Sunday, December 4, 2022

பாமாலை 64 - திவ்விய பாலன் பிறந்தீரே (Clarion)

பாமாலை 64 - திவ்விய பாலன் பிறந்தீரே 
Tune : Clarion

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    திவ்ய பாலன் பிறந்தீரே
கன்னி மாதா மைந்தன் நீர்
ஏழைக் கோலம் எடுத்தீரே
சர்வ லோகக் கர்த்தன் நீர்

2.    பாவ மாந்தர் மீட்புக்காக
வான மேன்மை துறந்தீர்
திவ்ய பாலா தாழ்மையாக
மண்ணில் தோன்றி ஜெனித்தீர்

3.    லோக ராஜா வாழ்க வாழ்க
செங்கோல் தாங்கும் அரசே
பூமியெங்கும் ஆள்க ஆள்க
சாந்த பிரபு இயேசுவே

4.    தேவரீரின் ராஜ்யபாரம்
நித்ய காலமுள்ளது
சர்வலோக அதிகாரம்
என்றும் நீங்கமாட்டாது

5.    வல்ல கர்த்தா பணிவோடு
ஏக வாக்காய் போற்றுவோம்
நித்ய தாதா பக்தியோடு
நமஸ்காரம் பண்ணுவோம்

6.    ஸ்தோத்திரம் கர்த்தாதி கர்த்தா
ஞானத்துக்கெட்டாதவர்
ஸ்தோத்திரம் ராஜாதி ராஜா
ஆதியந்தமற்றவர்
****************************

Post Comment

பாமாலை 58 - இரக்கமுள்ள மீட்பரே (Alstone)

பாமாலை 58 - இரக்கமுள்ள மீட்பரே 
Tune : Alstone

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    இரக்கமுள்ள மீட்பரே
நீர் பிறந்த மா நாளிலே
ஏகமாய்க் கூடியே நாங்கள்
ஏற்றும் துதியை ஏற்பீரே

2.    பெத்தலை நகர் தனிலே
சுத்த மா கன்னிமரியின்
புத்திரனாய் வந்துதித்த
அத்தனே மெத்த ஸ்தோத்திரம்

3.    ஆதித் திரு வார்த்தையான
கோதில்லா இயேசு கர்த்தனே
மேதினியோரை ஈடேற்ற
பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்

4.    பாவம் சாபம் யாவும் போக்க
பாவிகளைப் பரம் சேர்க்க
ஆவலுடன் மண்ணில் வந்த
அற்புத பாலா ஸ்தோத்திரம்

5.    உன்னதருக்கே மகிமை
உலகினில் சமாதானம்
இத்தரை மாந்தர்மேல் அன்பு
உண்டானதும்மால் ஸ்தோத்திரம்

6.    பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்
பூலோக பொக்கிஷங்களும்
எங்களுக்கு எல்லாம் நீரே
தங்கும் நெஞ்சத்தில் ஸ்தோத்திரம்
****************************

Post Comment

பாமாலை 55 - அருளின் ஒளியைக் கண்டார் (St Stephen)

பாமாலை 55 - அருளின் ஒளியைக் கண்டார் 
(The people that in darkness)
Tune : St Stephen

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச

2.    ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்

3.    கர்த்தன் பிறந்த பாலகன்
கர்த்தத்துவமுள்ளோன்
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்

4.    ஆலோசனையின் கர்த்தனே
சாலவே வல்லோனே
பூலோக சமாதானமே
மேலோக தந்தையே

5.    தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்
****************************

Post Comment

பாமாலை 63 - சபையே இன்று (Antioch)

பாமாலை 63 - சபையே இன்று 
Tune : Antioch (Joy to the World)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


 


1.    சபையே இன்று வானத்தை
திறந்து தமது
சுதனைத் தந்த கர்த்தரை
துதித்துக் கொண்டிரு

2.    பிதாவுக்கொத்த இவரே
குழந்தை ஆயினார்
திக்கற்று முன்னணையிலே
ஏழையாய்க் கிடந்தார்

