Tuesday, July 23, 2019

பாமாலை 122 - அல்லேலூயா ஆ மாந்தரே

பாமாலை 122 – அல்லேலூயா! ஆ மாந்தரே
(Alleluya! O Sons and Daugh­ters, Let Us Sing!)
Tune: O FILII ET FILIAE

அல்லேலூயா! ஆ மாந்தரே’ எனும் இப்பாடல், கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று, நம் திருச்சபைகளில் மிக அரிதாகவே இப்பாடல் பாடப்படுகிறது.  இப்பாடலை எழுதியவர் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த Jean Tisserand எனும் ஃப்ரெஞ்சு நாட்டின் துறவி என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.

John Mason Neale
ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்.  திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.  உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்.  திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்.  மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்.  அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.

3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!

5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.

6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!

Post Comment

Sunday, July 14, 2019

பாமாலை 354 – என் களிப்புக்குக் காரணம்

பாமாலை 354 – என் களிப்புக்குக் காரணம்
(My God the spring of all my joys)

Sir Isaac Watts
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர் 1674ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி, இங்கிலாந்தில் சௌதாம்டன் (Southampton) நகரில், தமது பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆசிரியர். இவரது பாட்டனார் புகழ்பெற்ற கப்பற்படைத் தலைவரான பிளேக் (Admiral Blake) என்பவரின் கீழ் பணியாற்றிய ஒரு மாலுமியாவார்.  பாட்டனார் பட்டயத்தால் சாதித்ததை விட வாட்ஸ் தமது பேனாவால் கிறிஸ்தவ உலகிற்கு அரிய காரியங்களை சாதித்துள்ளார்.  அவரது பதினாறாம் வயதில் சுய ஆளுகை சபையை சேர்ந்த ஒரு திருமறைப் பயிற்சி நிலையத்தில் பயின்று, தமது இருபத்து நான்காம் வயதில் லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகை சபையின் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின், தன் உடல்நிலை குன்றியதால், திருப்பணியை விட்டுத் தமது நண்பர் ஸர் தாமஸ் அபினியுடன் ஆயுள் முழுவதும் தங்கியிருந்தார்.

வாட்ஸ் இருபது வயதாயிருக்கையில் சௌதாம்டன் நகரிலுள்ள ஒரு சிற்றாலயத்தில் ஆராதனைக்குச் சென்றார். அச்சபையில் சங்கீதங்களுடன், பார்ட்டன் போதகர் இயற்றிய சில ஞானப்பாடல்களும் பாடப்பட்டு வந்தன.  இப்பாடல்களில் வாட்ஸ் அதிருப்தியடைந்து, வீட்டுக்கு வந்தவுடன் இதைத் தன் தந்தையிடம் கூறினார். அவர், ‘அப்படியானால் வாலிபனே, இதைவிட மேலான பாடல்களை நீ எழுதலாமே?’ எனக்கூறினார். வாட்ஸ் இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, பாடல்கள் எழுத ஆரம்பித்தார்.  அவர் எழுதிய பாடல்களை, “Hymns and Spiritual Songs’ என்னும் பெயருடன் வெளியிட்டார். அவர் நானூற்று ஐம்பத்து நான்கு பாடல்கள் எழுதியுள்ளார். அப்பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பவை:

·         என் அருள் நாதா இயேசுவே – பாமாலை 103
·         வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் – பாமாலை 168
·         பகலோன் கதிர் போலுமே – பாமாலை 212
·         கர்த்தாவே யுகயுகமாய் – பாமாலை 253

எத்தனையோ பாடல்களை வாட்ஸ் தம் வாழ்நாளில் எழுதியிருந்தாலும் ‘என் களிப்புக்குக் காரணம்’ எனும் இப்பாடல் குறைகளற்ற ஒரு பாடல் என்று பாடல் ஆய்வர்களால் பாராட்டப்படுகிறது. அவர்கள் இப்பாடலை ‘அடக்கமுடியாத மகிழ்ச்சி மற்றும் அசைக்கமுடியாத வெற்றிக்கான நம்பிக்கையின் வெளிப்பாடு’ என்கின்றனர்.

வாட்ஸ் பண்டிதர் ‘கிறிஸ்தவப் பாடல்களின் பிதா’ என அழைக்கப்படுகிறார். அவர் 1748ம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ம் தேதி, தமது 75ம் வயதில் காலமானார். அவரது ஞாபகார்த்தமாக, லண்டன் மாநகரிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஆபி என்னும் தேசியப் பேராலயத்தில் ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.


William Jones
இப்பாமாலை பல்வேறு ராகங்களில் பாடப்பட்டாலும் St.Stephen எனும் இந்த ராகம் உலகமெங்கிலும் பரவலாக பல்வேறு திருச்சபைகளில் இன்றளவும் பாடப்படுகிறது.  இந்த ராகத்தை இயற்றிய வில்லியம் ஜோன்ஸ் (William Jones) என்பவர் ஆவார். இவர் 1726ம் ஆண்டு இங்கிலாந்தின் லோவிக் நகரத்தில் பிறந்தார் (Lowick, Northamptonshire, England).  ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு பயின்ற இவர் தம் வாழ்நாளில் பல்வேறு இசைத்தொகுப்புகளை இயற்றி வெளியிட்டு, 1800ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. என் களிப்புக்குக் காரணம்,
என் நல்ல நாதரே;
பகலில் நீர் என் மகிமை,
ராவில் என் ஜோதியே.

2. இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்;
நீர் விடிவெள்ளி, ஆனதால்
என்னில் பிரகாசியும்.

3. இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்,
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்.

4. நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்;
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்.

Post Comment

Sunday, July 7, 2019

பாமாலை 112 - மாசற்ற ஆட்டுக்குட்டி

பாமாலை 112 - மாசற்ற ஆட்டுக்குட்டி
(O Lamm Gottes, unschuldig)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலே பொங்கி,
பொல்லாப்பைச் சாவால் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கும்,

2. மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலே பொங்கி,
பொல்லாப்பைச் சாவால் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கும்,

3. மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலே பொங்கி,
பொல்லாப்பைச் சாவால் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
நீர் சமாதானம் தாரும்.

Post Comment