Wednesday, September 25, 2013

பாமாலை 226 - காலந்தோறும் தயவாக (Irby)

பாமாலை 226 - காலந்தோறும் தயவாக 
Tune : Irby

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.  காலந்தோறும் தயவாக
தேவரீர் அளித்திடும்
பலவித நன்மைக்காக
என்ன ஈடுதான் தகும்?
எங்கள் வாயும் உள்ளமும்
என்றும் உம்மைப் போற்றிடும்.
 
2.  மாந்தர் பண்படுத்தி வித்தை
பூமியில் விதைக்கிறார்
கர்த்தரே அன்பாக அதை
முளைத்தோங்கச் செய்கிறார்
ஏற்ற காலம் மழையும்
பெய்து பூண்டை நனைக்கும்.
 
3.  உம்முடைய சித்தத்தாலே
காற்று வெயில் வீசுமே
கால மழை பனியாலே
பயிர்கள் செழிக்குமே
உழுவோர் பிரயாசம் நீர்
சித்தியாகச் செய்கிறீர்.
 
4.  ஆதலால் மகிழ்ந்து நாங்கள்
உம்மை அன்பாய்த் துதிப்போம்
தாழ்மையோடு உமக்கெங்கள்
நெஞ்சத்தையே படைப்போம்
தேகம் போஷிக்கின்ற நீர்
ஆவியையும் போஷிப்பீர்.

Post Comment

No comments:

Post a Comment