Wednesday, December 17, 2014

Sweet Chiming Bells

Sweet Chiming Bells
Christmas Hymn

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. Come, Thou long expected Jesus
Born to set Thy people free
From our fears and sins release us
Let us find our rest in Thee.

Sweet chiming bells,
Oh how they ring,
To welcome Christ
The new born king
Sweet chiming bells,
Oh how they ring,
To welcome Christ the King.

2. All Thy people’s consolation,
Hope of all the earth Thou art;
Dear desire of ev’ry nation,
Joy of ev’ry longing heart.

3. Born Thy people to deliver
Born a child and yet a King
Born to reign in us forever
Now Thy gracious kingdom bring

4. By Thine own eternal spirit
Rule in all our hearts alone
By Thine all sufficient merit
Raise us to Thy glorious throne

Post Comment

Sunday, December 14, 2014

பாமாலை 79 - இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த
Nun lasst uns gehn und treten
Bavarian 130

SATB


 Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பணிவோடுண்மையாக
இஸ்தோத்திரிப்போமாக.

2. நாள் பேச்சைப்போல் கழியும்
தண்ணீரைப்போல் வடியும்
இதோ, இந்நாள் வரைக்கும்
இவ்வேழை மண் பிழைக்கும்.

3. அநேக விதமான
இக்கட்டையும், உண்டான
திகிலையும் கடந்தோம்;
கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.

4. அடியார் எச்சரிப்பும்
விசாரிப்பும் விழிப்பும்,
தயாபரா, நீர்தாமே
காக்காவிட்டால் வீணாமே.

5. தினமும் நவமான
அன்பாய் நீர் செய்ததான
அநுக்ரகத்துக்காக
துதி உண்டாவதாக.

6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து
நொந்தாலும் உம்மைச் சார்ந்து
நிலைக்கிறதற்காக
திடன் அளிப்பீராக.

7. மா ஜன சேதத்துக்கும்,
உண்டான போர்களுக்கும்
ஓர் முடிவு வரட்டும்,
நொறுங்கினதைக் கட்டும்.

8. சபையை ஆதரித்து
அன்பாய் ஆசீர்வதித்து
எல்லாருக்கும் அன்றன்றும்
அருள் உதிக்கப்பண்ணும்.


Post Comment

Wednesday, December 10, 2014

O Holy Night

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































O holy night! the stars are brightly shining
It is the night of the dear Savior's birth!
Long lay the world in sin and darkness pining
Till He appeared, gift of infinite worth!
Behold the Babe in yonder manger lowly
'Tis God's own Son come down in human form:
Fall on your knees before the Lord most holy!

O night divine O night when Christ was born!
O night divine O night, O night divine!

2.With humble hearts we bow in adoration
Before this Child, gift of God's matchless love,
Sent from on high to purchase our salvation
That we might dwell with Him ever above
What grace untold to leave the bliss of glory
And die for sinners guilty and forlorn:
Fall on your knees! Repeat the wondrous story!

3.O day of joy, when in eternal splendor
He shall return in His glory to reign,
When ev'ry tongue due praise to Him shall render,
His pow'r and might to all nations proclaim!
A thrill of hope our long hearts rejoices,
For soon shall dawn that glad eternal morn:
Fall on your knees! With joy lift up your voices!


Post Comment

Te Deum Laudamus (தேவனே உம்மைத் துதிக்கிறோம்)

Te Deum Laudamus
தேவனே உம்மைத் துதிக்கிறோம்

****************************************
Verses 1 to 13
****************************************
SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.        தேவனே உம்மைத் / துதிக்கிறோம் : உம்மைக் கர்த்தரென்று பிரஸ் / தாபப்படுத்துகிறோம்.
2.        நித்தியபிதா / வாகிய உம்மை : பூமண்டல / மெல்லாம் வணங்கும்.
3.        தேவதூதர் / அனைவோரும் : பரமண்டலங்களும், அவைகளிலுள்ள அதிகா / ரங்கள் அனைத்தும்
4.        கேரூபீன்களும் சேரா / பின்களும் : தேவரீரை ஓயாமல் / புகழ்ந்து போற்றி
5.        சேனைகளின் தேவனாகிய / கர்த்தரே : நீர் பரிசுத்தர், பரிசுத்தர் / பரிசுத்தர்
6.        வானமும் பூமியும் உமது மகிமையுள்ள / மகத்துவத்தால் : நிறைந்தன என்று / முழங்குகிறார்கள்.
7.        அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய / கூட்டம் : உம்மை போற்றும்
8.        தீர்க்கதரிசிகளாகிய சிறப்புள்ள / சங்கம் : உம்மைப் போற்றும்.
9.        இரத்த சாட்சிகளாகிய தைரிய / சேனை : உம்மைப் போற்றும்.
10.      அளவில்லாத / மகத்துவமுள்ள : பிதாவாகிய / தேவரீரையும்
11.      வணங்கப்படத்தக்க / மெய்யான : உம்முடைய ஒரே குமாரனையும்
12.      தேற்றரவா / ளனாகிய : பரிசுத்த / ஆவியையும்.
13.      உலகமெங்குமுள்ள / பரிசுத்த சபை : பிரஸ் / தாபப்படுத்தும்.
****************************************
Verses 14 to 25
****************************************
SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




14.        கிறிஸ்துவே : தேவரீர் / மகிமையின் ராஜா.
15.        நீரே பிதா / வினுடைய : நித்திய சுதன்
16.        நீர் மனிதரை இரட்சிக்க ஏற்பட்ட / பொழுது : கன்னியாஸ்திரியின் கர்ப்பத்தை அருவருக்கவில்லை.
17.        நீர் மரணத்தின் கொடுமையை / வென்று : விசுவாசிகள் எல்லாருக்கும் மோட்ச ராஜ் / யத்தை திறந்தீர்.
18.        நீர் பிதாவின் / மகிமையிலே : தேவனுடைய வலது பரிசத்தில் / வீற்றிருக்கிறீர்.
19.        நீர் எங்களுக்கு நியாயாதி / பதியாக : வருவீரென்று / விசுவாசிக்கிறோம்.
20.        உமது விலையுயர்ந்த இரத்தத்தால் / மீட்டுக்கொண்ட : உமது அடியாருக்குச் சகாயஞ்செய்ய உம்மை / வேண்டிக்கொள்ளுகிறோம்.
21.        எங்களை நித்திய / மகிமையிலே : உம்முடைய பரிசுத்தவான்களோடே / சேர்த்துக்கொள்ளும்.
22.        கர்த்தாவே உமது ஜனத்தை / இரட்சித்து : உமது சுதந்தரத்தை / ஆசீர்வதியும்.
23.      அவர்களை / ஆண்டு கொண்டு : என்றென்றைக்கும் / உயர்த்தியருளும்.
24.      தினம் / தினம் : உம்மை / ஸ்தோத்தரிக்கிறோம்.
25.      எப்பொழுதும் சதா / காலங்களிலும் : உமது நாமத்தை / வணங்குகிறோம்.
****************************************
Verses 26 to 29
****************************************
SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



26.        ஆண்டவரே, இந்நாளில் பாவஞ்செய் / யாதபடி : எங்களைக் / காத்தருளும்.
27.        கர்த்தாவே, எங்களுக்கு / இரங்கும் : எங்க / ளுக்கு இரங்கும்.
28.        கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பி / யிருக்கிறதால் : உமது கிருபை எங்கள் மேல் / இருப்பதாக.
29.        கர்த்தாவே, உம்மையே நம்பி / யிருக்கிறேன் : நான் ஒருக்காலும் கலங்காத / படி செய்யும்.
****************************************
Sheet Music for Organist
****************************************



Post Comment

ராயர் மூவர் (We Three Kings)

ராயர் மூவர் கீழ்தேசம்
We Three Kings of Orient Are

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano











1.    ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின்செல்வோம் நட்சத்திரம்

     ஓ.. ஓ.. ராவின் ஜோதி நட்சத்திரம்
     ஆச்சரிய நட்சத்திரம்
     நித்தம் வழி காட்டிச் செல்லும்
     உந்தன் மங்கா வெளிச்சம்.

2.    பெத்லேம் வந்த ராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றே
கிரீடம் சூட்டும் நற்பொன்னையே
வைத்தேன் உம் முன்னமே.

3.    நானோ வெள்ளைப்போளமே
கொண்டுவந்தேன் காட்டவுமே
துக்க பாவ பாரம் தாங்கி
மரிப்பார் இவரே.

4.    தூபவர்க்கம் நான் ஈவேன்
தெய்வமென்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன்.

Post Comment

Sunday, November 9, 2014

Mary, Mary

O Mary Rock (Mary, Mary)

Certain portions of the Audio (individual parts) may sound blank, for they are the places where either the 'Accompaniment' or the 'Solos' will be played/sung.  So, for better understanding (if you can't read the notations), kindly listen to the ‘Unison with Accompaniment’ first.

Unison with the Accompaniment

Unison without the Accompaniment

Accompaniment only

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano















































Sheet Music for the Pianist








































SOPRANO
Mary rock your little baby Oo, in the stable to night
Mary rock your little baby Rock your baby in the heavenly light
Mary, rock your little baby, Oo in the stable to night
Mary rock your little baby Rock your baby in the heavenly light

Shepherds travel from far and wide just to kneel at the baby's side
Mary, rock your little baby Oo, in the stable tonight
Mary, rock your little baby Rock your baby in the heavenly light

Holy baby from heav'n above you have come to offer us peace and love
Join we now in a song of praise on this happiest day of days!
Mary, rock your little baby Oo, in the stable tonight
Mary, rock your little baby Rock your baby in the heavenly light

Rock your baby tonight Rock your baby tonight
Rock your baby tonight Rock your baby in the holy light
Mary, rock your little baby, Oo.. in the stable to night
Mary, rock your little baby, Rock your baby in the heavenly light,
I said, 'Rock your baby in the heav-en-ly….
O Mary, rock your baby tonight.

ALTO
Mary, Mary rock your little baby Rock your child in the stable tonight
Mary, Mary, rock your little baby, Rock your baby in the heavenly light

Angels join in the lullaby as a star shines bright in the winter sky
Mary, Mary rock your little baby Rock your child in the stable tonight
Mary, Mary, rock your little baby Rock your baby in the heavenly light
Holy baby from heav'n above you have come to offer us peace and love
Join we now in a song of praise on this happiest day of days!

Mary, Mary rock your little baby Rock your child in the stable tonight
Mary, Mary, rock your little baby, Rock your baby in the heavenly light

Rock your baby tonight O Mary, rock your baby tonight
Rock your baby tonight Rock your baby in the holy light
Mary, Mary, rock your little baby, Rock your child in the stable to night
Mary, Mary, rock your little baby, Rock your baby in the heavenly light,
I said, 'Rock your baby in the heav-en- ly…
O Mary, rock your baby tonight.

TENOR
Mary, Mary rock your little baby Rock your child in the stable tonight
Mary, Mary, rock your little baby, Rock your baby in the heavenly light

Angels join in the lullaby as a star shines bright in the winter sky
Mary, Mary rock your little baby Rock your child in the stable tonight
Mary, Mary, rock your little baby Rock your baby in the heavenly light

Oo.. Join we now in a song of praise on this happiest day of days!

Mary, Mary rock your little baby Rock your child in the stable tonight
Mary, Mary, rock your little baby Rock your baby in the heavenly light

O Mary rock your baby tonight Rock your baby tonight
O Mary rock your baby tonight Rock your baby in the holy light
Mary, Mary, rock your little baby, Rock your child in the stable tonight
Mary, Mary, rock your little baby, Rock your baby in the heavenly light,
I said, 'Rock your baby in the heav-en-ly….
O Mary, rock your baby tonight

BASS
O Mary rock, rock, rock your little baby Rock your child in the stable tonight
O Mary rock, rock, rock your little baby Rock your baby in the heavenly light
O Mary rock, rock, rock your little baby Rock your child in the stable tonight
O Mary rock, rock, rock your little baby Rock your baby in the heavenly light
O Mary rock, rock, rock your little baby Rock your child in the stable tonight
O Mary rock, rock, rock your little baby Rock your baby in the heavenly light

Shepherds travel from far and wide just to kneel at the baby's side
O Mary rock, rock, rock your little baby Rock your child in the stable tonight
O Mary rock, rock, rock your little baby Rock your baby in the heavenly light

Oo.. Join now in a song of praise on this happiest day of days!
O Mary rock, rock, rock your little baby Rock your child in the stable tonight
O Mary rock, rock, rock your little baby Rock your baby in the heavenly light

O Mary rock your baby tonight O Mary rock your baby tonight
O Mary rock your baby tonight Rock your baby in the holy light
O Mary, rock, rock, rock your little baby, Rock your child in the stable tonight
O Mary rock, rock, rock your little baby, Rock your baby in the heavenly light,
I said, 'Rock your baby in the heavenly light

Post Comment

Tuesday, November 4, 2014

பாமாலை 363 - நான் உம்மை முழுமனதால் (Stella)

பாமாலை 363 - நான் உம்மை முழுமனதால் 
Thee will I love, my strength
Tune : Stella

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நான் உம்மை முழுமனதால்
சிநேகிப்பேன் என் இயேசுவே
நான் உம்மை நித்தம் வாஞ்சையால்
பின்பற்றுவேன் என் ஜீவனே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.

2.    நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்
என் உத்தம சிநேகிதர்
நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்
நீரே என் மீட்பரானவர்
நான் உம்மை முன் சேராததே
நிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே.

3.    உம்மைப் பற்றாமல் வீணணாய்
பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்
பரத்தை விட்டுத் தூரமாய்
இகத்தை அன்பாய்ப் பற்றினேன்
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.

4.    நான் உம்மைச் சுக வாழ்விலும்
சிநேகிப்பேன் என் கர்த்தரே
நான் உம்மைத் துன்பநாளிலும்
நேசிப்பேன் எந்தன் இயேசுவே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.

Post Comment

Sunday, November 2, 2014

பாமாலை 81 - வருஷப் பிறப்பாம் இன்று

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. வருஷப் பிறப்பாம் இன்று
புது பக்தியுடனே
தேவரீரிடத்தில் வந்து
வாழ்த்தல் செய்ய இயேசுவே
உந்தன் ஆவியை அளித்து
என்னைப் பலப்படுத்தும்
அடியேனை ஆதரித்து
வழிகாட்டியாய் இரும்

2. இது கிருபை பொழியும்
வருஷம் ஆகட்டுமேன்
என்னில் ஒளி வீசச்செய்யும்
என் அழுக்கை அடியேன்
முழுவதும் கண்டறிந்து
அருவருக்கச் செய்யும்
பாவம் யாவையும் மன்னித்து
நற்குணத்தை அளியும்

3. நீர் என் அழுகையைக் கண்டு
துக்கத்தாலே கலங்கும்
அடியேனைத் தேற்றல் செய்து
திடன் அளித்தருளும்
இந்த புது வருஷத்தில்
பாவத்துக்கும் கேட்டுக்கும்
தப்புவித்து என்னிடத்தில்
கிருபை கூர்ந்தருளும்

4. மாயமற்ற கிறிஸ்தோனாக
இந்த வருஷத்திலே
நான் நடக்கத்தக்கதாக
ஈவளியும் கர்த்தரே
யாவர்மேலும் அன்பின் சிந்தை
வைத்து தெய்வ பக்தியை
எனக்கு ரட்சிப்புண்டாக
காண்பித்திருப்பேனாக

5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
நான் முடிக்க என்னை நீர்
தாங்கி உந்தன் திருக் கையை
என்மேல் வைக்கக்கடவீர்
வருத்தம் வந்தாலும் உம்மை
நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்
மரித்தாலும் பேரின்பத்தை
நான் அடைந்து வாழுவேன்.

