Wednesday, April 16, 2014

பாமாலை 345 - சேதம் அற (Batty)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.   சேதம் அற, யாவும் வர
கர்த்தர் ஆதரிக்கிறார்;
காற்றடித்தும், கொந்தளித்தும்
இயேசுவை நீ பற்றப்பார்.

2.    இயேசு பாரார், அவர் காரார்
தூங்குவார் என்றெண்ணாதே
கலங்காதே, தவிக்காதே
நம்பினோனை விடாரே.

3.    கண்மூடாத உறங்காத
உன் கர்த்தாவைப் பற்றி, நீ
அவர்தாமே, காப்பாராமே
என்று அவரைப் பணி.

4.    உன் விசாரம் மா விஸ்தாரம்
ஆகிலும் கர்த்தாவுக்கு
நீ கீழ்ப்பட்டு, கிலேசமற்று
அவருக்குக் காத்திரு.

5.    தெய்வ கைக்கும் வல்லமைக்கும்
சகலமும் கூடாதோ?
எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும்
அவரால் அறும் அல்லோ

6.    சீரில்லாத உன் ஆகாத
மனதுன்னை ஆள்வது
நல்லதல்ல, அதற்கல்ல
கர்த்தருக்குக் கீழ்ப்படு.

7.    கர்த்தர் தந்த உன்மேல் வந்த
பாரத்தைச் சுமந்திரு
நீ சலித்தால், நீ பின்னிட்டால்,
குற்றம் பெரிதாகுது.

8.    ஆமேன், நித்தம் தெய்வ சித்தம்
செய்யப்பட்ட யாவையும்
நீர் குறித்து, நீர் கற்பித்து,
நீர் நடத்தியருளும்.


Post Comment

பாமாலை 194 - தூய பந்தி சேர்ந்த

பாமாலை 194 - தூய பந்தி சேர்ந்த கைகள்
(Strengthen for Service Lord)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.

2. ”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.

3. தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்.

Post Comment

Tuesday, April 15, 2014

பாமாலை 126 - இன்று கிறிஸ்து எழுந்தார்

பாமாலை 126 – இன்று கிறிஸ்து எழுந்தார்
(Jesus Christ is risen today)

Charles Wesley
லண்டன் நகரில் வசித்து வந்த சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர் அங்கே உள்ள ஆல்டர்ஸ்கேட் (Aldersgate) வீதியில் நடந்த ஒரு ஆவிக்குரிய கூட்டத்தில் வேண்டாவெறுப்பாகக் கலந்துகொள்ள நேரிட்டது.  அங்கே கொடுக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அவருக்கு ரட்சிப்பின் அனுபவம் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் நிச்சயம் பெற்றவராய், ஆண்டவருக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

லண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள் தங்கள் முதல் ஆலய ஆராதனையை ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர்.  சார்ல்ஸ் வெஸ்லியின் ஆல்டெர்ஸ்கேட் ரட்சிப்பு அனுபவத்திற்குப் பின் ஓராண்டுக்குள்ளாகவே, 1739ல் இவ்வாலயம் செயல்படத்துவங்கியது.  இவ்வாலயத்தின் முதல் ஆராதனைக்கென்று சிறப்புப்பாடலாக சார்ல்ஸ் ’இன்று கிறிஸ்து எழுந்தார்’ எனும் இப்பாடலை எழுதினார்.

இந்த இரும்பு ஆலை ஆலயத்தில் வெஸ்லியினர் கூடிய நாட்களில், சார்ல்ஸ் பல புதுப்பாடல்களை எழுத அனைவரும் அவ்வாராதனைகளில் உற்சாகமாகப் பாடினார்கள்.  இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஒரு பாடல் புத்தகமாக ‘இரும்பு ஆலைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்தது.  இப்புத்தகத்தில் இப்பாடலும் ‘உயிர்த்தெழுந்த நாள் பண்டிகைப் பாடல்’ என்ற தலைப்புடன் சேர்க்கப்பட்டது.  அதில் நான்கு வரிச் சரணங்கள் இருந்தன.

