Sunday, January 29, 2023

நேச ராஜாவாம் பொன்னேசு நாதா

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா
வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க
ஆசையோடெழுந்து அன்பின் நாதா
தேசு நல்குவீர் சுகம் நூங்க.

நித்யானந்த செல்வம் நிறைவாரி
சத்ய சுருதியின் மொழிபோல் – உம்
சித்தமாகிப் பெய்யும் அருள் மாரி
நித்தம் எமின் கண்மணிகள் மேல்

2. ப்ரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயா
ப்ரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்
ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்து
க்ருபை ஊக்கமோடென்றும் தேட 

3. தேவ சேவைக்கான மேல் வரங்கள்
சேயர் மீதேராளமாகத் தங்க
ஜீவ காருண்யரின் பொற்குணங்கள்
செல்வர் ஜீவியத்தில் விளங்க 

4. ஆசி தாரும் அன்பரிரு பேர்க்கும்
அருள் ப்ரபை இவர் மேலே வீசும்
நேசர்க்கும் முகப்பிரசன்னம் நல்கும்
நீர் மெய்ச் சமாதானம் ஈயுமேன் 

Post Comment

No comments:

Post a Comment