Post Comment

Wednesday, October 22, 2014

Anthem - The Light hath shined

The Light hath shined
Christmas Anthem Composed by CALEB SIMPER.


Certain portions of the Audio (individual parts) may sound blank, for they are the places where either the 'Organ' or the 'Soprano Solo' will be played/sung.  So, for better understanding (if you can't read the notations), kindly listen to the Unison with the Organ first.

SATB With Organ
SATB without Organ
Organ only
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


Sheet Music for Choristers (9 Pages)













































Sheet Music for Organist(4 Pages)






The light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah
The Light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah

For unto us is born this day, A Saviour which is Christ the Lord
For unto us is born this day, A Saviour which is Christ the Lord
Is Christ the Lord, is Christ the Lord

The light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah
The Light hath shin-ed upon us, Hallelujah, Hallelujah, Hallelujah

(Soprano OR Tenor Solo)
He shall be great He shall be great,
And shall be called the Son of the Highest
He shall be great, He shall be great,
And shall be called the Son of the Highest
The Son of the Highest.

Blessed is He, blessed is He ; That cometh, that cometh
In the name of the Lord;
Blessed is He, blessed is He ; That cometh, that cometh
In the name of the Lord,
That cometh, that cometh in the name of the Lord

(Tenor and Bass) - And all the ends, the ends of the earth

(Soprano) And all the ends, the ends of the earth
Shall see the salvation, shall see the salvation,
Shall see the salvation of our God,
Shall see the salvation of our God.

Break forth into joy, break forth into joy,
Sing together, sing together,
Break forth into joy,
(Soprano) - Break forth into joy,

(Alto, Tenor and Bass) - Break forth into joy

Sing together together, break forth in to joy. Amen.

Post Comment

Friday, October 17, 2014

மண்ணோர்கள் போற்றிடும் (Christmas Song by Julius Moses)

This song is composed by the legendary Julius Moses and the 4 part harmony has been arranged by John J Selwyn.  This arrangement won the 1st prize in the Tamil Choir category in "Aachi - Sing the Season 2014".

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano











































































மண்ணோர்கள் போற்றிடும்
விண் வேந்தன் நம் இயேசு
ஏழ்மை உருவில் வந்தார்
ஓ..ஓ.. பூமியில் நிலை சமாதானமாகவே
ஓ..ஓ.. மனிதர்மேல் அவர் அன்பு கொண்டு வந்தாரே

1.    மாடடைக் கொட்டிலிலே
முன்பனிக் காலத்திலே
என் நேசர் கந்தைக் கோலமதாய்ப் பிறந்தார்
மேய்ப்பர்கள் கலங்கவே விண் தூதர் உரைக்கவே
பாவங்கள் போக்கிடும் நற்பாலன் அவதரித்தார்.

2.    தீர்க்கர் மூவர் அறிந்தே
பொன் வெள்ளி தூபம் கொண்டே
பாராளும் வேந்தன் பொற்பாதம் போற்ற வந்தார்
ஏரோதும் கலங்கவே ஆயர் தேடவே
விண் வெள்ளி வழிகாட்ட மாமன்னன் அவதரித்தார்

Post Comment

Monday, October 13, 2014

பாமாலை 158 - இதோ உன் நாதர் (Gloucester)

பாமாலை 158 - இதோ உன் நாதர் 
Behold the Master passeth by
Tune : Gloucester

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. இதோ, உன் நாதர் செல்கின்றார்;
உன்னை அழைக்கும் அன்பைப் பார்!
வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்
என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய்

2. துன்பத்தில் உழல்வோனே நீ
மோட்சத்தின் வாழ்வைக் கவனி
பற்றாசை நீக்கி விண்ணைப் பார்            
இதோ, உன் நாதர் செல்கின்றார்!

