பாமாலை 148 – ஆத்துமாக்கள்
மேய்ப்பரே
(Bishop of the souls of men)
Tune : Sherborne
Gerard Moultrie (1829–1885) |
இப்பாடலை
இயற்றியவர் ஜெரார்ட் மோட்ரே (Gerard Moultrie) என்பவர் ஆவார். இவரது காலம் 1829 –
1885. இங்கிலாந்தின் John Moultrie –
Harriet Margaret தம்பதியரின் மகனாகிய இவர் தனது கல்லூரிப் படிப்பை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்
முடித்தார். 1855ம் ஆண்டு கடவுளின் அழைப்பை ஏற்று ஜெரார்ட் ஊழியத்திற்கென தன்னை அர்ப்பணித்து
பல்வேறு திருச்சபைகளில் பணிபுரிந்தார். தனது வாழ்நாளில் அநேக பாடல்களை எழுதிய ஜெரார்ட்
1885ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.
William H. Monk (1823–1889) |
இப்பாடலுக்கான
Sherborne எனும் இந்த ராகத்தை இயற்றியவர் William H Monk ஆவார். இவர் 1823ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் மாநகரில்
பிறந்தார். லண்டன் கிங் கல்லூரியில் இசை ஆசிரியராக இருந்த இவர் பரி. மத்தியாஸ் ஆலயத்தில்
(St. Matthias, Stoke Newington, London) சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு இசை நடத்துனராக
தன் ஊழியத்தைச் செய்தார். உலகம் முழுதும் ஏறக்குறைய
60 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்த Hymns Ancient and Modern என்ற பாடல் புத்தகத்தின்
முதல் பிரதியைத் தொகுத்தவர் இவரே.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.
2. பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவான்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.
3. கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும்.
4. புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.