Sunday, June 18, 2023

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் (Ar Hyd Y Nos)

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் 
One there is above all others
Tune : Ar Hyd Y Nos

John Newton
இப்பாடலை எழுதியவர் ஜான் நியூட்டன் (John Newton).  இவரது காலம் 1725-1807. ஜான் ஏழு வயதாய் இருக்கும்போது அவரின் தாயார் மரித்துப்போக, தன் தந்தையுடன் கப்பல் பணியாளனாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து வந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகள் விற்கும் கப்பல்களில் மாலுமியாகவும், கப்பற் தலைவனாகவும் பணியாற்றிய நியூட்டன், பின்னர் இறைப்பணிக்கென்று தம்மை ஒப்புவித்து, இங்கிலாந்தின் Anglican திருச்சபையின் போதகராக அபிஷேகம் பெற்றார்.  

பாடல்கள் எழுதுவதில் மிகுந்த புலமை பெற்றிருந்த ஜான் நியூட்டன் தம் இறைப்பணிக்காலத்தில் ”One there is, above all others” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.  அவற்றுள் ‘Amazing Grace’ எனும் மிகப் பிரபலமான ஆங்கிலப்பாடலும் ஒன்றாகும்.  “யாரினும் மேலான அன்பர்’ எனும் இப்பாடல் நம் பாமாலை புத்தகத்தில் ‘வாலிபர் பாக்கள்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலுங் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!

2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா நேசரே!
பற்றிக் கொண்ட என்னை விடார்,
மா நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக் கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!

3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும், நில்லு;
நேரே மோட்ச பாதை செல்லு
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!

4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மா நேசரே!
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்;
மா நேசரே!
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா நேசரே!

Post Comment

No comments:

Post a Comment