Wednesday, September 25, 2013

பாமாலை 226 - காலந்தோறும் தயவாக (Irby)

பாமாலை 226 - காலந்தோறும் தயவாக 
Tune : Irby

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.  காலந்தோறும் தயவாக
தேவரீர் அளித்திடும்
பலவித நன்மைக்காக
என்ன ஈடுதான் தகும்?
எங்கள் வாயும் உள்ளமும்
என்றும் உம்மைப் போற்றிடும்.
 
2.  மாந்தர் பண்படுத்தி வித்தை
பூமியில் விதைக்கிறார்
கர்த்தரே அன்பாக அதை
முளைத்தோங்கச் செய்கிறார்
ஏற்ற காலம் மழையும்
பெய்து பூண்டை நனைக்கும்.
 
3.  உம்முடைய சித்தத்தாலே
காற்று வெயில் வீசுமே
கால மழை பனியாலே
பயிர்கள் செழிக்குமே
உழுவோர் பிரயாசம் நீர்
சித்தியாகச் செய்கிறீர்.
 
4.  ஆதலால் மகிழ்ந்து நாங்கள்
உம்மை அன்பாய்த் துதிப்போம்
தாழ்மையோடு உமக்கெங்கள்
நெஞ்சத்தையே படைப்போம்
தேகம் போஷிக்கின்ற நீர்
ஆவியையும் போஷிப்பீர்.

Post Comment

Sunday, September 1, 2013

பாமாலை 326 - ரட்சா பெருமானே

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    ரட்சா பெருமானே, பாரும்
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடி வந்து நிற்கிறோம்.
இயேசுநாதா, இயேசுநாதா,
உந்தன் சொந்தமாயினோம்.
 
2.    மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்
இயேசுநாதா, இயேசுநாதா,
மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்.
 
3.    நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
இயேசுநாதா, இயேசுநாதா,
ஒருபோதும் கைவிடீர்.
 
4.    ஜீவ காலபரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
இயேசுநாதா, இயேசுநாதா,
ஊழி காலம் வாழ்விப்பீர்.

Post Comment

பாமாலை 175 - ஆதியில் இருளை (Moscow)

பாமாலை 175 - ஆதியில் இருளை 
Thou Whose Almighty Word
Tune: Moscow

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி, கர்த்தாவே,
பிரகாசிப்பீர்.
 
2.  நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்,
கண்ணற்றோர் காணவும்,
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.
 
3.  சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல் பறந்தே,
பார் இருள் நீக்கியே
பிரகாசிப்பீர்.
 
4.  ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.

Post Comment

பாமாலை 15 - அலங்கார வாசலாலே (All saints)

பாமாலை 15 - அலங்கார வாசலாலே 
Thut mir auf die schone pforte
Tune : All saints

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்
இங்கே தெய்வ சமூகம்,
மெய் வெளிச்சம், பாக்கியம்.
 
2.  கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.
 
3.  பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.
 
4.  நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.
 
5.  விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே.
 
6.  சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே
தாரும் ஜீவ பானத்தை
தீரும் பசிதாகத்தை.

Post Comment