சீரில்லாத பாபிஷ்டரே
(SS 113 –
Blessed be the fountain of blood)
Eden Reeder Latta |
”Blessed be the fountain of blood”
என்னும் இந்தப் பாடல் உட்பட
ஆயிரத்து அறுநூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதிய எடின் ரீடர் லத்தா (Eden Reeder
Latta) 1839ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். இந்தப் பாடலுக்கு ராகம் அமைத்தவர் ஹென்றி பெர்க்கின்ஸ்
(Henry Southwick Perkins) என்பவராவார். அநேக
பாடல் புத்தகங்களில் இப்பாடல் “Whiter
than the snow” என்னும்
தலைப்புடனும் இடம்பெற்றிருக்கிறது.
Henry Southwick Perkins |
ஆண்டவராகிய கிறிஸ்து சிலுவையில்
சிந்திய ரத்தத்தையும், அதில் அடங்கியிருக்கும் பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் குறித்த
இப்பாடலை எடின் 1881ம் ஆண்டு எழுதினார். ஆண்டவரின் அன்பைக் குறித்த பாடல்களை எழுதுவது
எடினுக்கு அத்தனை கடினமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஒரே நாளில் 9 பாடல்களை எழுதும் அளவிற்கு ஆற்றல்
பெற்றவராக இருந்தார் எடின். ”Blessed be the fountain of
blood” என்னும் இப்பாடல் எழுதப்பட்டு இசையுடன் வெளியிடப்பட்ட
உடனேயே பிரபலம் அடையத் துவங்கியது. இப்பாடலின் ஆழ்ந்த பொருள் நிறைந்த வரிகள் காரணமாக
ஏராளமான பாடல் புத்தகங்களில் இடம்பெற்றது இப்பாடல்.
“அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும்
நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று
உண்டாயிருக்கும்” (சகரியா 13:1) என்ற தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் இப்பாடலின் பல்லவியை
“Blessed be
the fountain of blood”
என்று எடின் துவங்கியதாக வரலாற்று
அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. சீரில்லாத பாபிஷ்டரே
யேசுநாதர் மரித்ததால்
பாவதோஷம் தீர்ந்திடுமே
ஏகபலியின் ரத்தத்தினால்
நெறி தப்பிப் போவதினால்
நிருமூட நேசரானோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்
வெண்மையாகுவோம்
வெண்மையாகுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்
2. மோக்ஷலோக நாயகரே
தாழ்மையோடு மாந்தனானார்
ஒப்பில்லாத மா நேசரே
முட்கிரீடம் சூட்டப்பட்டார்!
ரட்சை செய்தனராதலால்
நன்றி நினைத்தேயிருப்போம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்
3. குணசிந்தை தீயதெல்லாம்
பக்தி சுத்த சூனியமே
தீவினை ரத்தாம்பரமாம்
சுத்தி செய்வார் ஈண்டில்லையே
அருள் வாக்கை நம்புவதால்
யேசுவண்டை சேர்ந்திடுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்.
1. Blessed be the Fountain of blood,
To a world of sinners revealed;
Blessed be the dear Son of God -
Only by His stripes we are healed.
Tho I’ve wandered far from His fold,
Bringing to my heart pain and woe,
Wash me in the blood of the Lamb,
And I shall be whiter than snow.
Chorus
Whiter than the snow,
Whiter than the snow,
Wash me in the blood of the Lamb,
And I shall be whiter than snow.
2. Thorny was the crown that He wore,
And the cross His body o’ercame;
Grievous were the sorrows He bore,
But He suffered thus not in vain.
May I to that Fountain be led,
Made to cleanse my sins here below;
Wash me in the blood that He shed,
And I shall be whiter than snow.
3. Father, I have wandered from Thee,
Often has my heart gone astray;
Crimson do my sins seem to me
Water cannot wash them away.
Jesus, to the Fountain of Thine,
Leaning on Thy promise, I go;
Cleanse me by Thy washing divine,
And I shall be whiter than snow.
Thanks :
1) Sitthers Publications YouTube Channel for the Tamil Lyrics
***************************************************************
Alternate Lyrics (Old Tamil words like பாபிஷ்டர், நிருமூடர், தூய்தாகுவோம், have been replaced)
1. சீரில்லாத மானிடரே
யேசுநாதர் மரித்ததால்
பாவதோஷம் தீர்ந்திடுமே
ஏகபலியின் ரத்தத்தால்
நெறி தப்பிப் போவதினால்
மதிகெட்டு நீசரானோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்
வெண்மையாகுவோம்
வெண்மையாகுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்
2. மோட்சலோக நாயகரே
தாழ்மையோடு மாந்தனானார்
ஒப்பில்லாத மா நேசரே
முட்கிரீடம் சூட்டப்பட்டார்
ரட்சை செய்தனராதலால்
நன்றி நினைத்தேயிருப்போம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்
3. குணசிந்தை தீயதெல்லாம்
பக்தி சுத்த சூனியமே
தீவினை ரத்தாம்பரமாம்
சுத்தி செய்வார் ஈண்டில்லையே
அருள் வாக்கை நம்புவதால்
யேசுவண்டை சேர்ந்திடுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்
*********************************************************************