Friday, August 30, 2013

பாமாலை 198 - விருந்தைச் சேருமேன் (Tune : Something for Thee)

 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.         விருந்தைச் சேருமேன்
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன்
போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.
 
2.         ஊற்றண்டை சேரவும்
ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும்
நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.
 
3.         மீட்பரின் பாதமும்
சேராவிடில்,
தோல்வியே நேரிடும்
போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்;
வா, பாவி, வா.
 
4.         மோட்சத்தின் பாதையில்
முன் செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில்
ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.
 
5.         சேருவேன், இயேசுவே
ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே
சுத்தம் செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.

Post Comment

Tuesday, August 20, 2013

கர்த்தரே தற்காரும்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


கர்த்தரே, தற்காரும்,
ஆசீர்வாதம் தாரும்
எங்கள்மேல் உம் முகத்தை
வைத்து, வீசும் ஒளியை.
 
எங்களுக்கன்றன்று
சமாதானம் தந்து
கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்
உமதாவியைக் கொடும்.
 
எங்கள் மீட்பரான
இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை
ஆமேன், கேட்பீர் ஜெபத்தை

Post Comment

Wednesday, August 14, 2013

பாமாலை 261 - எல்லாருக்கும் மா (Coronation)

பாமாலை 261 – எல்லாருக்கும் மா உன்னதர்
(All hail the power of Jesus name)

‘ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா’ என்னும் நாமம் ….. எழுதப்பட்டிருந்தது. வெளி 19:19

இயேசுவின் ‘மகுடாபிஷேகக் கீதம்’ (Coronation Hymn) என்றழைக்கப்படும் இப்பாடல் எழுதப்படுவதற்குத் தூண்டுதலாயிருந்தது, லண்டன் மாநகருக்கு இருபது மைல்களுக்குத் தெற்கில் சுண்ணாம்புப் பாறைகளின் உச்சியில் எழுப்பப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான சிலுவையாகும்.  இப்பாறைகள் ஷோர்ஹம் என்னும் ஒரு குக்கிராமத்தில் இருந்தன.  சிலுவைக்கடியில் ஒரு சிறிய ஆலயமுமிருந்தது. 
இவ்வாலயத்தில் போதகராக வின்சென்ட் பெரோனே (Vincent Perronet) என்பவர் பல ஆண்டுகளாக உழைத்தார்.  அவரது புதல்வரான எட்வர்ட் பெரோனே (Edward Perronet) சிறுவனாக இருக்கும்போது ஆலயத்தின் முன்நின்று சிலுவையைக் கண்ணுற்று, இயேசுவின் தியாகத்தை உணர்ந்தார்.  இவ்வுணர்ச்சி அவர் ஆயுள் முழுவதும் அவரைத் தன் ஊழியத்தில் ஊக்குவித்ததென அவரே கூறியுள்ளார்.  பல ஆண்டுகளுக்குப் பின் அவர் போதகராயிருக்கும்போது ஆங்கிலக் கவிகள் எழுதலானார்.  அப்போது அவர் இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தி எழுதிய ஒரு கவியே, ’எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகத் திகழ்கின்றது.

இப்பாடலை எழுதிய எட்வர்ட் பெரோனே 1726ம் ஆண்டு இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை, ‘மெதடிஸ்டு சபையின் பிரதம அத்தியட்சர்’ என வேடிக்கையாக அழைக்கப்பட்டார். ஏனெனில் மெதடிஸ்டு சபையை ஏற்படுத்திய வெஸ்லி சகோதரருக்கு அவர் மிகுந்த ஆதரவளித்துவந்தார். பெரோனே 1749ம்ல் ஜான் வெஸ்லியுடன் சுற்றுப்பயணம் ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் சுற்றுப் பிரசங்கியாக உழைத்தார்.  பின்னர், ஆங்கிலத் திருச்சபையைத் தாக்கி உபந்நியாசங்கள் செய்ததாலும், அதைத் தாக்கி ஒரு புத்தகம் எழுதியதாலும், வெஸ்லி சகோதரர்களுடன் அவருக்கிருந்த நட்பு 1771ல் அற்றுப்போயிற்று. அதன்பின், ஹண்டிங்டன் சீமாட்டி (The Countess of Huntingdon) அவரைத் தன் வீட்டுக் குருவாக (Chaplain) வைத்துக்கொண்டார்.  ஆனால் அவர் திரும்பவும் ஆங்கிலச் சபையைத் தாக்கிக்கொண்டேயிருந்ததால், சீமாட்டியின் ஆதரவும் அவருக்கு இல்லாமல் போயிற்று  ஆதலால் அவர் பல சபைகளில் மாறி மாறி ஊழியம் செய்து, இறுதியில் கந்தர்புரியிலுள்ள (Canterbury) ஒரு சபை ஆளுகைச் சபையில் (Congregational Church) போதகராக அமர்ந்தார்.

Oliver Holden
(Music : Coronation)
எட்வர்ட் பெரோனே ஒரு சிறந்த கவிஞர்.  அவர் ஆங்கிலக் கவிகளடங்கிய மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். இதிலுள்ள ஒரு கவியே ‘எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகும். இது முதல் முதலாக 1779ல் ‘Gospel Magazine’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில், ‘Miles Lane’ என்னும் ராகத்துடன் வெளியிடப்பட்டது.  இந்த ராகத்தையே நாம் தற்போது இப்பாடலுக்கு உபயோகிக்கிறோம்.  இந்த ராகத்திற்கு இரட்சணியசேனையார் ஓர் அழகிய பல்லவியையும் சேர்த்துப் பாடுகின்றனர்.  இப்பாடலுக்கு, ‘Diadem’, ‘Coronation’ என்னும் வேறு இரு ராகங்களும் உண்டு.

