‘Four Part Harmony’ பாடப்படும்
பாரம்பரியமிக்க ஆலயங்களில், பாடகர் குழுவினர் Descant பாடுவதை
நம்மில் அநேகர் கேட்டிருக்கலாம். (தெரியாதவர்களுக்காக
: Descant என்பது ஒரு ornate/elaborate
"counter melody" to showcase the higher range. அல்லது பாடலுக்கு மேலாக
உச்சஸ்தாயியில் பாடப்படும் ஒரு Melody எனக்கொள்ளலாம். Descant பற்றிக்
கேள்விப்பட்டிராதவர்கள்
YouTubeல் Descant Hymns என்று தேடிப்பார்க்கவும். நிறைய
பாடல்கள் கிடைக்கின்றன.). நம்
பாமாலை புத்தகத்தில் உள்ள பாடல்களின் ஆங்கில/ஃப்ரெஞ்ச்/ஜெர்மன் பதிப்பு புத்தகங்களில்
Descant கொடுக்கப்பட்டிருக்க
வாய்ப்புள்ளது. Descant என்பது
பொதுவாக பாடல் முழுவதும் பாடப்படாமல்,
ஒரு பாமாலையின் நிறைவாக உள்ள பல்லவியில்
அல்லது அதற்கு முந்தின பல்லவியில்
பாடப்படுகிறது. பாடகர்
குழுவில் உள்ள பாடகர்களின் எண்ணிக்கையை
வைத்து, இரண்டு அல்லது மூன்று
(High Notes பாடக்கூடிய) பாடகர்கள் Descantஐ முயற்சிக்கலாம்.
உங்கள் ஆலயப் பாடகர் குழுவில்
Descant புதிதாக முயற்சி/பயிற்சி செய்யப்போகிறீர்களென்றால்,
‘அலங்கார வாசலாலே’ ஒரு சிறந்த துவக்கமாக
அமையும். மிக
எளிதாக அமைக்கப்பட்டுள்ள Descant இப்பாடலுக்கு மேலும் சிறப்பூட்டுகிறது.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant
Descant with Unison
DESCANT
1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்
இங்கே தெய்வ சமூகம்,
மெய் வெளிச்சம், பாக்கியம்.
2. கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.
3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.
4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.
5. விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே.
6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே
தாரும் ஜீவ பானத்தை
தீரும் பசிதாகத்தை.
"Open now thy gates of beauty..."
ReplyDeletehttps://youtu.be/jnKa_XxJwD8
Delete