Wednesday, November 27, 2013

பாமாலை 51 - நற்செய்தி மேசியா (Bristol)

பாமாலை 51 - நற்செய்தி மேசியா 
Hark! the glad sound the Saviour comes.
Tune : Bristol

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. நற்செய்தி மேசியா இதோ!
ஆவலாய் நோக்குவோம்
பற்றோடு ஏற்று ஆன்மாவில்
ஆனந்தம் பாடுவோம்.
 
2. வல்லோனால் சிறையானோரை
வல் சிறை நீக்குவார்
நில்லாதே எவ்விரோதமும்
பொல்லாங்கை மேற்கொள்வார்.
 
3. நருங்குண்டோரை ஆற்றியே
நலிவை நீக்குவார்
பரத்தின் பாக்கியசெல்வத்தால்
இரவோர் வாழ்விப்பார்.
 
4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!
சாந்த இவ்வேந்தர்க்கும்;
இயேசுவின் இன்ப நாமமே
பாடுவார் விண்ணோரும்.

Post Comment

Sunday, November 24, 2013

பாமாலை 72 - ராக்காலம் பெத்லேம் (Tune : Old Winchester)

பாமாலை 72 – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
(While Shepherds watched their flocks)
Tune : Old Winchester

புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை உருவான 16 - ம் தூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை, திருச்சபையின் பாடல்கள் அனைத்தும் "Psalter' என்ற சங்கீதங்களின் அமைப்பில் பாடப்பட்டன.

இப்பாடல்கள் கரடுமுரடான அமைப்பாக இருந்ததால் , அவற்றைப் பாடுவது கடினமாக இருந்தது . எனவே , சங்கீதங்களை நவீன முறையில் மாற்றியமைத்து , எளிதில் பாடும்படி அமைக்க , 1696 - ம் ஆண்டு , இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களான நாகூம் டேட்டும்  (Nahum Tate) (1652-1715), நிக்கோலஸ் பிராடியும் (Nicholas Brady) முயற்சி எடுத்தனர் .  

Nahum Tate
கடும் எதிர்ப்புகள் மத்தியில் , வில்லியம் அரசனின் ஆதரவுடன் , இப்புதிய அமைப்பு சங்கீதங்கள் இங்கிலாந்து திருச்சபையில் உபயோகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1700ம் ஆண்டு, சங்கீதங்களின் மற்றொரு துணைத் தொகுப்பையும் வெளியிட்டனர்.  இத்தொகுப்பில், சங்கீதங்களைத் தவிர, 16 பாடல்களையும் அறிமுகம் செய்தனர் .  1782ம் ஆண்டுவரை Church of England’ அங்கீகரித்திருந்த ஒரே கிறிஸ்துபிறப்பின் கீதமாக (Christmas Carol) இப்பாடல் இருந்தது. Nahum Tate ’ராக்காலம் பெத்லேம்’ பாடலுக்கான வரிகளை எழுதினார். 16ம் நூற்றாண்டின் William H Monk என்பவர் இயற்றிய ”Winchester Old” எனும் ராகத்தில் இப்பாடல், Ancient & Modern புத்தகத்தின் 1861ம் ஆண்டு பதிப்பில் வெளியிடப்பட்டது.

இவற்றில் இப்பாடலும் ஒன்றுவேதாகமத்தில் வரும் "தேவ தாதர்கள் மேய்ப்பர்களுக்கு இயேசு பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் சம்பவத்தை", எளிய நடையில் கிறிஸ்மஸ் கீதமாக இப்பாடலில் எழுதினார் நாகூம் டேட். இந்த கிறிஸ்மஸ் பாடல், பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்மஸ் தரும் உண்மையான மகிழ்ச்சியை சுட்டிக் காட்டும் பாடலாக விளங்குகிறது .

தகவல்கள் பகிர்வு நன்றி: திரு. மன்னா செல்வகுமார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

Descant

Descant with Unison









































1.    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.

2.    அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன், ‘திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்’.

3.    ”தாவீதின் வம்சம் ஊரிலும்,
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்”.

4.    ”இதுங்கள் அடையாளமாம்,
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்”.

5.    என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதரோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6.    ”மா உன்னதத்தில், ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்

நல்லோர்க்கு ஈகுவீர்”.


While shepherds watched their flocks by night,
All seated on the ground,
The angel of the Lord came down,
And glory shone around,

Fear not! said he, for mighty dread
Had seized their troubled mind.
“Glad tidings of great joy I bring
To you and all mankind”.

“To you, in David’s town, this day
Is born of David’s line
A Savior, who is Christ the Lord,
And this shall be the sign”.

The heavenly Babe you there shall find
To human view displayed,
All meanly wrapped in swathing bands,
And in a manger laid.

Thus spake the seraph and forthwith
Appeared a shining throng
Of angels praising God on high,
Who thus addressed their song:


All glory be to God on high,
And to the Earth be peace;
Good will henceforth from Heav’n to men
Begin and never cease!

While Shepherds Watched Their Flocks

Post Comment

Wednesday, November 20, 2013

பாமாலை 237 - இயேசு எங்கள் மேய்ப்பர் (Goshen)

பாமாலை 237 - இயேசு எங்கள் மேய்ப்பர் 
Jesus is our Shepherd
Tune : Goshen

Unison 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  இயேசு எங்கள் மேய்ப்பர்,
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும்,
இன்பம் ஆயினும்,
இயேசுவின் பின் செல்வோம்
பாலர் யாவரும்.
 
2.  நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம்
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.
 
3.  ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்;
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார்.
 
4.  இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார்
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.

Post Comment

Monday, November 11, 2013

Anthem - Peace on Earth

Peace on Earth 
Christmas Anthem Composed by CALEB SIMPER.

Certain portions of the Audio (individual parts) may sound blank, for they are the places where either the 'Organ' or the 'Soprano Solo' will be played/sung.  So, for better understanding (if you can't read the notations), kindly listen to the Unison with the Organ first.

4 Parts with Organ
4 Parts without Organ
Organ Only
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

Sheet Music for Singers (6 Pages)






































Organist





































You can also download the Audio files from here.

Post Comment