Sunday, April 26, 2015

பாமாலை 164 - ஆ பாக்கிய தெய்வ (Rest)

பாமாலை 164 - ஆ பாக்கிய தெய்வ 
The saints of God their conflict
Tune : Rest

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.


2.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.


3.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.


4.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.


5.    கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
கடாட்சம் வைத்து ஆளுமே;
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்.



Post Comment

Saturday, April 18, 2015

பாமாலை 163 - அநந்த கோடி கூட்டத்தார்

பாமாலை 163 – அநந்த கோடி கூட்டத்தார்

(See the shining countless throng)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

Post Comment

Monday, April 13, 2015

அருள் ஏராளமாய்ப் பெய்யும்

அருள் ஏராளமாய்ப் பெய்யும்
There Shall be Showers of Blessing

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே.

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே.

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்.

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும்
க்ரியை செய்தருளுமேன்.

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே 
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே.


There shall be showers of blessing:
This is the promise of love;
There shall be seasons refreshing,
Sent from the Savior above.

Refrain

Showers of blessing,
Showers of blessing we need:
Mercy drops round us are falling,
But for the showers we plead.

There shall be showers of blessing,
Precious reviving again;
Over the hills and the valleys,
Sound of abundance of rain.

There shall be showers of blessing;
Send them upon us, O Lord;
Grant to us now a refreshing,
Come, and now honor Thy Word.

There shall be showers of blessing:
Oh, that today they might fall,
Now as to God we’re confessing,
Now as on Jesus we call!

There shall be showers of blessing,
If we but trust and obey;
There shall be seasons refreshing,
If we let God have His way.




















 

Post Comment

Tuesday, April 7, 2015

பாமாலை 160 - தெய்வாசனமுன் (Guardian Angels)

பாமாலை 160 - தெய்வாசனமுன் நிற்பீரே
Around the Throne of God a band
Tune : Guardian Angels


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.    தெய்வாசனமுன் நிற்பீரே
சேவகத் தூதர் சேனையே
பண் மீட்டி விண்ணில் பாடுவர்
பொன்முடி மாண்பாய் சூடுவர்.

2.    சன்னிதி சேவை ஆற்றுவர்
இன்னிசை பாடிப் போற்றுவர்
நாதரின் ஆணை ஏற்றுமே
மேதினியோரைக் காப்பரே

3.    நாதா, உம் தூதர் நாளெல்லாம்
நடத்திட நற்பாதையாம்
மாலை இராவின் தூக்கத்தில்
சீலமாய்க் காக்க பாங்கினில்

4.    எத்தீங்கு பயம் சேதமே
கர்த்தா, தொடாது எங்களை
வாணாள் முடிந்தும் பாதமே
மாண்பாகச் சேர்வோம் தூதரை.

Post Comment

Friday, April 3, 2015

ஆச்சர்யமே உம் கிருபை (Amazing Grace)

ஆச்சர்யமே உம் கிருபை 
(Amazing Grace How Sweet the Sound)
Tune : New Britain

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    ஆச்சர்யமே உம் கிருபை
மா நீசன் மீட்புற்றேன்
இழந்தேன் நான் தூரம் போனேன்
இப்போது பற்றினேன்.

2.    கிருபையாலே போதித்தீர்
நெஞ்சே நீ அஞ்சாதே
நீக்கினீரே பயமெலாம்
நம்பிய நேரமே.

3.    ஆபத்தையும் பயத்தையும்
நீக்கினீர் என்றுமாய்
இம்மட்டும் காத்த தயவால்
இன்னமும் காருமே.

4.    நன்மையை வாக்களித்தீரே
நீரே என் நம்பிக்கை
கேடயம், என் பங்குமானீர்
என் வாழ்வு முற்றிலும்.

5.    மாம்ச இதயம் நின்றுபோம்
இவ்வாழ்வும் ஒழியும்
பொய் முகம் நீங்கி பேரின்ப
நித்ய வாழ்வடைவேன்.


Post Comment

Thursday, April 2, 2015

பாமாலை 205 - கர்த்தர்தம் கிரியை (Benson)

பாமாலை 205 - கர்த்தர்தம் கிரியை 
God is working His purpose out
Tune : Benson

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கர்த்தர் தம் கிரியை செய்கிறார்
ஆண்டாண்டுகள் தோறுமே
கர்த்தர் தம் கிரியை செய்கிறார்
அவர் காலம் வருமே;
ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்
அவரின் ராஜ்யமே
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

2.    கர்த்தரின் செய்தி கேட்பராம்
பூமி எங்கும் உள்ளோரே
பக்தர் அச்செய்தி கூறுவார்
அவர் வாக்கை கைக்கொண்டே
கண்டமே, தீவே, கேட்பீரே,
ஆம், அவரின் வார்த்தையே
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

3.    கர்த்தரின் கிரியை செய்திட
மாந்தரை ஒன்றாக்கிட
அத்தனார் சாந்த பிரபுவின்
திவ்விய ராஜ்யம் தோன்றிட
தொண்டராம் நாம் என் செய்வதாம்
ஆம் விரைந்து வந்திட
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

4.    கர்த்தரின் சுவிசேஷமாம்
மகத்தான ஜோதியை
எத்திக்கிலும் பரப்பிட
வாரும் ஏற்றும் கொடியை
துண்டிப்போம் பாவம் சாபத்தை
ஆம் அவரின் ஆவியால்
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

5.    கர்த்தரின் துணையின்றியே
வேலை யாவும் வீணாமே;
வித்தில் விண்ணுயிர் இல்லையேல்
விளைவு நாம் காணோமே
(ஆயின்) ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்
அவரின் ராஜ்யமே
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே.


 

Post Comment