்’. லூக்கா 2:10

கிறிஸ்மஸ் தினம் மேல்நாடுகளில் முக்கியமாகப் பிள்ளைகளின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினத்திற்கு முன்னமே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் பிரியமான பொருட்கள் என்ன என்பதைக் கேட்டறிந்து கிறிஸ்மஸ் காலையில் அவற்றை அவர்களுக்கு வெகுமதியாக அளிப்பது வழக்கம்.  பொதுவாகப் பிள்ளைகள் பெற்றோரிடம் விளையாட்டுக்கருவிகள், பொம்மைகள், புதிய ஆடைகள், தின்பண்டங்கள் முதலியவற்றைக் கேட்பார்கள்.

John Byrom (Source : Wiki)
1749ம் ஆண்டு, இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில், டாலி (Dolly) என்றழைக்கப்பட்ட டாரதி பைரம் (Dorothy Byrom) என்னும் சிறு பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள்.  அவள் தந்தையான ஜான் பைரம் (John Byrom) அவ்வாண்டு கிறிஸ்மஸ் தினத்திற்குச் சில நாட்களுக்கு முன், டாலியிடம் கிறிஸ்மஸ் வெகுமதியாக என்ன வேண்டுமெனக் கேட்டார்.  தனது தந்தை செய்யுள்கள் எழுதும் திறமை வாய்ந்தவர் என்பதையறிந்திருந்த அப்பெண், தனக்கு ஒரு கிறிஸ்மஸ் செய்யுள் (Christmas Poem) இயற்றித் தரக் கேட்டாள்.  கிறிஸ்மஸ் தினத்தன்று காலையில் டாலி எழுந்தபோது, அவள் மேஜையில் ஒரு தட்டில் ‘கிறிஸ்மஸ் தினம், டாலிக்கு’ (Christmas Day, for Dolley) என்று குறிப்பெழுதிய ஒரு செய்யுள் இருக்கக் கண்டாள்.  இச்செய்யுள்தான் கிறிஸ்மஸ் தினத்தன்று உலகமுழுவதிலும் பாடப்பட்டுவரும், ‘மெய்பக்தரே, நீர் விழித்தெழும்பும்’ என்னும் பாடலாகும்.  இச்செய்யுளைப் பார்த்த அவ்வூர் சிற்றாலயத்தின் பாடகர் தலைவரான ஜான் உவெயின் றைட் (John Wainwright) என்பவர், ஒரு மணி நேரத்தில் ‘Yorkshire’ என்னும் ஓர் ராகத்தை உருவாக்கி ஆலயப் பாடகருக்குப் பயிற்சி அளித்து, அன்றையதினமே டாலியின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நின்று பாடினர்.  இப்போது இப்பாடல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகமெங்கும் பாடப்படுகிறது.  ஜான் பைரம் எழுதிய முதல் கைப்பிரதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Original manuscript written by John Byrom
Source : willyorwonthe.blogspot.in
     இப்பாடலை எழுதிய ஜான் பைரம் என்பவர் 1691ம் ஆண்டு, இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிறந்தார்.  அவர் பல பள்ளிகளில் பயின்று, பின்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரித்துவக் கல்லூரியில் 1711ல் பி.ஏ. பட்டமும், 1715ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.  பின்னர் பிரான்ஸ் நாட்டில் வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து, வைத்தியப் பட்டம் பெற்றார்.  இங்கிலாந்துக்குத் திரும்பியவுடன், வைத்தியத் தொழிலை விரும்பாமல், சுருக்கெழுத்து ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.  மேலும் அவர், வேத சம்பந்தமான பல ஆராய்ச்சிகளும், செய்யுள்களும், பல கிறிஸ்தவப் பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

     அவர் 1763ம் ஆண்டு, தமது 72ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார்.

2.            இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3.            அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4.            இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5.            கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.

6.            அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப்படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்.

Post Comment

பாமாலை 305 - தீயோர் சொல்வதை (Tune - Oh the deep deep)

பாமாலை 305 - தீயோர் சொல்வதை 
Tune - Oh the deep deep love of Jesus

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.  தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2.  நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3.  தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Post Comment

பாமாலை 45 - மகிழ்ச்சி ஓய்வுநாளே (Ellacombe)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano










































1.    மகிழ்ச்சி ஓய்வுநாளே
பூரிப்பு ஜோதியாம்
கவலை துக்கம் போக்கும்
மா பாக்கிய நல்நாளாம்
மாந்தர் குழாம் இந்நாளில்
சேர்ந்தே ஆராதிப்பார்
மா தூயர் தூயர் தூயர்
திரியேகர் பணிவார்.
 
2.    முதலாம் சிஷ்டி ஜோதி
இந்நாளில் தோன்றிற்றே
தம் சாவை வென்று மீட்பர்
இந்நாள் எழுந்தாரே
தம் ஆவி வெற்றி வேந்தர்
இந்நாளில் ஈந்தாரே
ஆ! மாட்சியாம் இந்நாளில்
மூவொளி வந்ததே.
 
3.    இப்பாழ் வனாந்தரத்தில்
நீ திவ்விய ஊற்றேயாம்
உன்னின்று மோட்சம் நோக்கும்
பிஸ்கா சிகரமாம்
ஆ! எம்மை முசிப்பாற்றும்
நல் அன்பாம் நாள் இது
மண்ணின்று விண்ணில் ஏற்றும்
புத்துயிர் நாள் இது.
 
4.    செல்வோம் புத்தருள் பெற்று
இவ்வோய்வு நாளிலே
மெய்பக்தர் மோட்ச லோக
மா பாக்கிய ஓய்வுக்கே
பிதா சுதன் சுத்தாவி
எம் ஸ்தோத்ரம் பெறுவீர்
சபையின் நாவால் கீதம்
திரியேகரே ஏற்பீர்.
 

Post Comment