Sunday, February 7, 2016

கரையேறி உமதண்டை (Must I go And Empty Handed)

மரணத்தருவாயில் இருந்த ஒரு வாலிபன், தான் மரிப்பதற்கு ஒரு மாதம் மட்டுமே மீதமிருந்த நிலையில், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தன் நண்பனிடம், “எனக்குப் பயமில்லை.  இயேசுவினால் நான் மீட்கப்பட்டேன்.  ஆனால்.. நான் ஒரு ஆத்துமாவையும் அவருக்கென்று ஆதாயம் செய்யவில்லையே? நான் அவரிடம் போகும்போது வெறுங்கையனாகப் போகவேண்டுமோ? என்று கேட்டானாம்.


இந்தச்சம்பவத்தை, 1877ம் ஆண்டு, அருள்திரு. ஏ.ஜி.உப்ஹாம் (Rev. A.G. Upham) தன்னுடைய அருளுரையில் விவரித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த அருள்திரு. சி.சி.லூத்தரின் (Charles Carroll Luther) மனதில் இப்பாடலுக்கான வரிகள் சில நிமிடங்களிலேயே வந்து அமர்ந்தன.  ஒரு சில நாட்களில் முழுப்பாடலையும் எழுதி முடித்தவர், ஸ்டெப்பின்ஸ் (Stebbins) என்ற தனது நண்பரிடம் வரிகளைக் கொடுத்தார்.  ஸ்டெப்பின்ஸ் அவ்வரிகளுக்கு அழகான இந்த ராகத்தை இயற்றினார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ?

ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா?

2.    ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3.    தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பலன் காண
உழைக்காமற் போயினேன்

4.    வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ?

5.    பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்.

Must I Go And Empty Handed

Post Comment