3.    தெய்வீக ஸ்பாவம் நம்மிலே
உண்டாக ஆண்டவர்
நரரின் ஸ்பாவமாய் இங்கே
வந்து பிறந்தனர்

4.    சிறியோராக ஆண்டவர்
பலத்தை மாற்றினார்
பண்செய்வன் ரூபை சிஷ்டிகர்
தாமே எடுக்கிறார்

5.    அவர் புவியில் பரம
இராஜ்ஜியத்தையே
உண்டாக்க வந்தோராகிய
தாவீதின் மைந்தனே

6.    தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம்
இதென்ன அற்புதம்?
இதுன்னத சிநேகம் ஆம்
அன்பதின் பூரணம்

7.    திரும்பப் பரதீசுக்கு
வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று
மகிழ்ந்து பாடுவோம்
****************************











Post Comment

Friday, October 14, 2022

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் உண்டு (Sweet Home)

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் உண்டு 
There's a friend for little Children
Tune : Sweet Home


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.

2.    பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச நாட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ?

3.    பாலரே ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டில் நீர்
நல் மீட்பரின் பேரன்பால்
பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்.

4.    பாலரே, ஓர் கீதம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட
ஓர் வீணையும் உண்டே;
அந்நாட்டின் இன்பம் எல்லாம்
நம் மீட்பர்க்குரிமை,
நீர் அவரிடம் வாரும்,
ஈவார் அவ்வின்பத்தை.

Post Comment

Friday, September 9, 2022

நீரே என் காட்சி (Be Thou My Vision)

நீரே என் காட்சி
Be Thou my vision
Tune : Irish Traditional Melody 

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. நீரே என் காட்சி பர வாசரே,
நீரன்றி வாழ்வில்லை என் நேசரே,
அல்லும் பகலும் என் நினைவின்பம்,
துயிலிலும் உம் ப்ரசன்னம் தீபம்.

2.  நீரே என் ஞானம் என் சத்ய வேதம்
உம்மில் என்றென்றும் நான் நிலைக்கவும்
நீரே எந்தன் பிதா நான் உம் மைந்தன்
என்னில் நிறைந்து நீர் வாசம் செய்யும்

3.  கேடகம் நீரே என் சத்ரு வெல்வேன்
என் கனம் பூரிப்பும் நீர் என்றுமே
சுகித்துத் தங்க என் கோட்டை நீரே
சேரும் தேவா என்னை மோட்ச வீட்டில்.

4.  நீரே என் ஆஸ்தி இன்றும் என்றென்றும்
பொன் பொருள் புகழ் இச்சியேன் நானும்;
எம் இருதய படம் ஆள்வோர் நீர்
தேவாதி தேவா என் செல்வம் நீரே

5.  தேவாதி தேவா ஜெய வீரனாய்,
பரகதி சேர வாஞ்சிக்கிறேன்
மா ஆத்ம நேசா நீர் நித்தியமாய்,
மாறா உம் காட்சி நல்கி தேற்றுமேன்.
****************************************************
Be Thou my vision, O Lord of my heart
Naught be all else to me, save that Thou art
Thou my best thought, by day or by night
Waking or sleeping, Thy presence my light

Be Thou my wisdom, and Thou my true word
I ever with Thee and Thou with me, Lord
Thou my great Father, and I Thy true son
Thou in me dwelling and I with Thee one

Riches I heed not, nor vain, empty praise
Thou mine inheritance, now and always
Thou and Thou only first in my heart
High King of heaven, my treasure Thou art

High King of heaven, my victory won
May I reach heaven's joys, O bright heaven's sun
Heart of my own heart, whatever befall
Still be my vision, O ruler of all
****************************************************
Be Thou My Vision

Post Comment

Wednesday, August 3, 2022

பாமாலை 305 - தீயோர் சொல்வதை (Deerhurst)

பாமாலை 305 - தீயோர் சொல்வதை 
Tune : Deerhurst

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2.  நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3.  தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Post Comment

Tuesday, August 2, 2022

பாமாலை 25 - கர்த்தாவே இப்போ உம்மை (National Hymn)

பாமாலை 25 - கர்த்தாவே இப்போ உம்மை 
(Saviour again to Thy dear Name)
Tune : National Hymn

’சமாதானத்தோடே போ’. லூக்கா 8 : 48

உலகரட்சகராகிய இயேசு பெருமான் பெத்லகேமில் பிறந்தபோது, தெய்வதூதரின் சேனைத்திரள் மேய்ப்பர்முன் தோன்றி, ‘பூமியிலே சமாதானம்’ எனப்பாடினர்.  உலகம் உண்டானதுமுதல், மனித இனம் சமாதானத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது.  நமதாண்டவரும் மலைப்பிரசங்கத்தில், ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்’ எனப்போதித்தார்.  தன் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு சுகமடைந்த ஸ்திரீயைப் பார்த்து, ‘சமாதானத்தோடே போ’ என்றார்.  அவர் உயிர்த்தெழுந்தபின் சீஷருக்குக் காணப்பட்டு, ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார்.  ஒவ்வொரு ஆலய ஆராதனையின் முடிவிலும் குருவானவர், ‘சமாதானத்தோடே போகக்கடவோம்’ என்னும் ஆசீர்வாதத்துடன் சபையாரை அனுப்பி வைக்கிறார்.  நாம் எப்போதும் ஆண்டவரிடத்தில் சமாதானத்தைப்பெற ஆவலாயிருக்கிறோம்.

Rev. John Ellerton
Rev. John Ellerton

1866-ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் செஷயர் மாகாணத்தில் ஜான் எல்லர்ட்டன் போதகர் (Rev. John Ellerton) திருப்பணியாற்றி வந்தார்.  அவர் இருந்த ஊரில் ஆண்டுதோறும் ஒரு பாடல் விழா (Hymn Festival) கொண்டாடப்பட்டு வந்தது.  அவ்வாண்டில் நடக்கவிருந்த விழாவுக்கு எல்லர்ட்டன் போதகர் தலைமை தாங்கினார்.  அவ்விழாவின் முடிவில் பாடப்படுவதற்காக ஒரு பாடல், தாமே எழுத போதகர் ஆவல்கொண்டு, ஆழ்ந்து சிந்திக்கலானார்.  இதற்காக அவர் மேசையிலிருந்த பல கைப்பிரதிகளைப் புரட்டும்போது, அதற்கு முந்தின வாரம், ‘சமாதானத்தோடே போ’ (லூக் 8:48) என்னும் வசனத்தில் அவர் செய்த அருளுரைக் குறிப்புகள் கையில் கிடைத்தன.  இதைக்குறித்து அவர் ஆழ்ந்து சிந்திக்கவே, ‘கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம்’ என்னும் பாடலவர் மனதில் உதித்தது.  உடனே அக்குறிப்பேட்டுக்குப் பின்புறம், அப்பாடலை எழுதி வைத்தார்.  மறுநாள், விழாவின் முடிவில், இப்பாடல் அதற்கேற்ற ஒரு ராகத்தில் முதல்முதலாகப் பாடப்பட்டு, வெகுவாகப் போற்றப்பட்டது.  இப்போது இப்பாடல் பல பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆராதனைகளில் ஒரு முடிவுப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. 