பதினேழாம் நூற்றாண்டில் சார்ல்ஸ் வெஸ்லி இப்பாடலை எழுதினபோது இதில் வரிகளுக்கு இடையில் வரும், ‘அல்லேலூயா’ என்ற வார்த்தை இல்லை.  ஆனால், பின்னர் வெளிவந்த ஒரு பாடல் தொகுப்பில், அதின் நூலாசிரியர், உற்சாக தொனியோடு கர்த்தரைத் துதித்துப் பாட இதைச் சேர்த்தார்.

இந்த பாடலுக்கு ‘ஈஸ்டர் பாடல்’ (Easter hymn) என்ற ராகம் இணைக்கப்பட்டது.  இதை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.

சார்ல்ஸ் வெஸ்லி எழுதிய மற்றொரு பண்டிகைப்பாடல் ‘கேள் ஜென்மித்த ராயர்க்கே’ என்ற பாடலாகும்.  இப்பாடலின் இசையும், நாம் தூதருடன் சேர்ந்து கெம்பீரித்துப் பாடும் தொனியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

தகவல்கள் நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’, அமைதி நேர ஊழியங்கள், சென்னை 42.
Unison
\
Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            இன்று கிறிஸ்து எழுந்தார்
அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்;
அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர்
அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர்
அல்லேலூயா!

2.    ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்
அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்
அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;
அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே,
அல்லேலூயா!

3.    பாடநுபவித்தவர்,
அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர்;
அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்;
அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார்
அல்லேலூயா!

Jesus Christ is risen today



Post Comment

Monday, April 14, 2014

பாமாலை 123 - அல்லேலூயா இப்போது போர் (Victory)

பாமாலை 123 - அல்லேலூயா இப்போது போர் 
Alleluya! The strife is o'er
Tune : Victory


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

1.            இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே
அல்லேலூயா!

2.    கொடூர சாவை மேற்கொண்டார்
பாதாள சேனையை வென்றார்
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்
அல்லேலூயா!

3.    இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே!
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4.    எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்
அல்லேலூயா!

Post Comment

Wednesday, April 9, 2014

பாமாலை 113 - ரட்சகரான இயேசுவே

 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. ரட்சகரான இயேசுவே,
எங்களை மீட்க நீர்
சுகந்த பலியாகவே
ஜீவனைக் கொடுத்தீர்.

2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை
கட்டோடே நீக்கிடும்;
இப்போது பாவ மன்னிப்பை
எல்லார்க்கும் ஈந்திடும்.

3. பாவத்தை நாசமாக்கவே
கால் காயப்பட்டது
கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே
கை நீட்டப்பட்டது.

4. செந்நீர் நிறைந்த காயங்கள்
சுமந்த கர்த்தனே
என்னால் விளைந்த பாவங்கள்
எல்லாம் அகற்றுமே.

5. உமது வாக்கை ரூபிக்க
ரத்தத்தால் என்னையும்
கழுவி, உம்மைச் சேவிக்க
கிருபை அளியும்.

Post Comment

Wednesday, April 2, 2014

பாமாலை 314 - வாழ்க சிலுவையே வாழ்க (St. Oswald)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. வாழ்க, சிலுவையே; வாழ்க!
பாரமற்ற பாரமே
உன்னை முழுமனதார
தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே.

2. இந்த நிந்தை லச்சை அல்ல,
இது வெட்கம் அல்லவே;
ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
நன்மைக்காக வருதே.

3. உலகத்தின் ஜோதியான
இயேசு தாமும் நிந்தைக்கே
ஏதுவாகி, ஈனமான
சிலுவையில் மாண்டாரே.

4. சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம்;
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்.

5. நேசர் தயவாய் நம்மோடு 
சொல்லும் ஒரு வார்த்தையே,
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப் போகச் செய்யுமே.

6. சாகும்போது, திறவுண்ட
வானத்தையும், அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே.

7. வாழ்க, சிலுவையே! வாழ்க;
மோட்சத்தின் முன் தூதனே;
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே! 

Post Comment