3. அவ்வழைப்பை இப்பக்தன்தான்
கேட்டே, செல்வத்தை வெறுத்தான்
சீர் இயேசுவின் சிலுவைக்காய்
எல்லாம் எண்ணினான் நஷ்டமாய்.

4. நாடோறும் ‘என்பின் செல்’ என்னும்
அழைப்பு அவன் நெஞ்சிலும்,
உற்சாகத்தோடுழைக்கவே
திட சித்தம் உண்டாக்கிற்றே.

5. நாடோறும் நம்மை நாதர்தாம்
அழைத்தும் தாமதம் ஏனாம்?
ஏன் மோட்ச வாழ்வைத் தள்ளுவோம்?
ஏன் லோகமாயை நாடுவோம்?

6. மத்தேயு பக்தன் போலவும்
எல்லாம் வெறுத்து நாங்களும்
நல் மனதோடு உம்மையே
பின்பற்ற ஏவும், கர்த்தரே.

Post Comment

Wednesday, October 8, 2014

பாமாலை 353 - இயேசுவின் கைகள் காக்க

பாமாலை 353 – இயேசுவின் கைகள் காக்க
(Safe in the arms of Jesus)

’அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். உபா 33:27

முன்னொரு காலத்தில் ஒரு வாலிபனும் ஓர் இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்துத் திருமணம் செய்யத் தீர்மானித்தனர்.  ஆனால் அவர்களது பெற்றோர் இதற்குச் சம்மதம் தர மறுத்தனர்.  அவ்வூருகருக்கில் ஒரு மலையடிவாரத்தில் சிலுவையிலறையப்பட்ட இயேசுவின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  அவ்விருவரும் அச்சிலையினடியில் முழங்காலிட்டு ஜெபித்து வாழ்க்கை ஒப்பந்தம் செய்து, அயல் நாட்டுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.  அநேக ஆண்டுகளுக்குப்பின், அவ்வாலிபன் அப்பெண்ணைக் கைவிட்டு, வேறு இடத்துக்குச் சென்றுவிட்டான்.  தனியாக விடப்பட்ட அவள், யாதொரு ஆதரவுமின்றித் தவித்து, மறுபடியும் மலையடிவாரத்திலிருந்த அச்சிலையினடியில் முழங்காலிட்டுத் தன் துயரத்தை ஆண்டவரிடம் கூறினாள்.  உடனே சிலையின் வலதுகரம் ஆணியிலிருந்து கழன்று, அவளை அணைத்து மார்போடு சேர்த்துக்கொண்டது.  அதுமுதல் சிலையின் வலதுகரம் அந்நிலையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது ஒரு கதையாயிருந்தாலும், ஆதரவற்றுத் தவிப்பவர்களுக்கு ஆண்டவரின் கரங்களே ஆதரவு என்னும் உண்மையைப் புகட்டுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்துகொண்டிருந்த ஒரு விழாவில், நகரவாசிகளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.  திடீரென அங்கு ஒரு கலவரம் ஏற்பட, எல்லோரும் பயமடைந்து அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர்.  திகிலடைந்து ஓடிவந்த ஒரு குழந்தையை அதின் தாயார் கையிலெடுத்து, மார்போடு சேர்த்தணைத்து, ‘அம்மாவின் கையிலிருப்பதால் பயப்படாதே’ என தைரியமூட்டினாள். 
Fanny Crosby
இதைக்கண்ட ஓர் அம்மையார் இச்சம்பவத்தைப் ஃபானி கிராஸ்பி
(Fanny Crosby) என்னும் தனது நண்பருக்குச் சொன்னார்கள்.  இளம் பிராயத்திலிருந்தே கண் பார்வையை இழந்த கிராஸ்பி அம்மையார், கிறிஸ்தவப் பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.  இச்சம்பவத்தைக் கேட்டவுடன் அந்த அம்மையார் இயேசுவின் கரங்களில் நாம் இருக்கும்போது எவ்வித ஆபத்துகளிலும் பத்திரமாகக் காக்கப்படுவோம் என்பதை உணர்ந்து, இதை ஒரு பாடலாக வெளியிட ஆவல் கொண்டார்.  சில தினங்களுக்குப் பின் அவரது நண்பரான வில்லியம் டோன் போதகர் (William Howard Doane), சின்சினாட்டி நகரில் ஓய்வுநாட்பாடசாலை சம்பந்தமான ஒரு மாநாட்டுக்குச் செல்லும் பாதையில் ஃபானி கிராஸ்பி அம்மையாரைச் சந்தித்தார்.  அம்மாநாட்டில் பாடப்படுவதற்காகப் புதிதாக அவர் எழுதியிருந்த ராகத்துக்கேற்ற ஒரு பாடலை எழுதித்தருமாறு அம்மையாரைக் கேட்டார். 
William Howard Doane
போதகர் புகைவண்டி ஏறுவதற்கு 35 நிமிடங்களே இருந்தன. உடனே அம்மையார் அவரைப் பியானோவில் ராகத்தை வாசிக்கச் செய்து ‘இந்த ராகம் ‘இயேசுவின் கைகள் காக்க, மார்பினில் சாருவேன்’ என்னும் பாடலை என் மனதில் பிறப்பிக்கிறது’ எனக்கூறி, சுமார் 25 நிமிடங்களுக்குள் இப்பாடலை எழுதி முடித்துப் போதகரிடம் கொடுத்தார்.  அவரும் அதை ஒருமுறை பாடிப்பார்த்து வெகுவாகப் பாராட்டி, குறிப்பிட்ட நேரத்தில் சின்சினாட்டி நகரையடைந்தார்.  இம்மாநாட்டில்தான் இப்பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது.  இப்போது இப்பாடல் கிறிஸ்தவ உலகமெங்கும் தமக்கு அருமையானவர்களை இழந்து துக்கக்கடலில் மூழ்கியிருப்பவர்களுக்கு ஆறுதலும், மனசாந்தியும், நம்பிக்கையும் அளித்து வருகிறது.