எட்வர்ட் பெரோனே 1792ம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ம் தேதி, தமது 66வது வயதில் காலமானார்.  அவர் ஆங்கிலத் திருச்சபையைப் பலமாகத் தாக்கியிருந்தபோதிலும், கந்தர்புரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  எல்லாருக்கும் மா உன்னதர்
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தெய்வ மனிதர்
நீர் வாழ்க, இயேசுவே.

2.  விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.

3.  பிசாசு, பாவம் உலகை
உம் சாவால் மிதித்தே
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.

4.  நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5.  விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

Post Comment

Monday, August 12, 2013

பாமாலை 227 - வயல் உழுது (Wir Pflügen)

பாமாலை 227 - வயல் உழுது தூவி
We plough the field and scatter
Tune : Wir Pflügen

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano





1.    வயல் உழுது தூவி
நல் விதை விதைப்போம்
கர்த்தாவின் கரம் அதை
விளையச் செய்யுமாம்
அந்தந்தக் காலம் ஈவார்
நற்பனி மழையும்
சீதோஷ்ணம் வெயில் காற்று
அறுப்புவரையும்.
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.

2.    விண் வானம் ஆழி பூமி
அவரே சிருஷ்டித்தார்
புஷ்பாதி விண் நட்சத்திரம்
பாங்காய் அமைக்கிறார்
அடக்கி ஆழி காற்று
உண்பிப்பார் பட்சிகள்
போஷிப்பிப்பார் அன்றன்றும்
மைந்தாராம் மாந்தர்கள்.
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.

3.    நல் ஈவு பலன் பாக்கியம்
விதைப்பு அறுப்பை
ஜீவன் சுகம் ஆகாரம்
தரும் பிதா உம்மை
துதிப்போம், அன்பாய் ஏற்பீர்
படைக்கும் காணிக்கை
யாவிலும் மேலாய்க் கேட்கும்
தாழ்மையாம் உள்ளத்தை.
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.

WE PLOW THE FIELDS AND SCATTER

Post Comment

Saturday, August 10, 2013

பாமாலை 194 - தூய பந்தி (Cross of Jesus)

பாமாலை 194 - தூய பந்தி 
Strengthen for service Lord
Tune : Cross of Jesus

Unison


Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.
 
2. தூயர் தூயர்என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.
 
3. தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்.

Post Comment

Friday, August 9, 2013

பாமாலை 170 - ஆ சகோதரர் (Newington)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.  , சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தல், எத்தனை
நேர்த்தியான இனிமை.
 
2.  அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ்வடிகையில்
கந்தம் வீசும் எண்ணெயே
போன்றதாயிருக்குமே.
 
3.  அது எர்மோன்மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாசத்து
நற்பனியைப் போன்றது.
 
4.  அங்கேதான் தயாபரர்
ஆசீர்வாதம் தருவார்
அங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.
 
5.  மேய்ப்பரே, நீர் கிருபை
செய்து, சிதறுண்டதை
மந்தையாக்கி, யாவையும்
சேர்த்தணைத்துக் கொள்ளவும்.
 
6.  எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர,
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.
 
7.  நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி, நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக் கட்டளையிடும்
 
8.  மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.

Post Comment

தெய்வ ஆசீர்வாதத்தோடே (Stuttgart)

Unison 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்;
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்.


இப்போதும்மைத் தேடி வந்து
மனதாரப் போற்றினோம்;
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.


Post Comment

Tuesday, August 6, 2013

பாமாலை 189 - என் மீட்பர் (Rivaulx)

பாமாலை 189 - என் மீட்பர் 
Tune : Rivaulx

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
உம் பாதத்தண்டை நிற்கிறேன்
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.
 
2.  என் கிரியைகள் எம்மாத்திரம்?
பிரயாசை எல்லாம் விருதா
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.
 
3.  உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்
உட்கொண்டன்பாய் அருந்தவும்
நான் பரவசமாகுவேன்.
 
4.  மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.
 
5.  என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.

Post Comment

பாமாலை 90 - நாற்பது நாள்

பாமாலை 90 – நாற்பது நாள் ராப்பகல்
(Forty days and forty nights)

இப்பாடலை எழுதிய ஜார்ஜ் ஸ்மிட்டன் (George Hunt Smyttan) 1825ம் ஆண்டு பிறந்தார்.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1845ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தபின்னர் 1849ம் ஆண்டு ஆயர் பட்டம் பெற்றார். சிறு கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய இவர், லெந்து காலத்தைக் குறித்து மூன்று வெவ்வேறு கவிதைகளை எழுதினார்.  அதில் ஒரு கவிதைதான் ‘நாற்பது நாள் ராப்பகல் என்று உலகம் முழுவதும் பாடப்படும் பாடலாக இசை வடிவம் பெற்றது.  இப்பாடலுக்கான ராகத்தை எழுதியவர் யார் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் நீடிக்கின்றன.  இருப்பினும், மார்ட்டின் (Martin Herbst) என்பவரது பெயரே ‘இப்பாடலுக்கு இசையமைத்தவர் என்று பல்வேறு பாடல் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.


‘நாற்பது நாள் ராப்பகல் 1856ம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்டு இன்றளவும் உலகமெங்கும் தபசு காலங்களில், குறிப்பாக ‘சாம்பல் புதன் அன்று பாடப்பட்டு வருகிறது.  ஜியார்ஜ் ஸ்மிட்டன் 1870 ஆண்டு ஜெர்மன் தேசத்தில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்.

2.    ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகந் துணை
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை.

3.    உம்மைப் போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.

4.    சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்
வென்றீரே நீர் அவனை

5.    அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.

Forty days and forty nights

Post Comment