இப்பாடலை எழுதிய ஜான் எல்லர்ட்டன் என்பவர் 1826ம் ஆண்டு, ஜூன் மாதம், 15ம் தேதி, லண்டன் மாநகரில் பிறந்தார்.  அவரது முன்னோர்களில் பலர் நற்செய்திப் பணியில் ஆர்வமுடையவர்கள்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக் கல்லூரியில் சேர்ந்து (Trinity College, Cambridge), பி.ஏ., எம்.ஏ., பட்டங்கள் பெற்றார்.  1850ல் ஆயர் பட்டம் பெற்று, க்ரூகிரீன் (Crewe Green), ஹின்ஸ்டாக் (Hinstock, Shropshire), ஈஸ்ட்போர்ன் (Eastbourne), ப்றைட்டன் (Brighton) முதலிய பல சபைகளில் திருப்பணியாற்றினார்.  ஊழியத்தில் பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையுள்ளவர், பொது ஜன சேவைக்காக அதிக நேரம் செலவிட்டார்.  அவர் அநேக சிறந்த பாடல்கள் எழுதினாலும், அவற்றிற்குப் பதிப்புரிமை பெற்றுக்கொள்ள மறுத்து, அவை கிறிஸ்து சபைக்கே சொந்தமெனக் கூறினார்.  அவர் கிறிஸ்தவப் பாடல்களை அதிகமாக நேசித்துப் பாடிக்கொண்டிருந்தார்.  அவர் இறப்பதற்க்கு முந்தின ஆண்டில் தூய அல்பான்ஸ் சபையினர் அவருக்குக் கனோன் (Canon) என்னும் உயர்நிலையை அளித்தனர்.  ஆனால் உடல்நிலையின் பொருட்டு, அவ்வுயர் நிலையை அவர் வகிக்க முடியவில்லை.  அவர் 1893ம் ஆண்டு தமது 67ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

‘நீர் தந்த நாளும் ஓய்ந்ததே’ – பாமாலை 38
‘துயருற்ற வேந்தரே’ – பாமாலை 118
‘வாழ்க பாக்கிய காலை’ – பாமாலை 131


SATB (With Trumpet Prelude)
SATB (Without Prelude)
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்
வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.

2.    உம் சமாதானம் தந்து அனுப்பும்,
உம் நாளை முடிப்போமே உம்மோடும்
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்

3.    உம் சமாதானம் இந்த ராவிலும்;
இருளை நீக்கி ஒளி தந்திடும்
பகலோ ராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே.

4.    உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்
நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்
பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.

Post Comment

Thursday, July 28, 2022

சங்கீதம் 128 - கர்த்தருக்கு பயந்து

சங்கீதம் 128 - கர்த்தருக்கு பயந்து

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

******************************************************************************
கர்த்தருக்கு பயந்து/ அவர் வழிகளில் நடக்கிறவன்/ எவனோ// அவன்/ பாக்கியவான்.

உன் கைகளின் பிரயாசத்தை நீ/சாப்பிடுவாய்// உனக்குப் பாக்கியமும் நன்மையும் / உண்டாயிருக்கும்.

உன் மனைவி/ உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப் போல்/ இருப்பாள்// உன் பிள்ளைகள்/ உன் பந்தியைச் சுற்றிலும்/ ஒலிவ மரக்கன்றுகளைப் போல் /இருப்பார்கள்.

இதோ/ கர்த்தருக்குப் பயப்படுகிற/ மனுஷன்// இவ்விதமாய்/ ஆசீர்வதிக்கப்படுவான்.

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை/ ஆசீர்வதிப்பார்// நீ ஜீவனுள்ள நாளெல்லாம்/ எருசலேமின்/ வாழ்வைக் காண்பாய்.

நீ உன் பிள்ளைகளின்/ பிள்ளைகளையும்// இஸ்ரவேலுக்கு உண்டாகும்/ சமாதானத்தையும் காண்பாய்.

பிதாவுக்கும்/ குமாரனுக்கும்/ பரிசுத்த/ ஆவிக்கும்// மகிமை உண்டாவதாக.

ஆதியிலும்/ இப்பொழுதும் எப்பொழுதுமான// சதா காலங்களிலும்/ மகிமை உண்டாவதாக  ஆமென்.

******************************************************************************

Post Comment

Wednesday, July 27, 2022

திவ்ய எக்காள சத்தம்

திவ்ய எக்காள சத்தம் 
When the Trumpet of the Lord

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. திவ்ய (எக்)காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும் காலத்தில்,
ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்;
மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடி மோட்சலோகத்தில்
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்

தாசர் விண்ணில் ஒன்றுகூடி
தாசர் விண்ணில் ஒன்றுகூடி
தாசர் விண்ணில் ஒன்றுகூடி
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்.

2. நித்ரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறி யேகுவார்,
மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்
விசுவாசிகள் எல்லாரும் விண்ணில் கூடி வாழுவார்;
அந்த நாளில் நானும் கூட வாழுவேன்.

3. யேசுநாதரின் பேரன்பை எங்கும் கூறும்படிக்கே,
சோர்பில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்
பின்பு, தாசர் ஒன்றுகூடி தேவ சந்நிதியிலே
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்

********************************************

When the trumpet of the Lord shall sound, and time shall be no more,
And the morning breaks, eternal, bright and fair;
When the saved of earth shall gather over on the other shore,
And the roll is called up yonder, I'll be there.

When the roll is called up yonder,
When the roll is called up yonder,
When the roll is called up yonder,
When the roll is called up yonder, I'll be there.

On that bright and cloudless morning when the dead in Christ shall rise,
And the glory of his resurrection share;
When his chosen ones shall gather to their home beyond the skies,
And the roll is called up yonder, I'll be there.

Let us labor for the Master from the dawn till setting sun,
Let us talk of all his wondrous love and care;
Then when all of life is over, and our work on earth is done,
And the roll is called up yonder, I'll be there.

********************************************

Post Comment

Sunday, May 15, 2022

பாமாலை 343 - கிறிஸ்துவின் ரத்தம்

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
என் அலங்காரம் சால்வையும்;
அதை உடுத்திட்டடியேன்
தெய்வாசனத்தின்முன் நிற்பேன்.

2.  என் ஆத்துமத்தை ரட்சிக்க
மரத்தில் ரத்தம் சிந்தின
தெய்வாட்டுக் குட்டியானவர்
என் கர்த்தர் என் இரட்சகர்.

3.  அவரின் ரத்தம் யாவிலும்
உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்;
அதென்றைக்கும் பரத்திலே
செல்லும் மெய் மீட்புப் பொருளே.

4.  அவர் ரட்சிப்பின் பலனாய்,
அவர்க்கு நான் மா உண்மையாய்
உழைத்தெப்பாவங்களுக்கும்
முற்றும் மரித்துத் தேறினும்,

5.  நான் அவரண்டை செல்லவே,
இதை எல்லாம் நான் எண்ணாதே,
“மா ஏழைப் பாவி அடியேன்,
நீர் மீட்டீர், சேர்த்திடும்”என்பேன்.

6.  “தெய்வீக மைந்தா, இயேசுவே,
மனிதனாய் நீர் ஜென்மித்தே,
உயர்ந்த விலைக்கென்னையும்
கொண்டீர்”என்றே நான் போற்றவும்.


Post Comment

Sunday, April 10, 2022

பாமாலை 341 - ஒன்றே தேவை என்றுரைத்தீர் (Bavarian 43)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


Page 2

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர்
ஸ்வாமி, அதை நாடுவேன்;
என்னை உம்மண்டைக் கழைத்தீர்,
மாய்கையை அரோசிப்பேன்;
நான் உலகை எத்தனை தழுவினாலும்,
பலதிலே மெத்த உழன்றறுத்தாலும்
அனைத்தும் அபத்தம், ஒன்றானதை நான்
அடைந்தால், நான் பூரண பாக்கியவான்.

2. இதைச் சிஷ்டிகளிடத்தில்
தேடினால், கிடையாதே;
இயேசு ஸ்வாமியின் வசத்தில்
வாழ்வெல்லாம் இருக்குமே;
என் ஆத்துமமே, உன் இக்கட்டுக்கு சாவும்
இம்மானுவேலே பரிபூரணம் யாவும்
அகப்படப் பண்ணுவர், அவரை நீ
உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.

3. இந்தப் பங்கையே மரியாள்
தனக்குத் தெரிந்தாளே;
வாஞ்சையாகிய பசியால்
கிறிஸ்தின் பாதத்தண்டையே
இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக
மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
அடைந்தால், மனத்தில் பூரித்தாளே.

