Wednesday, January 17, 2018

SS 475 - வா நீசப்பாவி வா (I hear thy welcome voice)

வா நீசப்பாவி வா!
(SS 475 - I hear thy Welcome voice)

லூயிஸ் ஹார்ஸோ Lewis Hartsough (1828-1919) என்ற மெத்தடிஸ்ட் திருச்சபையைத் சேர்ந்த போதகர் ஒருவரால் உள்ளார்ந்த மறுமலர்ச்சியின் பாடலாக எழுதப்பட்டது 'I hear thy welcome voice' எனும் இப்பாடல். இப்பாடலுக்கான இசையையும் இவரே எழுதி ராகம் அமைத்துள்ளார்.

Lewis Hartsough
லூயிஸ் 31 ஆகஸ்டு 1828ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள இதாகா (Ithaca, New York) எனுமிடத்தில் பிறந்தார். The Revivalist எனும் Gospel Hymn புத்தகத்தின் இசைத்தொகுப்பாளராக இவர் தொகுத்த ஏராளமான அற்புதமான பாடல்கள் 1870களில் திருச்சபைகளில் பாடப்பட்டன. ஆண்டவருக்கு நம்மையே அர்ப்பணிக்கும் அவசியத்தை உணர்த்தும் I hear thy welcome voice என்னும் இப்பாடல், நம் திருச்சபைகளில் திருவிருந்தின் நேரத்தில் பாடுவதற்கு உகந்த ஓர் பாடலாகும். கல்வாரி சிலுவையில் ஆண்டவர் நமக்காகப்பட்ட பாடுகளையும், அவர் பாதத்தில் நாம் செய்யவேண்டிய பாவ அறிக்கையையும், ஒரு அமைதலான அர்ப்பணிப்பையும் இப்பாடலின் வரிகள் மட்டுமல்லாமல், ராகமும் நம் உள்ளத்தை உருக்கி உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இப்பாடல் உட்பட அநேக அற்புதமான பாடல்களை எழுதியுள்ள லூயிஸ், 1 ஜனவரி 1919 அன்று மவுன்ட் வெர்மான் என்னுமிடத்தில் (Mount Vernon, Iowa) மறுமைக்குட்பட்டார்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    வா! நீசப்பாவி! வா
என்றென்னைக் கூப்பிட்டீர்
என் தோஷம் தீர, ரட்சகா!
சுத்தாங்கம் பண்ணுவீர்.

அருள் நாயகா!
நம்பி வந்தேனே!
தூய திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.

2.    சீர்கெட்ட பாவி நான்
என் நீதி கந்தையே
என்றாலும் உமதருளால்
துர்க்குணம் மாறுமே

3.    மெய்பக்தி பூரணம்
தேவாவியாலுண்டாம்
உள்ளான சமாதானமும்
நற்சீரும் பெறலாம்

4.    உண்டான நன்மையை
நீர்விர்த்தியாக்குவீர்
இப்பாவ குணத் தன்மையை
நிக்ரகம் பண்ணுவீர்.

5.    ஆ! தூய ரத்தமே!
ஆ! அருள் நாயகா!
ஆ! கிருபா விசேஷமே!
ஆ! லோக ரட்சகா!

I hear thy welcome voice

Post Comment

Friday, January 5, 2018

பாமாலை 229 - அடியார் வேண்டல் (Ellers)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    அடியார் வேண்டல் கேளும், இயேசுவே!
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

2.    எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

3.    பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும், நாயகா;
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

4.    வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

5.    மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

6.    எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.

7.    ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்

இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

Post Comment