Friday, February 28, 2014

பாமாலை 102 - இரத்தம் காயம் குத்தும் (Passion Chorale)

பாமாலை 102 – இரத்தம் காயம் குத்தும்
(O sacred head sore wounded)

‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்’. ஏசாயா 53 : 5

     நமதாண்டவர் கல்வாரிச் சிலுவையில் தொங்கும்போது, அவர் பட்ட
Bernard of Clairvaux
உடல் வேதனையும், வரப்போகும் மரண வேதனையும் அவரை அதிகமாக வியாகுலப்படுத்தின.  திருடருக்கு கொலைபாதகருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த சிலுவையில், இரு பாதகர் நடுவில் தொங்கிய அவமானமும், சிலுவையைச் சுற்றி நின்ற மக்களின் இகழ்ச்சியும் ஓரளவு அவரை வேதனைப்படுத்தின.  ஆயினும் அவர் தலையிலிருந்த முள்முடியும், கைகளிலும், கால்களிலும் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளும், விலாவில் ஈட்டியால் குத்துண்ட காயமும் அவருக்குக் கொடுத்த வேதனையை விட அவருக்கு அதிக வேதனையைக் கொடுத்தது, பாவமற்ற அவர் சுமந்த நமது அகோர பாவச்சுமையே.  அவரது பாடுகளையும், மரணத்தையும் சிந்திக்கும்போது, இவ்வித அற்புதமான இரட்சகருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்களென்பதை உணருவோம்.  முள் முடியுடன் சிலுவையில் தொங்கியிருக்கவேண்டியது நாமே.  ஆகையால் நமது இடத்தை எடுத்துக்கொண்ட இரட்சகர் முன் நன்றியுடன் தாழ் பணிவோமாக.

     பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதியில், கிளர்வோ என்னுமிடத்தில் ஒரு கிறிஸ்தவத் துறவிகள் மடம் இருந்தது.  இதில் பெர்னார்டு  (Bernard of Clairvaux) என்ற ஒரு துறவி வசித்துவந்தார்.  அவர் தமது தினசரி அலுவல்கள் முடிந்தபின் ஒரு தனி அறைக்குச் சென்று, முள் முடியுடன் தொங்கிய ஆண்டவரின் பாடுகளையும் சிலுவையில் அவர் தொங்கிய காட்சியையும் தியானித்துக்கொண்டிருந்தார்.  ஓராண்டில், லெந்து நாட்களில் ஆண்டவரின் பாடுகளை மிகவும் ஆழ்ந்து தியானித்து, வேதனை ஞாயிறு (Passion Sunday) நெருங்கியதால், அத்தினத்தன்று பாடுவதற்காக ஒரு பாடலை எழுத விரும்பி, ‘இரத்தம் காயம் குத்தும்’ என்னும் பாடலை லத்தீன் மொழியில் எழுதினார். முதல் முதலாக அவ்வாண்டு வேதனை ஞாயிறு தினத்தன்றுதான் இப்பாடல் கிளர்வோ துறவிமடத்தில் பாடப்பட்டது.

Paul Gerhardt
     இப்பாடல் பல நூற்றாண்டுகளாக லத்தீன் மொழியிலேயே ரோமன் கத்தோலிக்கச் சபைகளில் மட்டும் பாடப்பட்டு வந்தது. 1656ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் உயிட்டன்பர்க் நகரில் லுத்தரன் சபைப் போதகராயிருந்த பால் கெர்ஹார்ட் (Paul Gerhardt) என்பவர் ஜெர்மன் மொழியில் இப்பாடலை மொழிபெயர்த்தார்.  இப்பாடலுக்கு உபயோகப்படும், ‘Passion Chorale’ என்னும் அழகிய ராகம், ஹாஸ்லர் (Hans Leo Hassler) என்பவரால் 1601ல் எழுதப்பட்டு, செபாஸ்டியன் பாக் (Johann Sebastian Bach) என்னும் சங்கீத நிபுணரால் இசைப்படுத்தப்பட்டது. 
Hans Leo Hassler
1830ல் ஆங்கிலத் திருச்சபையில் போதகராயிருந்த ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் (James Waddel Alexander), இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபின், உலகத்தில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, லெந்து காலப் பாடலாகப் பாடப்படுகிறது.

     இப்பாடலை எழுதிய தூயர் பெர்னார்டு 1091ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில், பாண்டெயின் என்னுமிடத்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் சிறந்த தெய்வபக்தியுள்ளவர்கள்.  ஒரு பெண் உட்பட அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உண்டு.  இவ்வெழுவரையும் கடவுள் ஊழியத்திற்கென்று பெற்றோர் தத்தம் செய்தனர். 
Johann Sebastian Bach
இளமைக் கல்வி முடித்து பெர்னார்டு வாலிபப்பிராயமடைந்ததும், திருமறை விளக்கங்களை படித்து, கடவுள் ஊழியத்திற்காகத் தம்மை ஆயத்தம் செய்தார்.  தமது வாழ்க்கையைத் துறவறத்திலேயே கழிக்கத் தீர்மானித்து, முதலில் சிட்டே என்னுமிடத்தில் தூய ஸ்தேவான் என்பவர் நடத்திய துறவி மடத்தைச் சேர்ந்து, தமது துறவி வாழ்கையை ஆரம்பித்தார்.  தூயர் ஸ்தேவானுடைய தூய வாழ்க்கை பெர்னார்டுக்குச் சிறந்த முன்மாதிரியாயிருந்தது.  இம்மடத்தில் இடவசதி குறைவாயிருந்ததால், 1116ல் கிளர்வோ என்னுமிடத்தில் ஒரு பெரிய துறவி மடம் கட்டப்பட்டது.
James Waddel Alexander
இதைப் பராமரிக்கும் பொறுப்பை தூயர் பெர்னார்டு ஏற்றுக்கொண்டார்.  இம்மடத்தில் பெர்னார்டின் சில சகோதரர் உட்பட பன்னிரண்டு துறவிகளே ஆரம்பத்தில் வசித்தனர்.  ஒவ்வொரு துறவியும் தனி அறைகளில் தங்கி, வேதவாசிப்பிலும், தியானத்திலும், ஜெபத்திலும் தரித்திருந்தார்.  தூயர் பெர்னார்டு மடத்தில் சேர்ந்து மூன்றாண்டுகளுக்குள், மடம் மிகவும் முன்னேற்றமடைந்து, ஏராளமான பேர் மடத்தில் சேர்ந்தனர். அவரது பணியைப் பாராட்டி, அவருக்குப் பல பரிசுகளும் உயர்பதவிகளும் வழங்கப்பட்டன.  ஆனால் அவற்றையெல்லாம் அவர் மறுத்து, தமது வாழ்க்கை முழுவதையும் துறவறத்திலேயே கழித்து, 1153ம் ஆண்டு தமது 62ம் வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            இரத்தம் காயம் குத்தும்
நிறைந்து, நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும்
சூடுண்ட சிரசே,
முன் கன மேன்மை கொண்ட
நீ லச்சை காண்பானேன்?
ஐயோ, வதைந்து நொந்த
உன் முன் பணிகிறேன்.

2.    நீர் பட்ட வாதை யாவும்
என் பாவப் பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும்
என் குற்றம் கர்த்தரே
இதோ, நான் என்றுஞ் சாக
நேரஸ்தன் என்கிறேன்;
ஆனாலும் நீர் அன்பாக
என்னைக் கண்ணோக்குமேன்.

3.    நீர் என்னை உமதாடாய்
அறியும் மேய்ப்பரே;
முன் ஜீவன் ஊறும் ஆறாய்
என் தாகம் தீர்த்தீரே;
நீர் என்னைப் போதிப்பிக்க
அமிர்தம் உண்டேனே;
நீர் தேற்றரவளிக்க
பேரின்பமாயிற்றே.

4.    உம்மண்டை இங்கே நிற்பேன்
என்மேல் இரங்குமேன்;
விண்ணப்பத்தில் தரிப்பேன்
என் கர்த்தரை விடேன்;
இதோ, நான் உம்மைப் பற்றி
கண்ணீர் விட்டண்டினேன்;
மரிக்கும் உம்மைக் கட்டி
அணைத்துக் கொள்ளுவேன்.

5.    என் ஏழை மனதுக்கு
நீர் பாடுபட்டதே
மகா சந்தோஷத்துக்கு
பலிக்கும், மீட்பரே
என் ஜீவனே, நான் கூடி
இச்சிலுவையிலே
உம்மோடென் கண்ணை மூடி
மரித்தால் நன்மையே.

6.    நான் உம்மைத் தாழ்மையாக
வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக
துதிப்பேன், இயேசுவே
நான் உம்மில் ஊன்றி நிற்க
சகாயராயிரும்;
நான் உம்மிலே மரிக்க
கடாட்சித்தருளும்.

7.    என் மூச்சொடுங்கும் அந்த
கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த
ரூபாகக் காண்பியும்;
அப்போ நான் உம்மைப் பார்த்து
கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து,
தூங்குவேன், இயேசுவே.

Oh Sacred Head Now Wounded

Post Comment

பாமாலை 94 - தயாள இயேசு தேவரீர் (Drostane)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            தயாள இயேசு தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.

2.    தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.

3.    விண்ணோர்கள் நோக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோக்ஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.

4.    வெம் போர் முடிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.

5.    தாழ்வாய் மரிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
நோ தாங்கத் தலை சாயுமே!
பின் மேன்மை பெற்று ஆளுமே.

Post Comment

Thursday, February 27, 2014

பாமாலை 89 - என் நெஞ்சம் நொந்து (St. Peter)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.   என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே,
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.

2.    தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.

3.    என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.

4.    என் மீட்பர் கரத்தால் சுகம்,
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.

5.    அக்கரம் நீட்டும், இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.

Post Comment

Wednesday, February 26, 2014

பாமாலை 88 - இந்த அருள் காலத்தில் (St. Philip)

இந்த அருள் காலத்தில்
Lord in this Thy Mercy's day
Tune : St. Philip

 Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

 

1.            இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்.
 
2.    தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே.
 
3.    மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே.
 
4.    உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்.
 
5.    சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்
விட்டதாலும், தேவரீர்
எங்கள் மேல் இரங்குவீர்.
 
6.    நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும், இயேசுவே. ஆமேன்.

Post Comment

Tuesday, February 25, 2014

பாமாலை 329 - அருள் நாதா நம்பி (Bullinger)

பாமாலை 329 – அருள்நாதா நம்பி வந்தேன்
(I am trusting thee)

என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை’. யோவான் 6: 37

Frances Ridley Havergal
ஆங்கிலேயக் கவிஞர் பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் (Frances Ridley Havergal), அம்மையார் அவர்களின் குழந்தை உள்ளத்தின் அழகிய வெளிப்பாடே இப்பாடலாகும்.  இவர் ‘பாமாலைகளின் இனிமை மிக்க குரல்’ என்று புகழாரம் பெற்றவர். உயர்ந்த கல்வியும் நாகரீகமும்மிக்கவராக இருந்தாலும், ஹேவர்கல் ஆண்டவர் மீது எளிமையான, குழந்தையைப்போன்ற விசுவாசமும், திடநம்பிக்கையும் எப்போதும் கொண்டிருந்தார்.  அர்ப்பணத்தை மையமாகக்கொண்டு பாடல்கள் எழுதிய இவரின் வாழ்வு, ஆவிக்குரிய பரிசுத்தம் நிறைந்ததாக விளங்கியது.  முதலாவது, ஜெபிக்காமல் இவர் ஒரு வரியைக்கூட இவர் எழுதியதில்லை.

     ’எந்தன் ஜீவன் இயேசுவே’ போன்ற பல பிரபல பாமாலைகளை ஹேவர்கல் இயற்றியிருந்தாலும், இப்பாடலே அவர் மிகவும் விரும்பிய படைப்பாகும்.  அவர் மரிக்கும்போது அவரது சொந்த வேத புத்தகத்தில் இப்பாடலின் பிரதி ஒன்றையே வைத்திருந்தார்.  இப்பாடலை அவர் 1874ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் டெஸ்ஸாசிலுள்ள ஒர்மாண்டில் எழுதினார்.  இப்பதிவில் இருக்கும் “Bullinger” எனும் ராகத்தை Ethelbert W. Bullinger என்பவர் அமைத்துள்ளார்.

Ethelbert W. Bullinger
     பிரான்ஸஸ் ஹாவர்கல் அம்மையார் 1836ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் ஆஸ்ட்லே என்னும் ஊரில் ஒரு பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு குருவானவர்.  நான்கு வயதாயிருக்கும்போதே, அம்மையார் வேத புத்தகத்தை வாசிக்கப் பழகியிருந்தார்.  பின்னர், புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் மனப்பாடம் பண்ணியிருந்தார்.  இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் கல்வி பயின்று ஆங்கிலம் தவிர ஐந்து பிறமொழிகள் கற்றார்.  சங்கீதத்தில் அதிகத் திறமை பெற்று, இனிமையாகப் பாடவும், ராகங்கள் எழுதவும், சங்கீதக் கருவிகள் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.  மேலும், ஓய்வுநாட்பள்ளியில் போதிப்பதிலும், வாசிக்கத் தெரியாத மக்களுக்கு வேதத்தை வாசித்துக் கொடுப்பதிலும், ஏழை மக்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார்.  ஹாவர்கல் அம்மையார் தன் குறுகிய வாழ்க்கையில் அநேக பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில் சில:

·         ’நாதா உம் வார்த்தை கூறவே’ – பாமாலை 201.
·         ‘எந்தன் ஜீவன் இயேசுவே’ – பாமாலை 302
·         நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் - பாமாலை 349
·         தெய்வ சமாதான இன்ப நதியே’ – பாமாலை 357

அவர், 1879ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதி வேல்ஸ் நாட்டில் சுவான்ஸீ (Swansea, Wales) என்னுமிடத்தில் தமது 42ம் வயதில் காலமானார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.

2.    தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

3.    தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

4.    துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

5.    சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

6.    இயேசு நாதா, நம்பி வந்தேன்
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

Post Comment

Sunday, February 23, 2014

பாமாலை 293 - நிர்ப்பந்தமான பாவியாய் (Stella)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.    நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2.    ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்’
ஆ ஸ்வாமி, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3.    என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4.    என் நெஞ்சின் திகில் தணித்து,
என் மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

Post Comment

Wednesday, February 19, 2014

பாமாலை 282 - துக்க பாரத்தால் (Stephanos)

பாமாலை 282 – துக்க பாரத்தால் இளைத்து
(Art thou weary, art thou languid)

‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’. மத்தேயு 11:28

தம்மிடத்தில் உண்மையாய் மனந்திரும்புகிற யாவருக்கும் நமது இரட்சகராகிய கிறிஸ்து திருவுளம் பற்றுகிற ஆறுதலான, வார்த்தைகளில் ஒன்று, மேற்கூறிய வசனமாகும். மனித வாழ்க்கையில் நாம் இளைத்து, நொந்துபோகிற சந்தர்ப்பங்களுண்டு.  அந்நிலைகளில் ஆறுதலும் தேறுதலும் அளிப்பேன் என ஆண்டவர் அழைக்கிறார். ஆயினும், இப்பாடலின் பின்கவிகளில், அவர் தம் அன்பின் ரூபகாரமாகத் தமது கை, விலாவிலுள்ள காயங்களைக் காண்பிக்கிறார். அவரை அண்டினோருக்குக் கஷ்டம், துன்பம், கண்ணீர் யாவும் இம்மையில் நாம் அனுபவிக்க நேர்ந்தாலும் சாவின்கூரை மாற்ற அவர் வல்லவராயிருக்கிறார்.

