Wednesday, April 27, 2016

பாமாலை 211 - தேசத்தார்கள் யாரும் வந்து (St. Thomas)

பாமாலை 211 - தேசத்தார்கள் யாரும் வந்து 
Tune : St. Thomas


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    தேசத்தார்கள் யாரும் வந்து,
சுவிசேஷ வார்த்தையே
கேட்டு உந்தன் ஜோதி கண்டு
சேவிப்பார்கள் என்றீரே;
ஆ, கர்த்தாவே,
வாக்கை நிறைவேற்றுமேன்.

2.    வையகம் எல்லாம் மிகுந்த
புத்தியீனமுள்ளது
அதால் மாந்தர்க்குள் புகுந்த
கேடு மா பலத்தது
ஆ, கர்த்தாவே,
மாந்தரை இரட்சியும்.

3.    உம்முடைய வார்த்தை சொல்ல
போகும் போதகர்களை
நீர் பலப்படுத்தி, நல்ல
புத்தி தந்து, நேசத்தை
ஆவியாலே
ஊழியர்க்கு ஈந்திடும்

4.    வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்
உண்மையை உணரவும்
அங்கங்குள்ள பொய் மதங்கள்
யாவும் நீங்கிப் போகவும்
தூய வல்ல
ஆவியைக் கடாட்சியும்


Post Comment

Tuesday, April 26, 2016

பாமாலை 385 - விண் கிரீடம் பெற

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            விண் கிரீடம் பெறப் போருக்கு
கிறிஸ்தேசு செல்கின்றார்;
அவரின் வெற்றிக் கொடிக்கு
கீழாகப் போவோன் யார்?
தன் துக்கப் பாத்திரம் குடித்து
சோராமல் நிற்போன் யார்?
தன் சிலுவையை எடுத்து
அவர் பின் செல்வோன் யார்?

2.         முதலாம் ரத்த சாட்சியாய்
மரித்தோன், வானத்தில்
கர்த்தாவை விசுவாசமாய்
கண்ணோக்கித் துன்பத்தில்
கொலைஞர்க்காக வேண்டிட,
சண்டாளரால் மாண்டான்
பகைஞர்க்காக ஜெபிக்க
யார் அவன் பின் செல்வான்?

3.         தெய்வாவி வந்து தங்கின
ஈராறு சீஷர்கள்,
மகத்துவமாய் விளங்கின
நம்பிக்கையுள்ளோர்கள்,
தீ, துன்பம், வாளைச் சகித்தே
சிங்கத்தால் பீறுண்டார்;
மரிக்கவும் அஞ்சாமலே
அவர்போல் செல்வோர் யார்?

4.         சிறந்த சேனா வீரராய்
கெம்பீரக் கூட்டத்தார்
சிங்காசனத்தைச் சூழ்ந்தோராய்
கொண்டாடி நிற்கிறார்
எப்பாடும் நீங்கி மோட்சத்தை
சேர்ந்தோர்போல் நாங்களும்
உம்மிடம் சேர அருளை,
கர்த்தா, கடாட்சியும்.

Post Comment