Sunday, August 30, 2015

பாமாலை 50 - சீயோனே பாதை

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    சீயோனே பாதை சீர் செய்
உயர் மா ஆழியே;
மாமலைகாள் நீர் தாழ்வீர்,
மா மகிபன் காண்பீர்;
மா மறை சாற்றும் மீட்பர்
மாண் நீதி மாட்சி வேந்தர்
கர்த்தாவின் நாமத்தில்
வந்தோர் நீர் வாழ்கவே!

2.    திறந்திடு உன் வாசல்
சிறந்த வேந்தர்க்கு
மண் மாந்தர் யார்க்கும் மீட்பாம்
விண் செய்தி தந்தனர்
இருளை விட்டே மீள்வார்
அருளை வாழ்த்தி ஆர்ப்பார்
கர்த்தாவின் நாமத்தில்
வந்தோர் நீர் வாழ்கவே!

3.    போர்ச் சேனை யுத்த சூழ்ச்சி
பாராய் அவருடன்
ஆனால் பிசாசின் ஆட்சி
காணாதே மாய்ந்திடும்
சிலுவைச் சாவால் தாக்கி
வல் பேயை வெல்வார் வேந்தர்
கர்த்தாவின் நாமத்தில்
வந்தோர் நீர் வாழ்கவே!

Post Comment

Sunday, August 23, 2015

பாமாலை 44 - உன்னதமான கர்த்தரே (Mainzer)

பாமாலை 44 - உன்னதமான கர்த்தரே 
Tune : Mainzer

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    உன்னதமான கர்த்தரே
இவ்வோய்வு நாளைத் தந்தீரே
இதற்காய் உம்மைப் போற்றுவோம்
சந்தோஷமாய் ஆராதிப்போம்.

2.    விஸ்தாரமான லோகத்தை
படைத்த கர்த்தா, எங்களை
இந்நாள்வரைக்கும் தேவரீர்
அன்பாய் விசாரித்துவந்தீர்

3.    எல்லாரும் உமதாளுகை
பேரன்பு, ஞானம், வல்லமை
மற்றெந்த மாட்சிமையையும்
அறிந்து உணரச் செய்யும்.

4.    உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
தரித்து, எந்த நன்மைக்கும்
நீர் எங்களை உயிர்ப்பியும்.

5.    தெய்வாவியே, நல் அறிவும்
மெய் நம்பிக்கையும் நேசமும்
சபையிலே மென்மேலுமே
வளர்ந்துவரச் செய்யுமே.

Post Comment

Friday, August 21, 2015

பாமாலை 42 - நரர்க்காய் மாண்ட இயேசுவே

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    நரர்க்காய் மாண்ட இயேசுவே
மகத்துவ வேந்தாய் ஆளுவீர்;
உம் அன்பின் எட்டா ஆழத்தை
நாங்கள் ஆராயக் கற்பிப்பீர்.

2.    உம் நேச நாமம் நிமித்தம்
எந்நோவு நேர்ந்தபோதிலும்
சிலுவை சுமந்தே நித்தம்
உம்மைப் பின்செல்ல அருளும்.

3.    பிரயாணமாம் இவ்வாயுளில்
எப்பாதை நாங்கள் செல்லினும்
போர், ஓய்வு, வெய்யில், நிழலில்
நீர் வழித்துணையாயிரும்.

4.    வெம் பாவக் குணத்தை வென்றே,
ஆசாபாசம் அடக்கலும்,
உம் அச்சடையாளம் என்றே
நாங்கள் நினைக்கச் செய்திடும்.

5.    உம் குருசை இன்று தியானித்தே,
எவ்வேலையும் தூயதென்றும்
லௌகீக நஷ்டம் லாபமே
என்றெண்ணவும் துணைசெய்யும்.

6.    உம் பாதம் சேரும் அளவும்
எம் சிலுவையைச் சுமந்தே,
உம் சிலுவையால் மன்னிப்பும்
பொற்கிரீடமும் பெறுவோமே.

Post Comment