பாமாலை 354 – என் களிப்புக்குக்
காரணம்
(My God the
spring of all my joys)
Sir Isaac Watts |
இப்பாடலை
எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர் 1674ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி, இங்கிலாந்தில் சௌதாம்டன்
(Southampton) நகரில், தமது பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார்.
இவரது தந்தை ஒரு ஆசிரியர். இவரது பாட்டனார் புகழ்பெற்ற கப்பற்படைத் தலைவரான பிளேக்
(Admiral Blake) என்பவரின் கீழ் பணியாற்றிய ஒரு மாலுமியாவார். பாட்டனார் பட்டயத்தால் சாதித்ததை விட வாட்ஸ் தமது
பேனாவால் கிறிஸ்தவ உலகிற்கு அரிய காரியங்களை சாதித்துள்ளார். அவரது பதினாறாம் வயதில் சுய ஆளுகை சபையை சேர்ந்த
ஒரு திருமறைப் பயிற்சி நிலையத்தில் பயின்று, தமது இருபத்து நான்காம் வயதில் லண்டன்
மாநகரில் ஒரு சுய ஆளுகை சபையின் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய
பின், தன் உடல்நிலை குன்றியதால், திருப்பணியை விட்டுத் தமது நண்பர் ஸர் தாமஸ் அபினியுடன்
ஆயுள் முழுவதும் தங்கியிருந்தார்.
வாட்ஸ்
இருபது வயதாயிருக்கையில் சௌதாம்டன் நகரிலுள்ள ஒரு சிற்றாலயத்தில் ஆராதனைக்குச் சென்றார்.
அச்சபையில் சங்கீதங்களுடன், பார்ட்டன் போதகர் இயற்றிய சில ஞானப்பாடல்களும் பாடப்பட்டு
வந்தன. இப்பாடல்களில் வாட்ஸ் அதிருப்தியடைந்து,
வீட்டுக்கு வந்தவுடன் இதைத் தன் தந்தையிடம் கூறினார். அவர், ‘அப்படியானால் வாலிபனே,
இதைவிட மேலான பாடல்களை நீ எழுதலாமே?’ எனக்கூறினார். வாட்ஸ் இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு,
பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய பாடல்களை,
“Hymns and Spiritual Songs’ என்னும் பெயருடன் வெளியிட்டார். அவர் நானூற்று ஐம்பத்து
நான்கு பாடல்கள் எழுதியுள்ளார். அப்பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பவை:
·
என்
அருள் நாதா இயேசுவே – பாமாலை 103
·
வெள்ளங்கி
பூண்டு மாட்சியாய் – பாமாலை 168
·
பகலோன்
கதிர் போலுமே – பாமாலை 212
·
கர்த்தாவே
யுகயுகமாய் – பாமாலை 253
எத்தனையோ
பாடல்களை வாட்ஸ் தம் வாழ்நாளில் எழுதியிருந்தாலும் ‘என் களிப்புக்குக் காரணம்’ எனும்
இப்பாடல் குறைகளற்ற ஒரு பாடல் என்று பாடல் ஆய்வர்களால் பாராட்டப்படுகிறது. அவர்கள்
இப்பாடலை ‘அடக்கமுடியாத மகிழ்ச்சி மற்றும் அசைக்கமுடியாத வெற்றிக்கான நம்பிக்கையின்
வெளிப்பாடு’ என்கின்றனர்.
வாட்ஸ்
பண்டிதர் ‘கிறிஸ்தவப் பாடல்களின் பிதா’ என அழைக்கப்படுகிறார். அவர் 1748ம் ஆண்டு, நவம்பர்
மாதம் 25ம் தேதி, தமது 75ம் வயதில் காலமானார். அவரது ஞாபகார்த்தமாக, லண்டன் மாநகரிலுள்ள
வெஸ்ட்மினிஸ்டர் ஆபி என்னும் தேசியப் பேராலயத்தில் ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.
William Jones |
இப்பாமாலை
பல்வேறு ராகங்களில் பாடப்பட்டாலும் St.Stephen எனும் இந்த ராகம் உலகமெங்கிலும் பரவலாக
பல்வேறு திருச்சபைகளில் இன்றளவும் பாடப்படுகிறது.
இந்த ராகத்தை இயற்றிய வில்லியம் ஜோன்ஸ் (William Jones) என்பவர் ஆவார். இவர்
1726ம் ஆண்டு இங்கிலாந்தின் லோவிக் நகரத்தில் பிறந்தார் (Lowick, Northamptonshire,
England). ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு
பயின்ற இவர் தம் வாழ்நாளில் பல்வேறு இசைத்தொகுப்புகளை இயற்றி வெளியிட்டு, 1800ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. என் களிப்புக்குக்
காரணம்,
என் நல்ல
நாதரே;
பகலில் நீர்
என் மகிமை,
ராவில் என்
ஜோதியே.
2. இருளிலே
நீர் தோன்றினால்
என் மனம்
மகிழும்;
நீர் விடிவெள்ளி,
ஆனதால்
என்னில்
பிரகாசியும்.
3. இயேசுவைத்
தந்த தயவு
என் செல்வமானதால்,
என் ஆத்துமா
சந்தோஷித்து
மகிழும்
வாழ்வினால்.
4. நரகத்துக்கும்
சாவுக்கும்
அஞ்சாமல்
இருப்பேன்;
தெய்வன்பும்
விசுவாசமும்
கொண்டு நான்
வெல்லுவேன்.
Good effort
ReplyDelete