Wednesday, November 25, 2015

பாமாலை 68 - பிறந்தார் ஓர் பாலகன்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பிறந்தார் ஓர் பாலகன்,
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2.    ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்.

3.    பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே.

4.    கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே.

5.    ஆதி அந்தம் அவரே,
ஆர்ப்பரிப்போம் நாமே;
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

Post Comment

Sunday, November 22, 2015

பாமாலை 67 - பரத்திலேயிருந்துதான்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பரத்திலேயிருந்துதான்
அனுப்பப்பட்ட தூதன் நான்
நற்செய்தி அறிவிக்கிறேன்
பயப்படாதிருங்களேன்.

2.    இதோ எல்லா ஜனத்துக்கும்
பெரிய நன்மையாய் வரும்
சந்தோஷத்தைக் களிப்புடன்
நான் கூறும் சுவிசேஷகன்.

3.    இன்றுங்கள் கர்த்தரானவர்
மேசியா உங்கள் ரட்சகர்
தாவீதின் ஊரில் திக்கில்லார்
ரட்சிப்புக்காக ஜென்மித்தார்.

4.    பரத்திலே நாம் ஏகமாய்
இனி இருக்கத்தக்கதாய்
இக்கட்டும் பாவமுமெல்லாம்
இம்மீட்பரால் நிவிர்த்தியாம்

5.    குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்
துணியில் சுற்றப்பட்டதாய்
இப்பிள்ளை முன்னணையிலே
கிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே.

2ம் பாகம்
விசுவாசிகள் சொல்லுகிறது

1.    களிப்பாய் நாமும் மேய்ப்பரின்
பின்னாலே சென்று, ஸ்வாமியின்
ஈவானதை நாம் கேட்டாற்போல்
சென்றுமே பார்ப்போம், வாருங்கள்.

2.    ஆர் அங்கே முன்னணையிலே
கிடக்கிறார்? என் மனதே,
இப்பிள்ளையை நீ உற்றுப்பார்,
இதே உன் இயேசு ஸ்வாமியார்.

3.    என் ஸ்வாமி, வாழ்க, பாவியை
நீர் கைவிடாமல் இத்தனை
தாழ்வாய் என்னண்டை வந்தது
அளவில்லாத தயவு.

4.    எல்லாம் சிஷ்டித்த தேவரீர்
இம்மட்டுக்கும் இறங்கினீர்;
இங்கே இப்புல்லின்மேல், ஐயோ
நீர், ஸ்வாமி, வைக்கப்பட்டீரோ!

5.    ஆ, இன்பமான இயேசுவே,
மெய் ஆஸ்தியான உம்மையே
நான் பெற்றிருக்க, என்றைக்கும்
என் நெஞ்சில் வாசமாயிரும்.

6.    அத்தால் நான் நித்தம் பூரிப்பாய்
இருந்து, மா சந்தோஷமாய்
இம்மாய்கையை வெறுக்கிறேன்
கதியாம் உம்மைப் பாடுவேன்

7.    பிரிய ஏக மைந்தனை
பாராமல் தந்த ஸ்வாமியை
இஸ்தோத்திரிப்போம்; பூமிக்கு
ரட்சிப்பின் நாள் உதித்தது.

Post Comment

Tuesday, November 10, 2015

பாமாலை 58 - இரக்கமுள்ள மீட்பரே

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இரக்கமுள்ள மீட்பரே,
நீர் பிறந்த மா நாளிலே
ஏகமாய்க் கூடியே நாங்கள்
ஏற்றும் துதியை ஏற்பீரே.

2.    பெத்தலை நகர் தனிலே
சுத்த மா கன்னிமரியின்
புத்திரனாய் வந்துதித்த
அத்தனே மெத்த ஸ்தோத்திரம்!

3.    ஆதித் திரு வார்த்தையான
கோதில்லா இயேசு கர்த்தனே,
மேதினியோரை ஈடேற்ற
பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்!

4.    பாவம் சாபம் யாவும் போக்க,
பாவிகளைப் பரம் சேர்க்க,
ஆவலுடன் மண்ணில் வந்த
அற்புத பாலா ஸ்தோத்திரம்!

5.    உன்னதருக்கே மகிமை,
உலகினில் சமாதானம்,
இத்தரை மாந்தர்மேல் அன்பு
உண்டானதும்மால், ஸ்தோத்திரம்!

6.    பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்
பூலோக பொக்கிஷங்களும்
எங்களுக்கு எல்லாம் நீரே
தங்கும் நெஞ்சத்தில், ஸ்தோத்திரம்!

Post Comment

Monday, November 9, 2015

பாமாலை 56 - அறுப்பிருக்கும்போல்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    அறுப்பிருக்கும் போல்
மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை
இம்முன்னணையிலே
மா சூரியன் அத்தன்மை
விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.

2.    தெய்வீக பிள்ளையே
அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க
என் நெஞ்சைத் தேற்றுமேன்
நீர் என்னை ஆதரிக்க
நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.

3.    பிதாவின் தயவும்
குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்;
நாம் கெட்டோர், திக்கில்லார்
ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார்
உண்டு பண்ணினார்.

4.    மெய்யாய் மகிழவே
வாழ்வேது, மோட்சமே;
அங்கே வானோர் பாடும்
சங்கீதம் இன்பமே,
ராஜாவின் ஊரில் ஆடும்
மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே.

Post Comment

Saturday, November 7, 2015

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்
இப்போ நேச மணாளர்மேல் தூவிடுவோம்

1.    மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம்.

2.    மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் சேறும்போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம்
வேண்டுதலோடு தூவிடுவோம்.

3.    புத்திர பாக்யம் புகழும் நல் வாழ்வும்
சத்திய மார்க்கம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திடத் தூவிடுவோம்.

4.    கறைதிறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம்.

Post Comment

Tuesday, November 3, 2015

பாமாலை 55 - அருளின் ஒளியைக் கண்டார்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.

2.    ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.

3.    கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.

4.    ஆலோசனையின் கர்த்தனே
சாலவே வல்லோனே
பூலோக சமாதானமே
மேலோக தந்தையே.

5.    தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியில்
ஏவி பலம் செய்வார்.

Post Comment