4. நானும் அந்த வாஞ்சையோடே
உம்மையே, என் இயேசுவே,
அன்புக் கொண்டேன்; நீர் என்னோடே
ஐக்யமாகும், ஜீவனே
பெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,
நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
தொடருவேன்; உமக்குள் யாவும் உண்டே,
நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.

5. இப்போ பூரணக் களிப்பு
என் நெஞ்சை நிரப்பிற்று;
நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
என்னைத் திருப்தி யாக்குது.
உம்மோடே நான் ஐக்கியமாம் ஆறுதலுக்கும்
நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதுக்கும்
சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்,
சரியாம் தித்திப்பை ருசித்து மிரேன்.

6. ஆகையாலே நான் தெரிந்து,
பற்றும் பேறெல்லாம் நீரே;
என்னை நீர் ஆராய்ந்தறிந்து
உண்மையாக்கும், இயேசுவே;
நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்,
என் கால்களை மோட்ச வழியிலே காரும்:
நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டே
இருக்குவும்; மற்றது குப்பை யாமே.

Post Comment

Thursday, February 17, 2022

பாமாலை 332 - இயேசு பாவி நேசர்தாம்

பாமாலை 332 -  இயேசு பாவி நேசர்தாம்
Jesus nimmt die Sunder an
Bavarian 100 - 7.8.7.8.7.7

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  இயேசு பாவி நேசர்தாம்,
வழிதப்பிப்போன யாரும்
அவரால் திரும்பலாம்,
அவரால் எக்கேடும் மாறும்.
அவரால் ரட்சிப்புண்டாம்;
இயேசு பாவி நேசர்தாம்.

2.  நாம் மகா அபாத்திரர்,
அவர் கிருபை புரிந்தோர்,
ரட்சிப்போம் என்றாண்டவர்
சத்தியமிட்டே மொழிந்தோர்
அவர் கிருபாசனம்;
இயேசு பாவி நேசர்தாம்.

3.  மந்தையில் காணாதது
மேய்ப்பன் கையினால் திரும்பும்;
பாவத்தில் விழுந்தது
அவர் கையினால் எழும்பும்;
கெட்டுப்போக மாட்டோம் நாம்;
இயேசு பாவி நேசர்தாம்.

4.  அழும் பாவிகளையே
தம்மண்டைக் கழைக்கிறாரே,
வரும் பாவியைத் தாமே
தெய்வ பிள்ளையாக்குவாரே;
அதை நம்பி வரலாம்.
இயேசு பாவி நேசர்தாம்.

5.  துக்கப்பட்டென் பாவத்தை
அறிவிக்க இங்கே வந்தேன்;
மீட்பரே, நீர் கிருபை
செய்யும் அப்போ மீட்பைக் கண்டேன்,
போயிற்றென் வியாகுலம்;
இயேசு பாவி நேசர்தாம்.

6.  பாவம் சிவப்பாகிலும்
பஞ்சைப் போலாம்; எக்கறையும்
அவர் ரத்தம் கழுவும்;
நீதியின் வெள்ளங்கியையும்
தாறார், அது நிச்சயம்;
இயேசு பாவி நேசர்தாம்.

7.  மனச்சாட்சி குத்தினால்
பாவம் தீர்ந்ததென்று சொல்வார்.
மோசே குற்றம் சாட்டினால்
அவர் பிணை நின்றுகொள்வார்.
நீங்கிற்றாக்கினை எல்லாம்;
இயேசு பாவி நேசர்தாம்.

8.  இயேசு பாவி நேசர்தாம்,
அவர் என்னையும் நேசித்தார்;
நானும் வந்து சேரலாம்,
எனக்கும் மன்னிப்பளித்தார்;
சாவு ஆதாயமுமாம்,
இயேசு பாவி நேசர்தாம்.

