Monday, December 17, 2012

பாமாலை 13 - யூதேயாவின் ஞானசாஸ்திரி (Laus Deo)

(Bright the Vision that delighted)
Tune: Laus Deo
Meter:  8, 7, 8, 7

மனதைத் தொடக்கூடிய அழகிய ராகத்தில் அமையப்பெற்ற இப்பாமாலை 1837ம் ஆண்டில் உருவான மிகப் பழமையான பாடலாகும். ஐயர்லாந்தைச் சேர்ந்த அருள்திரு. ரிச்சர்ட் மன்ட் (Rev. Richard Mant 1776-1848) என்பவரால் உருவாக்கப்பட்டது இப்பாடல்.

Rev. Richard Mant 1776-1848
வின்செஸ்டரிலும் (Winchester) ஆக்ஸ்ஃபோர்ட் ட்ரினிட்டி கல்லூரியிலும் (Trinity College, Oxford) பயின்ற இவர் தமது 26வது வயதில் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு, பரிட்டன் (Buriton), ஹாம்ப்ஷெயர் (Hampshire) மற்றும் சவுத்ஹாம்ப்ட்டன் (Southampton) பகுதிகளின் குருசேகரங்களில் பணிபுரிந்தார்.  லண்டனில் வசித்து வந்த இவர் 1820ம் ஆண்டு ஐயர்லாந்தின் Killaloe என்ற இடத்தில் பேராயராகப் பணிபுரிந்தார். ரிச்சர்ட் தாம் ஐயர்லாந்தில் பணிபுரிந்தபோது அங்கிருந்த ஆலய வரலாற்றைத் தொகுப்பதிலும், இரண்டு தொகுதி பாடல்களை எழுதுவதிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் எழுதிய பாடல்களுள் ‘Bright the Vision’ பாடலும் ‘For all the saints, O Lord’ பாடலும் இன்றும் பாடப்படுகின்றன.

இப்பாமாலையின் முதல் சரணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘யூதேயாவின் ஞானசாஸ்திரி’ ஏசாயா தீர்க்கதரிசி ஆவார். ஏசாயா 6:1-4’ல் குறிப்பிட்டிருக்கும் ”ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன் .. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்” என்று ஏசாயா தீர்க்கன் விவரிக்கும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ரிச்சர்ட் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

நம் திருச்சபைகளில் ‘யூதேயாவின் ஞான சாஸ்திரி’ பெரும்பாலும் Laus Deo என்ற ராகத்தில் பாடப்படுகிறது.  30 வருடங்களாக St Mary Magadalene’s, Paddington ஆலயத்தில் ஆர்கன் இசைக்கலைஞராய் இருந்த ரிச்சர்ட் ரெட்ஹெட் (Richard Readhead 1820-1901) என்பவர், 1853’ல் எழுதிய ஒரு இசைக்கோர்வையிலிருந்து இந்த ராகம் எடுத்தாளப்பட்டுள்ளது.
  

History of Hymn Source : "Book of Hymns" by Ian Bradley

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant
Unison with Descant










































1.    யூதேயாவின் ஞான சாஸ்திரி
விந்தைக் காட்சியைக் கண்டான்
கோடாகோடி தூதர் கூடி
பாடும் கீதத்தைக் கேட்டான்

2.    உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா
வானம் பூமி நிரப்பும்
தூய தூய தூய கர்த்தா
உந்தன் துதி பெருகும்.

3.    என்றே ஆசனத்தைச் சூழ்ந்து
கேரூப் சேராபீன்களும்
ஆலயம் நிரம்ப நின்று
மாறி மாறிப் பாடவும்.

4.    தூயர் தூயர் தூயரான
சேனைக் கர்த்தர் எனவும்
தூதர் பாட்டு விண்ணில் ஓங்க
மண்ணில் இன்றும் ஒலிக்கும்

5.    உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா
வானம் பூமி நிரப்பும்
தூய தூய தூய கர்த்தா
உந்தன் துதி பெருகும்

6.    என்றே வான சேனையோடு
பூதலத்தின் சபையும்
கர்த்தாவை நமஸ்கரித்து
துதி கீதம் பாடிடும்.

Post Comment

No comments:

Post a Comment