John of Damascus
இப்பாடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், எட்டாம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது.  ஆதி சபைகளிலும், தற்காலத்தில் ஆங்கிலத் திருச்சபை, ரோம சபை, கிழக்கத்திய சபை, முதலிய சபைகளில் உபயோகிக்கப்படும் ஞானோபதேச வினாவிடை (Catechism) ரூபத்தில், கேள்வியும் பதிலுமாக இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது.  இதை எழுதியவர் தமஸ்கு நகர யோவான் (John of Damascus) என அழைக்கப்பட்ட பக்தனின் மருமகனான ஸ்தேவான் என்பவர். அவர் பலஸ்தீனா நாட்டில் கீதரோன் பள்ளத்தாக்கிலிருந்த மார்சாபா துறவி மடத்தின் பாடகர் குழு தலைவராயிருந்தார்.  இம்மடம் கிழக்கத்திய திருச்சபையைச் சேர்ந்தது.  இவரது ஓயா உழைப்பினால் அக்காலத்தில் இத்துறவிமடம் ஒரு சிறந்த ஆசிரமமாக மட்டுமல்ல புகழ்பெற்ற பாடல் நிலையமாகவும் விளங்கிற்று.  அவர் எழுதிய ஏராளமான பாடல்களில், ‘துக்கபாரத்தால்’ என்னும் பாடலே மிகச்சிறந்ததாக பாராட்டப்படுகிறது.  காலஞ்சென்ற அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட் என்பவர் இப்பாடலையே மிகப் பிரியமாகப் பாடி வந்தார்.


John M. Neale (1818-1866)
இப்பாடல் நமது ஆலயங்களில் 1862ம் ஆண்டில்தான் முதன்முதலாகப் பாடப்பட்டது.  இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜான் மேசன் நீல் என்னும் ஆங்கிலச் சபை குருவானவர்.  அவர் 1818ம் ஆண்டு லண்டன் மாநகரில் பிறந்தார்.  பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று பக்தி கவிகள் எழுதும் போட்டிகளில் பதினோருமுறை முதல் பரிசு பெற்றார்.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  இருபது மொழிகள் கற்று, பிறமொழிகளிலுள்ள பல நூல்களையும், பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் தாமே பல பாடல்களும் எழுதியுள்ளார்.  ‘துக்க பாரத்தால்’ என்னும் பாடல் அவரது மொழிபெயர்ப்பாயிருந்தாலும், அதின் மிகுதியான பாகம் அவராலேயே எழுதப்பட்டது. 

Stephanos Henry W. Baker
அவரது இறையியல் திறமையைப் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.

இப்பாடலுக்கு, Stephanos Henry W. Baker, என்பவர் எழுதிய ராகத்தையே இன்றளவும் நாம் ஆலயங்களில் பாடி வருகிறோம். 

நமது பாமாலைப் புத்தகத்தில் மூன்றாவது கவியில் ‘துன்பம் வருமே’ என்றும் ஆறாவது கவியில் ‘மாட்டேன் என்பாரே’ என்றும் அச்சிடப்பட்டுள்ளது. இது தவறான அர்த்தத்தைத் தருகிறது.  பாடலின் பொருளை, எழுதப்பட்ட சூழலை, இக்கவிகளின் முந்தின பிந்தின வரிகளை நோக்கினால், ‘துன்பம் வருமோ?’ என்றும் “மாட்டேன் என்பாரோ” என்பவையே சரியான வரிகள். 

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?

2.    ”அன்பின் ரூபகாரமாக
என்ன காண்பித்தார்?”
“அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்”.

3.    ”அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?”
“ரத்தினம் பொன்னாலுமல்ல,
முள்ளினால்”.

4.    ”கண்டுபிடித்தண்டினாலும்
துன்பம் வருமோ!”
“கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.”

5.    ”அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?”
“சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?”

6.    ”பாவியேனை ஏற்றுக்கொள்ள
மாட்டேன் என்பாரோ!”
“விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!”