ஃபானி கிராஸ்பி அம்மையார் 1820ம் ஆண்டு மார்ச் மாதம், 24ம் தேதி, நியூயார்க் நகரில் பிறந்தார்.  ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போதே தவறான மருத்துவ சிகிச்சையால் கண் பார்வையை இழந்தார்.  பன்னிரெண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரில் பார்வை இழந்தோர் பள்ளியில் பயின்று 1847 முதல் 1858 வரை அப்பள்ளியிலேயே ஆசிரியையாயிருந்தார்.  1858ல் அவர் அலக்ஸாண்டர் ஆல்ஸ்டைன் என்னும் பார்வை இழந்த சங்கீத நிபுணரை மணந்தார்.  இளம் பிராயத்திலேயே கவித்திறமையுடையவராயிருந்து, பல செய்யுள்களும் பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எட்டு வயதாயிருக்கையில் தனது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் முதலிடம் பெற்றவர் இவரே.  தமது வாழ்க்கையில் எட்டாயிரத்துக்கதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.  இவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள், ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப்புத்தகத்தில் காணலாம்.  ‘போற்றும் போற்றும் புண்ணியநாதரைப் போற்றும்’ (பாமாலை 267), ‘இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்’ (பாமாலை 333) என்னும் பாடல்களும் இவர் எழுதியவையே.

ஃபானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 12ம் தேதி தமது 95ஆம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கி விடும்

இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்

2.    இயேசுவின் கைகள் காக்க
பாழ்லோகின் கவலை
சோதனை பாவக்கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் தோஷம்
விரைவில் தீருமே.

3.    இயேசு என் இன்பக் கோட்டை
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன் நீரே
நித்திய கன்மலை,
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட.

Safe in the Arms of Jesus

Post Comment