Post Comment

Monday, February 14, 2022

பாமாலை 330 - ஆ இயேசுவே நீர்

பாமாலை 330 - ஆ இயேசுவே நீர்
O Jesus my Hope

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. ஆ இயேசுவே, நீர்
என் பலியானீர்;
பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
மன்றாடிடுவீர்
இப்பாவிக்காய் நீர்;
“என்னைக் கொன்றோருக்காய் 
உயிர் ஈந்தேன்” என்பீர்.

2. இறங்கிடுமேன்,
அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
சிலுவை அன்பால்
என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை 
பாவியாம் அடிமை.

3. கோபம் பெருமை
போக்கும் சிலுவை;
அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை;
தீய மனத்தை
பாவ பாரத்தை
அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
உம்மண்டை.

4. தூய வெண்மையே
இப்போ இப்போதே;
உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
தூயோன் ஆக்குவீர்
முற்றும் மாற்றுவீர்;
உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
உண்டாக்குமே.

5. உம் ரத்தம் என்னில்
நிலைத்திருப்பின்,
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
பிதாவின் முன்னர்
சகாயராம் நீர்,
சுதா, பாவியேனை உம் அன்பால்
வாழ்விப்பீர்.

Post Comment

Friday, February 4, 2022

பாமாலை 325 - மயங்கும் தாசனை (Ibstone)

பாமாலை 325 - மயங்கும் தாசனை 
Thy way not mine O Lord
Tune : Ibstone

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  மயங்கும் தாசனை
நாதா, நீர் நடத்தும்;
என் பாதைகாட்டியாய்
சகாயம் புரியும்.


2.  நீர் காட்டும் பாதைதான்
எப்போதும் நல்லதே;
சுற்று, நேர் ஆயினும்
விண் வீடு சேர்க்குமே.

3.  என் சித்தம் ஆபத்தாம்,
உம் சித்தம் நாடுவேன்;
நான் செல்லும் பாதையை
நீர் காட்டக் கெஞ்சுவேன்.

4.  நான் தேடும் ராஜியம்
உம் சொந்தமானதே;
அங்கென்னைச் சேர்த்திடும்
பாதையும் உம்மதே.

5.  உம் சித்தம்போல நீர்
என் பாத்திரம் எடுத்தும்
சந்தோஷம், சஞ்சலம்,
ஏதாலும் நிரப்பும்.

6.வியாதி, சுகமோ,
இஷ்டர், பகைஞரோ,
வறுமை, செல்வமோ,
சிறிதோ, பெரிதோ.

7.  என் இஷ்டம் எதிலும்
வேண்டாம்; என் நாதரே,
என் வழிகாட்டியாம்
நீர் சர்வ ஞானரே.

Post Comment

Wednesday, February 2, 2022

சுவிசேஷ செய்தி கேட்டாய் (Come Believing)

சுவிசேஷ செய்தி கேட்டாய் 
Come Believing
Songs & Solos 381

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. சுவிசேஷ செய்தி கேட்டாய்.
சுதன் யேசு மீட்பரால்
அழைப்பைக் கவனிப்பாயா?
மீட்பரைத் தேடுவாயா?


நம்பி வா நீ, நம்பி வா நீ,
மீட்பர் யேசுவைப் பார் நீ
நம்பி வா நீ, நம்பி வா நீ
மீட்பர் இயேசுவைப் பார் நீ.

2.  காலங்கள் பல கடந்தாய்
அறுப்புப் பல கண்டாய்
கோடை மழைக்காலம் கண்டாய்
இன்னும் பாவம் விடாயோ?

3.  யேசு இன்னும் காக்கிறாரே
தடையின்றித் தீர்மானி
ஆவி போராடும் பொழுதே,
தாழ்த்தி சிலுவையைப் பார்!

4.  தகுதியா என்றெண்ணாதே
வேண்டாப் பயம் கொள்ளாதே
உணர்வல்ல நம்பிக்கையே,
ஆவியின் முத்ரை தரும்.

5.  தேவ சித்தம் செய்திடவே,
யேசுவின் ரத்தம் நம்பு
பரலோக யேசுவைப் பார்
மாறாத வசனம் சேர்.

1.  Once again the Gospel message
From the Savior you have heard;
Will you heed the invitation?
Will you turn and seek the Lord?

