Tuesday, July 7, 2015

ஜோதி தோன்றும் (In the sweet by and by)

ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
(In the sweet by and by)

’நாளடைவில் இன்பமாக முடியும்”

‘ஒரு நல்ல பாடலுக்கு இது ஒரு அருமையான தலைப்பாக  விளங்குமல்லவா?”

இரு நண்பர்களின் இந்த வார்த்தைப் பரிமாற்றம் 30 நிமிடங்களுக்குள் ஓர் அருமையான பாடலின் வார்த்தைகளையும் ராகத்தையும் உருவாக்கிற்று என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறதல்லவா?

நட்புறவின் சிறந்த அடையாளமாக விளங்கும் இப்பாடல் எழுதப்பட்ட நாள்முதல் இந்நாள்வரை, பல தேவ மனிதர்களுக்கு ஆறுதலளிக்கும் அடக்க ஆராதனைப் பாடலாகவும், உள்ளத்தைத் தொடும் எளிய நற்செய்திப் பாடலாகவும் விரும்பிப் பாடப்பட்டுவருகிறது.

Sanford Fillmore Bennett
அமெரிக்க உள்நாட்டுப் போரின் முடிவில் இப்பாடலை இயற்றிய ஸான்ஃபோர்ட் பென்னட் (Sanford Fillmore Bennett) விஸ்கான்சினின் எல்க்கார்னுக்குத் திரும்பி வந்து (Elkhorn, Wisconsin), ஒரு மருந்துக்கடையை ஆரம்பித்து நடத்தினார்.  அத்துடன் தனது மருத்துவக் கல்வியையும் தொடர்ந்தார்.

Joseph P Webster
ஜோஸப் வெப்ஸ்ட்டர் (Joseph P Webster) ஓர் இசை ஆசிரியர்.  அவர் அப்பட்டணத்தில் சிறந்த இசை மேதையாக அனைவராலும் மதிக்கப்பட்டார்.  இவரும் பென்னட்டும் ஆருயிர் நண்பர்கள்.  இவர்கள் இருவரும் பென்னட்டின் மருந்துக்கடையில் அடிக்கடி சந்தித்து, நட்புடன் அளவளாவுவதுண்டு.

பனிக்காலத்தில் ஒருநாள் மதிய வேளை தனது வயலினைக் கையிலேந்தியவாறு வெப்ஸ்டர் பென்னட்டின் கடைக்குள் நுழைந்தார்.  பின்னர் நடந்த சம்பவத்தை பென்னட் இவ்வாறு விவரிக்கிறார்.

‘எல்லா இசைக் கலைஞர்களையும் போலவே வெப்ஸ்ட்டரும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்.  அடிக்கடி மனச்சோர்வு கொள்வார்.  இவ்வேளைகளில் வாழ்வின் நிகழ்வுகளின் இருண்ட பகுதிகளைக் காண்பார்.  அவருடைய வினோத சுபாவங்களை நான் நன்கு அறிவேன்.  எனவே அவருடைய சோர்வு நிலையை எளிதில் புரிந்துகொண்டு ஒரு புதிய பாடலைக் கொடுத்து, இசையமைக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவேன்.

அன்று என் கடைக்கு வந்த வெப்ஸ்ட்டர் கனல் நெருப்பண்டை சென்று தனது பின்புறத்தை எனக்குக் காட்டியவாறு நின்றார்.  மேஜையில் எழுதிக்கொண்டிருந்த நான் அவரை நோக்கி ‘ வெப்ஸ்ட்டர் என்ன விஷயம்?” என வினாவினேன்.  ‘ஒன்றுமில்லை.  நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்” என்று பதிலளித்தார்.

சூரிய ஒளி பளிச்சிடுவது போல, உடனே எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘நாளடைவில் இன்பமாக முடியும்’ ஒரு நல்ல பாடலுக்கு இது ஒரு அருமையான தலைப்பு அல்லவா?” என்றேன்.  ‘ஒருவேளை இருக்கலாம்’ என உணர்ச்சியற்ற குரலில் வெப்ஸ்ட்டர் பதிலளித்தார்.

என்னுடைய மேஜைக்குத் திரும்பிச் சென்று, என்னால் முடிந்தவரை வேகமாகப் பேனாவால் எழுதினேன். முடிந்ததை வெப்ஸ்ட்டரிடம் கொடுத்தேன். அவரும் பார்த்தவுடன், கண்களில் நம்பிக்கையின் ஒளி வீச அப்பாடலுக்கு இசை எழுத ஆரம்பித்தார்.  பின்னர் தொடர்ந்து அப்பாடலின் பல்லவியின் ராகத்தையும் எழுதி முடித்தார்.  இப்பாடலை நான் எழுத ஆரம்பித்து 30 நிமிடங்கள் கூடத் தாண்டவில்லை.  அதற்குள் நண்பர்களாகிய நாங்கள் இருவரும் சேர்ந்து அதை உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்தோம்.

ஸான்ஃபோர்ட் பில்மோர் பென்னட் நியூயார்க்கிலுள்ள ஈடெனில் 21.6.1936 அன்று பிறந்தார்.  சிறு வயதிலிருந்தே இலக்கியப் பணியில் ஈடுபட்டார்.  14 வயதில் அவர் இயற்றிய ‘ஆரம்பக் கவிதைகள்’ வாக்கிகன் கெஸட்டில் வெளிவந்தன.  ஒரு மெதடிஸ்ட்டு நற்செய்தி கூட்டத்தில் ரட்சிப்பின் அனுபவம் பெற்றார்.  பென்னட் 12.6.1898 அன்று மரித்தார்.

ஜோசப் பில்பிரிக் வெப்ஸ்டர் அவரது காலத்தில் ஒரு தாலந்து படைத்த இசை வல்லுனரெனப் புகழ் பெற்றிருந்தார்.  மாசாசூசெட்டின் பாஸ்டனில் உள்ள லோவல் மேசனில் இசைக்கல்வி பெற்று, நியூயார்க்கிலும், கனெக்டிகட்டிலும் பல்லாண்டுகள் இசை ஆசிரியராகவும், இசைக்கச்சேரிகள் நடத்தியும் பணியாற்றினார்.  புல்லாங்குழல் வயலின் பியானோ ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.  அடிமைத்தனத்திற்கு எதிராக வைராக்கியம் கொண்டிருந்தார்.  எனவே, போர் மூளுவதற்கு முன்பு விஸ்கான்சினின் எல்க்கார்னுக்கு மாறிச் சென்றார்.  ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். தனது 56வது வயதில் 18.1.1875 அன்று நித்திரையடைந்தார்.

பாடல் பிறந்த கதை - தகவல்கள் நன்றி: ”131 பாடல் பிறந்த கதை”, அமைதிநேர ஊழிய வெளியீடு.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம் பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2.    அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம்

3.    நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம்.

4.    அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம்.

5.    சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம்.

6.    அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்.

7.    தூதர் சூழ்ந்து நின்று பாடுவார்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும்

8.    என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன்

9.    ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார்.


IN THE SWEET BY AND BY

Post Comment

பாமாலை 80 - இன்னோர் ஆண்டு (Tune-Monkland)

பாமாலை 80 - இன்னோர் ஆண்டு 
For Thy mercy and Thy grace
(Tune-Monkland)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.    இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே
உம்மைத் துதி செய்வோமே.
 
2.    நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.
 
3.    யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.
 
4.    நாங்கள் உந்தன் தாசராய்,
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.
 
5.    ஏக கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே,
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.

Post Comment

Saturday, July 4, 2015

பரிசுத்தம் பெற (Have you been to Jesus)




















1.    பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திருஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்.

மாசில்லா சுத்தமா
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

2.    பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்?
மறு ஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

3.    மணவாளன் வரக்களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்?
மோட்சக்கரை ஏறிச் சுகிப்பீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

4.    மாசு கறை நீங்கும் நீசப்பாவியே
சுத்த ரத்தத்தின் சக்தியினால்
முக்திப்பேறுண்டாகும் குற்றவாளியே 

ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?


Post Comment

காது குளிர பாடுங்கள் (Sing them over again)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    காது குளிர பாடுங்கள்
கிருபா சத்தியம்;
புத்தி தெளியக் காட்டுங்கள்
திவ்விய வசனம்;
வெல்க! சத்திய வேதம்
வாழ்க! நித்திய வேதம்

அமிர்தமே! அற்புதமே!
திவ்விய சத்தியம்!
அமிர்தமே! அற்புதமே!
திவ்விய வசனம்!

2.            நல்ல செய்தியைக் கூறுமே
கிருபா சத்தியம்
பாவ நாசத்தைக் காட்டுமே
திவ்விய வசனம்;
வான வருஷ மாரி
ஞான பொக்கிஷ வாரி - அமிர்தமே

3.            வேத நாயகர் பொழியும்
கிருபா சத்தியம்;
ஜீவ மங்கள மொழியும்
திவ்விய வசனம்
இயேசு எந்தனைப் பாரும்
நித்தம் எந்தனைக் காரும் - அமிர்தமே

Post Comment

Friday, July 3, 2015

மெய் தேவனைத் துதி (To God Be the Glory)



















1.            மெய்த் தேவனைத் துதி பேர் நன்மை செய்தார்
குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்
உன் பாவத்துக்காய் ஏசுவே மரித்தார்
நீ ஜீவனைப் பெற ஆருயிர்த் தந்தார்.

     போற்றுவோம்! போற்றுவோம்!
     ஜீவ நாயகரை
     நம்புவோம்! நம்புவோம்!
     லோக ரட்சகரை!
     ஓ! ஏசுவின் மூலம் நற்கதி உண்டாம்
     பிதாவின் சமூகம் கண்டடையலாம்.

2.    சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்
தம் வாக்கை அன்பர்க்கருள்வேன் என்றனர்
எப்பாவியானாலும் விசுவாசம் வைத்தால்
அந்நேரமே மன்னிப்புண்டாம் ஏசுவால்.

3.    அதிசயமான அன்பின் பெருக்கே!
ஏசுவினாலே வரும் மகிழ்ச்சியே!
அந்நாளில் இயேசுவை பார்க்கும் போது
உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ?

Post Comment

Wednesday, July 1, 2015

பூவின் நற்கந்தம் (Down in the Valley)

Song : Down in the Valley

Words: Will­iam O. Cush­ing, 1878.

Music: Ro­bert Low­ry, in Good as Gold, by Ro­bert Low­ry and W. How­ard Doane (New York: Big­low & Main, 1880), page 134 (MI­DI, score).


“I wrote this hymn in 1878,” the Rev. W. O. Cush­ing tells me. “Long­ing to give up all for Christ who had giv­en his life for me, I want­ed to be will­ing to lay ev­er­ything at his feet, with no wish but to do his will, to live hence­forth on­ly for his glo­ry. Out of this feel­ing came the hymn, ‘Fol­low On.’ It was writ­ten with the pray­er and the hope that some heart might by it be led to give up all for Christ. Much of the pow­er and use­ful­ness of the hymn, how­ev­er, are due to Mr. Low­ry, who put it in­to song.”

Information Thanks : cyberhymnal.org


















1.            பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசுநாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின்செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின்செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2.            கார்மேகம் மேலே மூடும் பள்ளமெங்கிலும்
காற்றகோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்.

3.            நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்.

Post Comment