7.    ”போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?”
“தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்”.

Post Comment

Tuesday, February 18, 2014

பாமாலை 22 - தூய தூய தூயா (NICAEA)

பாமாலை 22 – தூய, தூய, தூயா!
(Holy, Holy, Holy, Lord God Almighty)
Tune: NICAEA

‘இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்’. வெளி 4 : 8

திரித்துவத் திருநாளன்றும், பரிசுத்த ஆவியின் பண்டிகை அன்றும், மற்றும் தெய்வ ஸ்துதிப் பாடலாகவும் பாடப்படும் இப்பாடலானது, மேலே சொல்லப்பட்ட வசனத்தைத் தழுவி எழுதப்பட்டது.  நமது பாட்டுப்புத்தகங்களிலுள்ள பல பாடல்கள் குறிப்பிட்ட திருநாட்களுக்காக எழுதப்பட்டவை.

Reginald Heber
1819ம் ஆண்டு ஹாட்நெட் நகரத்தில் (Hodnet), பரிசுத்த ஆவி பண்டிகைக்கு முந்தின சனிக்கிழமையன்று ரெஜினால்டு ஹீபர் (Reginald Heber) போதகரை, தூய அசாப் ஆலயத்தின் (St. Asaph Cathedral) குருவாக இருந்த அவரது மாமனாரான ஷிப்லீ பண்டிதர், மறுநாள் ஆராதனையில் பாடுவதற்கேற்ற ஒரு பாடல் எழுதித் தரும்படி கேட்டார்.  உடனே ஹீபர் போதகர் அவ்வறையின் ஒருபுறமாகச்சென்று, சில மணி நேரத்தில், இப்பாடலை எழுதிக் கொடுத்தார்.  மறுநாள் ஆராதனையில் இப்பாடல் முதலாவதாகப் பாடப்பட்டது.  இப்போது இது கிறிஸ்தவ உலகின் எல்லாப் பாகங்களிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பாடப்பட்டு வருகிறது.  மற்றெந்தப் பாடலையும்விட இந்தப் பாடல்தான் அதிகமான பாட்டுப்புத்தகங்களில் காணப்படுகிறது.

இதை எழுதிய ரெஜினால்டு ஹீபர் 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் தேதி இங்கிலாந்தில் செஷயர் மாகாணத்தில், மால்பாஸ் (Malpas, Cheshire) என்னுமிடத்தில் பிறந்தார்.  அவரது ஏழாம் வயதுவரை அவரது தந்தையால் கல்வி கற்பிக்கப்பட்டு, பதினேழு வயதுவரை அவரது ஊரிலேயே கிராமப்பள்ளியில் கல்வி கற்றார்.  பின்பு ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகத்தில் பிரேஸ்னாஸ் கல்லூரியில் (Brasenose College) பட்டப்படிப்பு பெற்றார்.  இங்கு கல்வி கற்கையில், கவிகள் எழுதுவதிலும், கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்த திறமை காட்டியதால் அநேக பரிசுகள் பெற்றார்.  கல்லூரியை விட்டபின்னர், 1806, 1807ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தார்.  தாய்நாடு திரும்பியதும் 1807ல் குருப்பட்டம்பெற்று, பதினாறு ஆண்டுகள் ஹாட்நெட் நகரில் திருப்பணியாற்றினார்.  இக்காலத்தில் அவர் அநேக பாடல்கள் எழுதினார்.  ‘தூய, தூய, தூயா’ என்ற பாடல் முன்கூறப்பட்ட சந்தர்ப்பத்தில் 1819ம் ஆண்டு எழுதப்பட்டது.