Refrain:

Come believing! come believing!
Come to Jesus! look and live!
Come believing! come believing!
Come to Jesus! look and live!

2.  Many summers you have wasted,
Ripened harvests you have seen;
Winter snows by spring have melted,
Yet you linger in your sin. 

3.  Jesus for your choice is waiting;
Tarry not: at once decide!
While the Spirit now is striving,
Yield, and seek the Savior’s side. 

4.  Cease of fitness to be thinking;
Do not longer try to feel;
It is trusting, and not feeling,
That will give the Spirit’s seal. 

5.  Let your will to God be given,
Trust in Christ’s atoning blood;
Look to Jesus now in Heaven,
Rest on His unchanging Word. 



Post Comment

Wednesday, January 26, 2022

பாமாலை 319 - உன் நெஞ்சிலே உண்டான (Cruger)

பாமாலை 319 - உன் நெஞ்சிலே உண்டான 
Tune : Cruger

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  உன் நெஞ்சிலே உண்டான 
விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி;
விண்மண்ணை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவர்.

2.  ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி, மனதார
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது;
வேண்டாம், ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு.

3.  ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு
வேண்டும் என்றறிவீர்;
நீர் எதை நல்லதாக
கண்டீரோ, அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர்.

4.  பல வழிவகையும்
உம்மாலே ஏற்படும்;
நீர் செய்வது இசையும்,
நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக
மொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்.

5.  இக்கட்டுகளினாலே
கலங்கினோனே, நீ
திடன் கொள், கர்த்தராலே
இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும்,
சற்றே பொறுத்திரு;
நீ பூரிப்பாய்க் கொண்டாடும்
நாள் வரப்போகுது.

6.  உன் கவலைகளுக்கு
இன்றே விடை கொடு;
இனி விசாரத்துக்கு
இடங்கொடாதிரு;
நீ ஆளும் தெய்வமல்ல,
நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி.

7.  நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார்;
நீ நன்மைக்காகப் பட்ட
சலிப்பை நீக்குவார்.

8.  அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசீர்வதிக்கப்பட்ட
தெய்வீகத் தேற்றலும்
அடைந்து, இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவைப் பாடுவாய்.

9.  கர்த்தாவே, எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேரிட்டுக்கொண்டிரும்;
ஆ, எங்களைத் தேற்றிடும்;
பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும்,
அப்போ பிழைக்கிறோம்.















 

Post Comment

Sunday, January 23, 2022

தீவினை செய்யாதே (Yield not to Temptation)

தீவினை செய்யாதே 
Yield not to Temptation
SS 698


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. தீவினை செய்யாதே மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்,
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்,
இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய்.

ஆற்றித் தேற்றியே காப்பார்,
நித்தம் உதவி செய்வார்,
மீட்பர் பெலனை ஈவார்.
ஜெயம் தந்திடுவார்.

2. வீண் வார்த்தை பேசாமல், வீண் தோழரையும்,
சேராமலே நீங்கி நல்வழியிலும்,
நின்றூக்கமும், அன்பும் சற்றேனும் விடாய்,
இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய்.

3. மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான்,
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்;
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்,
இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய்.

*************************************************
1 Yield not to temptation,
For yielding is sin;
Each vict’ry will help you,
Some other to win;
Fight valiantly onward,
Evil passions subdue;
Look ever to Jesus,
He will carry you through.

Refrain

Ask the Savior to help you,
Comfort, strengthen and keep you;
He is willing to aid you,
He will carry you through.

2 Shun evil companions,
Bad language disdain;
God’s name hold in rev’rence,
Nor take it in vain;
Be thoughtful and earnest,
Kindhearted and true;
Look ever to Jesus,
He will carry you through. 

3 To him that o’er cometh,
God giveth a crown;
Through faith we will conquer,
Though often cast down;
He who is our Savior,
Our strength will renew;
Look ever to Jesus,
He will carry you through. 

Post Comment