Tuesday, December 17, 2013

பாமாலை 61 - பக்தரே வாரும் (Adeste Fideles)

பாமாலை 61 – பக்தரே வாரும்
O Come all Ye faithful
(Tune: Adeste Fideles)

John Francis Wade
முந்நூறு ஆண்டுகளுக்கு பழமையான பாடல் என்ற சிறப்புடைய ’பக்தரே வாரும்’ என்ற பாமாலை லத்தீன் மொழியில் Adeste Fideles என்று துவங்கும் பல்லவியுடன் எழுதப்பட்டது.  இதனை மூல மொழியான லத்தீன் மொழியில் எழுதியவர் ஜான் ஃப்ரான்ஸிஸ் (John Francis Wade, 1711-1786) என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர் ஒருவரேயல்லாமல், ஜான் ரீடிங் (John Reading, 1645-1692) மற்றும் போர்த்துகீய நான்காம் ஜான் மன்னர் (King John IV of Portugal, 1604-1656) ஆகியோரின் பங்களிப்பும் இப்பாடலை உருவாக்கியதில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.  இருப்பினும் இப்பாடலின் பல்வேறு பழமையான இசைக்குறிப்புகளில் ஜான் ஃப்ரான்ஸிஸ் அவர்களின் கையொப்பம் காணப்படுவதால்.  இவரே இப்பாடலை எழுதி இசைக்குறிப்பும் தந்தவர் எனக்கருதப்படுகிறது. நான்கு பல்லவியுடன் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இப்பாடல், பின்னர் பல்வேறு பாடலாசிரியர்களின் கைவண்ணத்தில் எட்டு பல்லவியுடன் நெடியதோர் பாடலாக உருவெடுத்து, உலகின் பல்வேறு மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.

The Original Manuscript (Adeste Fideles)


O Come All Ye Faithful” என்ற ஆங்கில மொழிபெயர்ப்பை, பிரிட்டனைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஃப்ரெட்ரிக் ஒக்கேலே (Rev. Frederick Oakley) என்பவர் 1841ம் ஆண்டு எழுதினார்.  

Unison with Descant
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant







































1.            பக்தரே, வாரும்
ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
 
2.    தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர்
வெறுத்திலீர்
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
 
3.    மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
‘விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!”
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
 
4.    இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும்
உண்டாகவும்
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை. ஆமேன்

Post Comment

Friday, December 13, 2013

பாமாலை 73 - ராஜன் தாவீதூரிலுள்ள (Irby)

பாமாலை 73 - ராஜன் தாவீதூரிலுள்ள 
Once in royal David's city
Tune: Irby

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்.
 
2.  வானம் விட்டுப் பூமி வந்தார்,
மா கர்த்தாதி கர்த்தரே,
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே,
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.
 
3.  ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்.
 
4.  பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்.
 
5.  நம்மை மீட்ட நேசர்தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர்தாமே மோக்ஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே.
 
6.  மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்,
பாலர் சூழ்ந்து போற்றுவார்.

Post Comment

Tuesday, December 10, 2013

பாமாலை 62 - கேள் ஜென்மித்த

பாமாலை 62 – கேள்! ஜென்மித்த ராயர்க்கே
Hark! The herald angels sing

’உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக’. லூக்கா 2:14

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையில் பாடப்படும் பாடல்களில் ஒன்று ‘கேள்! ஜென்மித்த ராயர்க்கே’ என்னும் பாடலாகும்.  பெத்லகேமில் நமதாண்டவராகிய கிறிஸ்து பிறந்த தினத்தன்று நள்ளிரவில் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பருக்கு பரம சேனையின் திரள் தோன்றி, ‘உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக’ என்று பாடி, தேவனைத் துதித்தார்கள்.  தெய்வ தூதரின் பாட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்தவச் சபைகளில் வெவ்வேறு இசைகளில் பாடப்படுகின்றது.

Charles Wesley (Source: Wiki)
இப்பாடலை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரனான சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார்.  ஆக்ஸ்ஃபோர்டில் பயிலும்போது, அவர் மாணவரிடையே ஒரு கிறிஸ்தவக் குழுவை ஸ்தாபித்தார்.  இதைப் பலர் ஏளனமாக ‘ஆக்ஸ்ஃபோர்ட் மெதடிஸ்டுகள்” என அழைத்தனர்.  இக்குழுவே பின்னால் பிரசித்திபெற்ற, மெதடிஸ்ட் சபையாக துளிர்த்தது.

Felix Mendelssohn
Source : Wiki
சார்ல்ஸ் வெஸ்லி, பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதி, மொத்தம் 6500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். ‘கேள்! ஜென்மித்த ராயர்க்கே’ 1738ல் எழுதப்பட்டது.  முதலில் இது ஒரு பாடலாகக் கருதப்படாமல் ஒரு கவிதையாகக் (Poem) கருதப்பட்டு, “Poem of Christmas Day’ என அழைக்கப்பட்டது.  பின்னர், ஏதோ ஒரு உற்சாகமற்ற ராகத்தில் பல ஆண்டுகளாகப் பாடப்பட்டு வந்தது.  காலப்போகில் இப்பாடல் மக்கள் கவனத்திலிருந்து மறக்கக்கூடிய நிலையை அடைந்தது.  ஆனால் வில்லியம் கம்மிங் (William Hayman Cummings) என்னும் ஒரு பாடகர், பெலிக்ஸ் மெண்டல்சோன் (Felix Mendelssohn) என்னும் சங்கீத வித்வானின் ராகங்களைப் பாடிக்கொண்டிருக்கும்போது, ஓர் ராகம் வெஸ்லி எழுதிய கவிதைக்குப் பொருந்துவதைக் கண்டு, அந்த ராகத்தை இதற்கு அமைத்தார்.  இதுவே நாம் இப்போது பாடும் ராகம்.  இதற்குப் பின் இப்பாடல் கிறிஸ்து பிறப்புப் பாடல்களில் மிகவும் சிறப்புப் பெற்றுள்ளது.

அக்காலத்தில், ஆங்கிலத் திருச்சபைக் கீதப் புத்தகத்தில் இப்பாடல் தவறுதலாக நுழைக்கப்பட்டது.  அப்புத்தகத்தைத் தொகுத்தவர்கள், வெஸ்லி எழுதிய பாடல்களில் ஒன்றையாவது சேர்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் வேறொரு சபையை ஏற்படுத்தியவர்.  ஆனால் அப்புத்தகத்தின் தொகுப்பாளர்களில் ஒருவர், கிறிஸ்து பிறப்புக் கீதப் பகுதியிலிருந்த ஒரு காலியிடத்தை நிரப்புவதற்காக ஆங்கிலச் சபைப் போதகராகக் கருதப்பட்ட சார்ல்ஸ் வெஸ்லியின் இப்பாடலை சேர்த்துக்கொண்டார்.  பின்னால் இத்தவறு கண்டுபிடிக்கப்பட்டு, இதை நீக்க முயற்சித்தனர்.  ஆனால் மக்கள் இதை வெகுவாகப் பாராட்டியதால் அது நீக்கப்படவில்லை.  ஆகவே சார்ல்ஸ் வெஸ்லி தன் வாழ்க்கையின் ஆரம்பத்தில் எழுதிய இப்பாடல், அவரது பாடல்களில், மிகவும் பிரியமாகப் பாடப்பட்டுவரும் ஒரு பாடலாகும்.

இதை எழுதிய ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், தமது 81வது வயதில் 1788ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி, சார்ல்ஸ் வெஸ்லி லண்டன் மாநகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே!
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

2.    வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க, நர தெய்வமே,
அருள் அவதாரமே
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.

3.    வாழ்க, சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி, ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்.
Hark! The Herald Angels Sing

Post Comment