அவர் போதகராகப் பணியாற்றும்போது, கிறிஸ்துவையறியாத அயல்நாடுகளைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதுண்டு.  இந்தியா தேசப்படத்தைக் கையில் வைத்து, சுவிசேஷத்தைப் போதிப்பதற்காக இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப்பிரயாணம் செய்வதாகக் கனவு கண்டார்.  கடைசியாக 1823ம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா அத்தியட்சராக (Bishop of Calcutta) நியமனம்பெற்று, அவ்வாண்டு அக்டோபர் மாதம், 11ம் தேதி கல்கத்தாவில் வந்திறங்கித் தமது பணியை ஆரம்பித்தார்.  அவர் ஊழியத்தில் அதிகமாகப் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது.  வடஇந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து, இலங்கைக்கும் சென்று, 1825ல் கல்கத்தா திரும்பினார்.  மறு ஆண்டு அவர் சென்னை மாகாணத்தில் பிரயாணம் செய்து, சென்னை, கடலூர், தஞ்சாவூர் சென்று, கடைசியாகத் திருச்சிராப்பள்ளியை அடைந்தார்.  இங்கு பல சபைகளில் திடப்படுத்தல் ஆராதனைகள் நடத்தி, 1826ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி திருச்சிக்கோட்டையிலுள்ள ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை முடித்து, பின்பு குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அதிகக் களைப்பினால் திடீரென மயக்கம் உண்டானதால் தண்ணீர்த்தொட்டியில் விழுந்து காலமானார்.  அவர் கடைசியாக நின்று பிரசங்கம் செய்த மேடையை, திருச்சி கோட்டை ஆலயத்திலுள்ள குருமனையில் இன்றும் காணலாம்.  அவரது ஞாபகார்த்தமாக திருச்சியில் ஒரு முதல்தரக் கல்லூரியும் (Bishop Heber College), இரு உயர்நிலைப் பள்ளிகளும் (Bishop Heber School, Teppakulam Trichy & Bishop Heber School, Puthur Trichy), சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் இல்லமும் (Bishop Heber Hall, Madras Christian College, Chennai) செயல்பட்டு வருகின்றன.

ஹீபர் அத்தியட்சர், அநேக பாடல்கள் எழுதியுள்ளார்.  அவற்றில் பிரபலமான இதர பாடல்கள்:

‘விடியற்காலத்து வெள்ளியே தோன்றி’ – பாமாலை 86
‘ஞானநாதா, வானம் பூமி நீர் படைத்தீர்’ – பாமாலை 37
’விண்கிரீடம் பெறப்போருக்கு’ – பாமாலை 385


Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano









































Music from Songs & Solos






































1.            தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

2.            தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!

3.            தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,

4.            தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

Post Comment

Sunday, February 16, 2014

பாமாலை 18 - எங்கும் நிறைந்த (Rivaulx)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்.

2.    உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்.

3.    கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சிலாக்கியம்
நாங்கள் நிறையச் செய்தாலே.

4.    தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர் நாங்கள் ஏழைகள்.

Post Comment

Friday, February 14, 2014

பாமாலை 9 - பூலோகத்தாரே யாவரும் (Old Hundredth)

பாமாலை 9 – பூலோகத்தாரே யாவரும்
(All people that on earth do dwell)

மிகவும் எளிமையான அதே நேரம் மிக அற்புதமான வடிவத்தில் அமையப்பெற்றிருக்கும் இப்பாடலானது ஆங்கிலத்தில் வெளிவந்த பாடல்களுள் மிகவும் பழமையான பாடலாகும். சங்கீதம் 100ன் பொழிப்புரையாய் அமையப்பெற்றுள்ள பாரம்பரியமிக்க இப்பாடல் இன்றளவும் நம் ஆலய ஆராதனைகளில் பாடப்பட்டு வருவது இதன் சிறப்பாகும்.  சீர்திருத்தத் திருச்சபை உருவான காலகட்டத்தில் பாடல் வடிவில் எழுதப்பட்ட முதல் சங்கீதம் இதுவே.

”பரிசுத்த வேதாகமத்தின் சங்கீதங்களின் அடிப்படையில் எழுதப்படும் பாடல்களே ஆலய ஆராதனைகளுக்கு உகந்தவை” என்ற கருத்தைக் கொண்டிருந்த ஜான் கால்வின் (John Calvin) எனும் பெயர்கொண்ட சீர்திருத்தவாதியின் வழி வந்த கவிஞர்கள் இத்தகைய பாடல்களை அக்காலத்தில் அதிகமாக எழுதி வந்தனர்.  15ம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து எல்லையில் வசித்துவந்த வில்லியம் கேத் (William Kethe) என்பவரால் இப்பாடல் எழுதப்பட்டது.  வில்லியம் முதலில் ஃப்ராங்க்ஃபர்ட் எனும் நகரத்திலும், பின்னர் ஜான் கேல்வின் வசித்த ஜெனீவாவிற்கும் சென்று பரிசுத்த வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும், சங்கீதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடல்களைப் புத்தகமாகத் தொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

1561ம் ஆண்டு ஜெனீவாவில் முதன்முறையாக ‘All people that on earth” பாடல் வெளியிடப்பட்டது.  வில்லியம் கேத் இப்பாடலின் முதல் நான்கு பல்லவிகளை மட்டுமே எழுதினார். ஐந்தாவதாகப் பாடப்படும் ‘விண் மண்ணில் ஆட்சி செய்கிற’ என்கிற Doxology என்றழைக்கப்படும் பல்லவி மெத்தடிஸ்ட் சபை உருவான துவக்கத்தில் ’கடவுள் துதி’யாக இணைக்கப்பட்டு பாடப்பட்டது.  பெருவெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின்பின்னரும் இந்த ஐந்தாம் பல்லவி, தம்மைப் பாதுகாத்தக் கடவுளுக்கு நன்றி சொல்லும் பாடலாகப் பாடப்பட்டது.  இச்சரணத்தை தாமஸ் கென் (Thomas Ken) (1637-1711) என்பவர் எழுதினார்.

All people that on earth” பாடலின் இரண்டாவது பல்லவியின் மூன்றாவது வரியில் வரும் “We are his folk” என்பதைக் குறித்த ஒரு சுவாரசியத் தகவலை Ian Bradley எழுதியுள்ள ‘Book of Hymns” எனும் புத்தகத்தில் காண நேரிட்டது.  1561ல் இப்பாடல் வெளியிடப்பட்ட பின்னர் அநேக வருடங்களுக்கு இந்த மூன்றாவது வரி, “We are his flock” என்றே பாடப்பட்டு வந்தது. இதன் காரணம் முதன்முதலில் இந்தப்பாடல் அச்சிடப்பட்டபோது “folk” எனும் வார்த்தை பழைய ஆங்கில Spelling வழக்கத்தின்படி “folck” என்று அச்சிடப்பட்டது.

Flock” எனும் வார்த்தையே “Folck” என்று Spelling Mistake’உடன் தவறாக அச்சிடப்பட்டது என்ற ஒரு எண்ணத்தாலும், சங்கீதம் 100:3ம் வசனத்தில் வரும் ‘அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்’ என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ‘We are his flock” என்று எழுதப்பட்டுள்ளது என்ற எண்ணிய காரணத்தாலும், இப்பல்லவியின் மூன்றாவது வரி Flock என்ற வார்த்தையுடனேயே அச்சிடப்பட்டுத் திருச்சபையினர் பாடிவந்தனர்.  ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளாக அவ்வார்த்தையை Flock என்றே திருச்சபையினர் பாடிவந்தனர். அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Ancient and Modern’ பாடல் புத்தகத்தில், இப்படி ‘flock’ என்று தவறாகப் பாடப்பட்டு வந்த வார்த்தை ‘Folk” என்ற திருத்தத்துடன் வெளியிடப்பட்டது.

லூயி பர்காய்ஸ் (Louis Bourgeois) (1510-1560) என்பவர் இப்பாடல் பாடப்படும் Old Hundredth” எனும் ராகத்தை அமைத்துள்ளார்.


பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns by Ian Bradley

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.

2.    பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல அவர் சிஷ்டித்தார்
நாம் ஜனம், அவர் ராஜனே
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3.    கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதி செய்யுங்கள்

4.    கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே

5.    விண் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்.

All people that on Earth do dwell

Post Comment