Friday, April 27, 2018

பாமாலை 101 - இயேசுவே நான் நீர் பட்ட

பாமாலை 101 - இயேசுவே நான் நீர் பட்ட
Jesu deine Passion

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.    இயேசுவே, நான் நீர் பட்ட
பாடும் வேதனையும்
கருத்தாய்த் தியானிக்க
உமதாவியையும்
பக்தியையும் தயவாய்
தந்தென் மீட்புக்காக
வதையுண்ட ரூபமாய்
என்முன் நிற்பீராக.

2.    நீரே பட்ட துயரம்
ரத்த வேர்வை கட்டு
குட்டுமிழ்நீர் தூஷணம்
வாரடி இக்கட்டு
சிலுவையின் மரணம்
பாடெல்லாவற்றையும்
அடியேனின் இதயம்
உற்றுப் பார்த்தசையும்.

3.    இயேசுவே, நான் உத்தம
மனஸ்த்தாபமுற்று,
தேவரீரை வாதித்த
பாவத்தை வெறுத்து
நீக்க எனக்கன்பினால்
துணைசெய்து வாரும்,
மீண்டும் உம்மைப் பாவத்தால்
வாதிக்காமல் காரும்.

5.    பாவம் மனச் சாட்சியைக்
குத்தி, தீக்காடாக
எரியும் நரகத்தை
காட்டும்போதன்பாக
துணைநின்றென் நெஞ்சிலே
உம்மைப் பற்றிக்கொள்ளும்
விசுவாசத்தை நீரே
தந்து திடன் சொல்லும்.

6.    நான் என் சிலுவையையும்
களிப்பாய்ச் சுமந்து,
தாழ்மை பொறுமையையும்
உம்மால் கற்றுவந்து,
உம்மைப் பதில் நேசிக்க
உதவும்; நான் சொல்லும்
ஏழைத் துதி உம்முட
செவிசாய்த்துக் கொள்ளும்.

Post Comment

1 comment: