Friday, June 26, 2020

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் (Southgate)

பாமாலை 250 – யாரினும் மேலான அன்பர்
(One there is, above all others)
Tune: Southgate


John Newton
இப்பாடலை எழுதியவர் ஜான் நியூட்டன் (John Newton).  இவரது காலம் 1725-1807. ஜான் ஏழு வயதாய் இருக்கும்போது அவரின் தாயார் மரித்துப்போக, தன் தந்தையுடன் கப்பல் பணியாளனாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து வந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகள் விற்கும் கப்பல்களில் மாலுமியாகவும், கப்பற் தலைவனாகவும் பணியாற்றிய நியூட்டன், பின்னர் இறைப்பணிக்கென்று தம்மை ஒப்புவித்து, இங்கிலாந்தின் Anglican திருச்சபையின் போதகராக அபிஷேகம் பெற்றார்.  பாடல்கள் எழுதுவதில் மிகுந்த புலமை பெற்றிருந்த ஜான் நியூட்டன் தம் இறைப்பணிக்காலத்தில் ”One there is, above all others” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.  அவற்றுள் ‘Amazing Grace’ எனும் மிகப் பிரபலமான ஆங்கிலப்பாடலும் ஒன்றாகும்.  “யாரினும் மேலான அன்பர்’ எனும் இப்பாடல் நம் பாமாலை புத்தகத்தில் ‘வாலிபர் பாக்கள்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1. யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலுங் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!

2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா நேசரே!
பற்றிக் கொண்ட என்னை விடார்,
மா நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக் கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!

3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும், நில்லு;
நேரே மோட்ச பாதை செல்லு
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!

4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மா நேசரே!
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்;
மா நேசரே!
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா நேசரே!

Post Comment

Sunday, June 7, 2020

பாமாலை 247 - கிறிஸ்துவின் வீரரே (St. Ethelwald)

பாமாலை 247 – கிறிஸ்துவின் வீரரே
Soldiers of Christ arise
Tune: St. Ethelwald


William Henry Monk
இப்பாடலுக்கான St. Ethelwald எனும் இந்த ராகத்தை இயற்றியவர் William Henry Monk ஆவார்.  இவர் 1823ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் பிறந்தார். லண்டன் கிங் கல்லூரியில் இசை ஆசிரியராக இருந்த இவர் பரி. மத்தியாஸ் ஆலயத்தில் (St. Matthias, Stoke Newington, London) சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு இசை நடத்துனராக தன் ஊழியத்தைச் செய்தார்.  உலகம் முழுதும் ஏறக்குறைய 60 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்த Hymns Ancient and Modern என்ற பாடல் புத்தகத்தின் முதல் பிரதியைத் தொகுத்தவர் இவரே.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano











































1. கிறிஸ்துவின் வீரரே,
சர்வாயுதத்தையும்
கர்த்தர் ஈயும் பலத்தாலே
எழுந்தணிந்திடும்.

2. அத்திவ்விய பலத்தால்
வல்லமை அடைந்தார்,
சேனைக் கர்த்தாவை நம்பினால்
மெய் வீரர் ஆகுவார்.

3. அவர் மா பலத்தால்
ஸ்திரமாய் நின்றுமே
சர்வாயுதத்தைக் கர்த்தரால்
தரித்துக்கொள்ளுமே.

4. இருளின் சக்தியை
மிதித்து வெல்லவும்,
பலத்தின் மேலும் பலத்தை
அடைந்து போர் செய்யும்.

5. போர் ஓய்ந்து, வேலையை
முடித்தபின்னர் நீர்
கிறிஸ்துவால் வாடா கிரீடத்தை
அணிந்துகொள்ளுவீர்.

6. பிதாவும் ஆவியும்
உம்மோடு இயேசுவே
திரியேக தெய்வமாய் என்றும்
மகிமை ஏற்பாரே.

Post Comment

பாமாலை 372 - ஜெபத்தின் ஆவலை (Franconia)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1. ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தேவாவி, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2. பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்
மேலான நித்ய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3. எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலை நிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4. தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச் செய்திடும்.


Post Comment