Monday, May 22, 2017

பாமாலை 98 - இதோ மரத்தில் சாக

பாமாலை 98 – இதோ மரத்தில் சாக

(O Welt, sieh hier dein Leben)

Paul Gerhardt
Pic Thanks : Wikipedia
இப்பாடலை எழுதியவர் Paul Gerhardt என்பவராவார்.  ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இப்பாடல் முதன்முதலில் 1647ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது.  பின்னர், ஆங்கிலத்திலும் இப்பாடல் பல்வேறு வகையில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றுள், 1858ம் ஆண்டு Catherine Winkworth மொழிபெயர்த்த ‘O World! Behold upon the tree’ எனும் பதிப்பு மிகவும் பிரபலமாக இன்றும் உலகமெங்கும் பாடப்படுகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்விலும் கிறிஸ்துவின் பாடுகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனும் கருத்தை விளக்கும் இப்பாடல், நம் பாமாலைப் புத்தகத்தில் ‘பாடுபட்ட வாரம்’ எனும் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் நுட்பமான தாள அமைப்பின் காரணமாக, மிக அரிதாகவே நமது ஆராதனைகளில் பாடப்படுகிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இதோ, மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம், லோகமே;
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள், மாந்தர்களே.

2.    இதோ, மா வேகத்தோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்
நல் நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின்மேல் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்;

3.    ஆர் உம்மைப் பட்சமான
கர்த்தா, இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்?
நீர் பாவம் செய்திலரே,
பொல்லாப்பை அறியீரே;
ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?

4.    ஆ! இதைச் செய்தேன் நானும்
என் அக்கிரமங்கள் தானும்,
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதகங்கள் இந்த
வதைப்புக் காதிமூலங்கள்.

5.    நானே கை கால் கட்டுண்டு
பாதாளத்தில் தள்ளுண்டு
கிடத்தல் நியாயமே
நானே முடிவில்லாமல்
சந்தோஷத்தைக் காணாமல்
வதைக்கப்படல் நீதியே.

6.    நீரோ என்மேல் உண்டான
அழுத்தும் பாரமான
சுமை சுமக்கிறீரே;
ஆசீர்வதிக்க நீரே
போய்ச் சாபமாகிறீரே;
நான் தப்ப நீர் படுகிறீர்.

7.    நீர் என் கடனைத் தீர்க்க
பிணையாய் என்னை மீட்க
மரத்தில் ஏறினீர்; 
ஆ, சாந்தமான சிந்தை,
நீர் முள் முடியின் நிந்தை
எத் தீங்கையும் பொறுக்கிறீர்.

8.    நான் சாவின் வாய்க்குத் தப்ப,
நீரே அதை நிரப்ப
அதில் விழுகிறீர்;
நான் நீங்க நீர் முன்னிற்பீர்,
நான் வாழ நீர் மரிப்பீர்,
அவ்வாறு என்னை நேசித்தீர்.

9.    கர்த்தாவே, நீர் பகைக்கும்
பொல்லாப்பை என்றென்றைக்கும்
வெறுத்தரோசிப்பேன்;
என் இச்சையை நாள்தோறும்
ஆகாத சிந்தையோடும்
நான் சிலுவையில் அறைவேன்.

10.   ஆ, உமது ஜெபமும்
அவஸ்தையும் தவமும்
கண்ணீருங் கிலேசமும்,
நான் செத்தால் பரலோக
சந்தோஷத்துக்குப் போக
வழித் துணைக்குதவவும்.

Post Comment

Tuesday, May 16, 2017

பாமாலை 97 - அன்புள்ள ஸ்வாமி

பாமாலை 97 – அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
(Herzliebster Jesu)

Johann Heermann
 Robert S. Bridges 
”அன்புள்ள ஸ்வாமி” எனும் இப்பாடல் Herzliebster Jesu என்ற ஜெர்மன் பாடலின் தமிழ் வடிவமாகும்.  இப்பாடலை ஜெர்மன் மொழியில் 1630ம் ஆண்டு Johann Heermann என்பவர் லெந்துகாலங்களில் பாடப்படுவதற்கென்று எழுதினார். இப்பாடலை ஆங்கிலத்தில் Robert S. Bridges என்பவர் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்.

Ah, holy Jesus, how hast Thou offended,
That man to judge Thee hath in hate pretended?
By foes derided, by Thine own rejected,
O most afflicted.

பாடலுக்கான இசையை Johann Crüger என்பவர் எழுதியுள்ளார். 

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது?

2.    வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்,
வதைத்திட்டார்கள்.

3.    இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;
அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து
வதை செய்தது.

4.    மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்,
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.

5.    ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.

6.    இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.

7.    அப்போ நான் உமதன் நிறைந்து,
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.

8.    பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன்,
இஸ்தோத்திரிப்பேன்.

Post Comment

Friday, May 12, 2017

பாமாலை 96 - அகோர கஸ்தி (Attole Paulum)

பாமாலை 96 - அகோர கஸ்தி  
Tune : Attole Paulum


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?

2.    சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த,
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்?

3.    அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து,
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து,
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர், என் நாதர்.

Post Comment