Friday, June 19, 2015

பாமாலை 398 - மேன்மை நிறைந்த ஆண்டவர் (Luthers Hymn)

பாமாலை 398 - மேன்மை நிறைந்த ஆண்டவர் 
Es ist gewisslich an der Zeit
Tune : Luthers Hymn

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும்
அப்போது மா பிரஸ்தாபமாய்
எங்கும் விளங்கும் ஜோதியாய்
மின்போலத் தோன்றுவாரே.

2. இலக்கமற்ற தூதர்கள்
அவர்க்கு முன்னதாக
பலத்த சத்த தாரைகள்
உடையவர்களாக
முழக்கம் செய்ய, பூமியும்
விஸ்தாரமான வானமும்
கரைந்து வெந்துபோகும்.

3. அத்தூதரின் எக்காளங்கள்
எத்திக்கிலும் முழங்கும்
அந்நேரம் மாந்தர் கூட்டங்கள்
உயிரடைந்தெழும்பும்
ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும்
ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும்
வணக்கமாய் நிற்பார்கள்.

4. சன்மார்க்கர் மோட்ச பாதையில்
நடந்ததால் மகிழ்ந்து,
சிறப்படைந்து நிற்கையில்
துன்மார்க்கரோ அதிர்ந்து
நியாயமான சாபத்தை
அடைந்து, கர்த்தர் முகத்தை
விட்டோடி மாளுவார்கள்.

5. என் மனமே, துன்மார்க்கத்தை
வெறுத்துத் தள்ளிவிட்டு,
அன்புள்ள இயேசு கிறிஸ்துவை
நம்பிக்கையாய்ப் பிடித்து,
கறையும் மாசுமின்றியே
கர்த்தர் முன்பாக நிற்கவே
நீ ஆவலோடு தேடு.

Post Comment

Tuesday, June 16, 2015

பாமாலை 397 - ஓ எருசலேமியாரே (Sleepers Wake)

பாமாலை 397 - ஓ எருசலேமியாரே 
Wake O wake for night is flying
Tune : Sleepers Wake

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            ஓ, எருசலேமியாரே
விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே
இப்பாதி ராத்திரியிலே
பர்த்தா வாறார்; வேகமாக
எழுந்திருங்கள் புத்தியாக
இருக்கும் கன்னிகள் எங்கே?
தீவர்த்திகளையே
எடுத்தெதிர்கொண்டே
போம் நேரமாம்,
என்றிரவில் அலங்கத்தில்
நிற்பாரின் கூக்குரல் உண்டாம்.

2.    சீயோனாகிய மனைவி
சந்தோஷம் மனதில் பரவி
விழித்தெழுந்திருக்கிறாள்
அவள் நேசர் மேன்மையோடும்
சிநேகத்தோடும் தயவோடும்
வெளிப்படுகிறதினால்
கிலேசம் நீங்கிற்று;
ஆ ஸ்வாமீ, உமக்கு
ஓசியன்னா!
அடியாரும் கம்பீரிக்கும்
கதிக்குச் செல்வோமே, கர்த்தா.

3.    சுரமண்டலங்களாலும்,
நரர் சுரர்கள் நாவினாலும்,
துதிக்கப்பட்டோர் தேவரீர்
மோட்சலோகம் மா சிறப்பு
நீர் எங்களை வானோர்களுக்கு
ஒப்பானோராக மாற்றுவீர்
அவ்வாழ்வைக் கண்டோர் ஆர்?
காதாலே கேட்டோர் ஆர்?
நாங்கள் மகா
சந்தோஷமும் மகிழ்ச்சியும்
அடைகிறோம்; அல்லேலூயா!

Post Comment

Monday, June 15, 2015

பாமாலை 16 - ஆ கர்த்தாவே தாழ்மையாக (Alleluya dulce carmen)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

2.  வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

3.  என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்;
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

Post Comment

Friday, June 12, 2015

பாமாலை 392 - இகத்தின் துக்கம் துன்பம் (Kocher)

பாமாலை 392 - இகத்தின் துக்கம் துன்பம் 
Tune : Kocher
Brief Life is here our Portion

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப் போம்
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.

2.    இதென்ன நல்ல ஈடு,
துன்பத்துக்கின்பமா?
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா?

3.    இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்

4.    இகத்தின் அந்தகார
ராக்காலம் நீங்கிப்போம்
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்.

5.    நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்.

Post Comment

Saturday, June 6, 2015

பாமாலை 394 - என் ஜீவன் போகும் (Rutherford)

பாமாலை 394 - என் ஜீவன் போகும் 
The sands of time are sinking
Tune : Rutherford

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            என் ஜீவன் போகும் நேரம்
சமீபம் வந்ததே
பேரின்ப அருணோதயம்
இதோ! விடிந்ததே
ராக்கால மோசம் நீங்கும்
விண் சுடரொளியில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்.

2.    ஆ, நேச ஜீவ ஊற்று
என் அருள் நாதரே!
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர்
அங்காழி போலாமே
பேரன்பின் பெருவெள்ளம்
பாய்ந்தோடும் மோட்சத்தில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்.

3.    அன்போடும் நீதியோடும்
என் சுகதுக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து
வந்தார் எந்நேரமும்
ஆ! போற்றுவேன் தெய்வன்பை
ஆனன்ந்தக் கடலில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்.

4.    நல் நித்திரை செய்து பின்பு
மாசற்றெழும்புவேன்
என் மீட்பரை நான் கண்டு
ஆனந்தம் அடைவேன்
ராஜாதி ராஜன் என்னை
அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்.

5.    தன் ஆடையைப் பாராமல்
பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு
நான் ஜீவ கிரீடத்தை
நோக்காமல், மீட்பர் மாண்பை
பார்ப்பேன் அவ்வேளையில்;
இம்மானுவேலே ஜோதி
பேரின்ப தேசத்தில்.


Post Comment

Friday, June 5, 2015

பாமாலை 393 - என் ஜீவன் கிறிஸ்து தாமே (Vulpius)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.   என் ஜீவன் கிறிஸ்து தாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு.

2.    நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே
மா சமாதானமாக
பிரிந்துபோவேனே.

3.    பாடற்றுப்போம், அந்நாளே
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தாலே
மெய் வாழ்வு தொடங்கும்

4.    நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்துபோயினும்
என் ஆவியைத் தள்ளாமல்
உம்மண்டை சேர்த்திடும்.

5.    அப்போது நான் அமர்ந்து
என் நோவை  மறப்பேன்
உம் சாந்த மார்பில் சாய்ந்து
நன்கிளைப்பாறுவேன்.

6.    நான் உம்மைக் கெட்டியாக
பிடித்தும்முடனே
அநந்த பூரிப்பாக
வாழட்டும், இயேசுவே.

Post Comment