பாமாலை 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்
Tune : Nettleton
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Praise the Lord O my soul..! I’ve come across many Tamil choristers who, although eager to sing “four part harmony”, find it difficult to master the art, because of their inability to read music notations. This blog is my humble attempt to help such friends in Christ, to continue to sing four part harmony, even without being able to read notations. So here it is made easy for you… listen to the parts.. Practice.. and Sing unto the Lord.
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
பாடலின் மூலம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப்பாடலின் மூல வடிவத்தை, ஃபோர்துனாதஸ் [Venantius Honorius Fortunatus Clementianus (c.530-609)] என்ற பேராயர் எழுதினார். தனது இளவயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஃபோர்துனாதஸ், அச்சிறுவயதில் பார்வைத்திறன் குறைந்தவராய் இருந்தார். St Martin of Tours என்ற ஆலயத்திலுள்ள விளக்கிலிருந்த எண்ணெயை இவர் கண்களில் பூசியதன் மூலம் இவர் பார்வை தெளிவுபெற்றது’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஃபோர்துனாதஸ் இப்பாடலை 10 சரணங்கள் கொண்டதாக எழுதினார். அதன் முதல் 5 சரணங்கள் லெந்து காலத்திலும், அடுத்த 5 சரணங்கள் புனித வெள்ளி ஆராதனையிலும் பாடப்பட்டன என்று கருதப்படுகிறது.
6ம் நூற்றாண்டில் ஃபோர்துனாதஸ் எழுதிய இப்பாடல் 12ம் நூற்றாண்டில் தாமஸ் [Saint Thomas Aquinas (1225-1274)] என்ற போதகரால் ” “Pange Lingua Gloriosi Corporis Mysterium” என்ற கவிதை வடிவம் பெற்றது. பின்னர் 19ம் நூற்றாண்டில் இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.
Rev Fr John Mason Neale |
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
‘நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. கலாத்தியர் 6 : 14
இப்பாடலின் இரண்டாவது வரியாகிய, ‘சிலுவைக் காட்சி பார்க்கையில்’ என்பதில், ‘பார்க்கையில்’ என்பது ஆங்கிலத்தில், Survey என்றிருக்கிறது. இப்பதம் நிலத்தை அளப்பதைக் குறிக்கும். நிலத்தை அளப்பவன், நிலத்தின் இருப்பிடம், வடிவம், பரப்பு, எல்கைகள் முதலியவற்றைத் தன் கண்களினாலும், அளக்கும் கருவிகளினாலும் தன் மனதில் திட்டவட்டமாகக் கணிக்கவேண்டும். இதையே இப்பாடலை எழுதியவர் தன் மனதில் எண்ணியிருக்கலாம். கிறிஸ்தவர்களாகிய நாம், அருள்நாதர் உயிர்துறந்த கல்வாரிச் சிலுவைக் காட்சியை இவ்விதமாகவே ஆராயவேண்டும்.
சிலுவைக் காட்சியை நாம் நுட்பமாக ஆராயும்போது, நமது வாழ்க்கையிலுள்ள குறைகள் தென்படும். நமது சாதனைகளைக் குறித்து பெருமைபாராட்ட இடமிராது. மேலும், சிலுவைக்காட்சி வேதனை கொடுக்கும் ஒரு சின்னமாகத் தோற்றமளிக்கும். ஆண்டவரின் முகத்தில் முள்முடியினால் வடிந்த இரத்தம் பாய்ந்தோடுவதையும், கைகளிலும், கால்களிலும், ஆணிகளினால் பாய்ந்த இரத்தத்தையும் காண்கிறோம். கல்வாரிச் சிலுவை, ‘பேரன்பும், துன்பும் கலந்தே பாய்ந்தோடும்’ காட்சியையும் அளிக்கிறது. நாம் இன்னும் பாவிகளாயிருக்கையில், அவர் நம்மை நேசித்தார்.
ஆகவே, இச்சிலுவைக் காட்சியின்முன் நாம் தலைகுனிந்து, நம்மை அவருக்கு அர்ப்பணம் செய்ய ஏவப்படுகிறோம். சராசரங்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமாய் இருந்தாலும், அவை ஆண்டவரின் அன்புக்கு ஈடாகமாட்டா.
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர் (Isaac Watts) 1674ம் ஆண்டு, ஜூலை மாதம் 17ம் தேதி, இங்கிலாந்தில் Southampton நகரில், ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார். அவரது தந்தை ஓர் ஆசிரியர். Southampton நகரிலுள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் குருவானவர், ஐசக் வாட்சுக்கு லத்தீன், கிரேக்க, எபிரேய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.
1690ல் அவர் சுய ஆளுகைச் சபையைச் சேர்ந்த ஒரு வேதசாஸ்திரப் பயிற்சி நிலையத்தில் பயின்று, 1697ல் தமது இருபத்துநான்காவது வயதில், லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகைச் சபையின் போதகராகத் திருப்பணியாற்ற ஆரம்பித்தார். சில ஆண்டுகள் பணியாற்றியபின், அவரது உடல் நலம் குன்றியதால், திருப்பணியை விட்டு, 1714 முதல், ஹெர்போர்டுஷயரிலிருந்த தமது நண்பர், ஸர் தாமஸ் அபினியுடன் (Sir Thoma Abney) நிரந்தரமாகத் தங்கியிருக்கவேண்டிவந்தது.
அவர் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தபோது, அக்காலத்திலிருந்த கிறிஸ்தவப் பாட்டுப் புத்தகங்களில் காணப்பட்ட பாடல்களில் அதிருப்தியடைந்து, தாமே பல பாடல்கள் எழுதினார். இரண்டு ஆண்டுகளாக அவர் எழுதிய பாடல்களை, ‘ஆவிக்குரிய பாடல்களும், ஞானப்பாட்டுகளும்’ (Hymns and Spiritual songs) என்னும் பெயருடன் வெளியிட்டார். ‘என் அருள்நாதா இயேசுவே’ என்னும் இப்பாடல் கலாத்தியர் 6:14ம் வசனத்தின்பேரில், 1707ம் ஆண்டு எழுதப்பட்டது. பிரபல ஆங்கிலக்கவிஞரான மேத்யூ அர்னால்டு, இப்பாடலைப் பார்த்து, ‘ஆங்கிலமொழியில் எழுதப்பட்ட பாடல்களில் மிகச்சிறந்த பாடல்’ எனப் போற்றியுள்ளார். தனது மரணப் படுக்கையிலும் இதையே கடைசியாகப் பாடி மகிழ்ந்தார்.
இப்பாடலுக்கு புகள்பெற்ற அமெரிக்க இசை வல்லுநரான லோவல் மேசன் "ஹாம்பர்க்" என்ற ராகத்தை அமைத்தார். எபிரேய தேவாலையத்தில் பாடும் பாடல் ராகத்தின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டது. லோவன் மேசன் "உம்மண்டை கர்த்தரே" போன்ற பிரபல பாடல்களுக்கு ராகம் அமைத்தவர்.
🎤🎷🎺🎻🎸🎶🎵🎼🎧🎧🎤
............
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano