Wednesday, March 27, 2013

பாமாலை 121 - இப்போது நேச (Strength and Stay)

பாமாலை 121 - இப்போது நேச 
Tune : Strength and Stay


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது
பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.

2.    சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்
நீர் தாங்கி, மனதார மரித்தீர்;
உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.

3.    நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

4.    நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;
என் தலையை உம் மார்பில் அணைத்தே
என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்;
அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே.

Post Comment

Tuesday, March 26, 2013

பாமாலை 119 - அருவிகள் ஆயிரமாய் (Misericordia)

பாமாலை 119 - அருவிகள் ஆயிரமாய் 
Tune : Misericordia


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்
இருக்கிறேன்’, என்றார்.

2.    வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்
குருசில் கூறும் இவ்வொரே
ஓலத்தில் அடங்கும்.

3.    அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம்முக்கியம்;
என் ஆன்மாவும் ஒன்றே.

4.    அந்நா வறட்சி, தாகமும்
என்னால் உற்றீர், பேர் அன்பரே;
என் ஆன்மா உம்மை முற்றிலும்
வாஞ்சிக்கச் செய்யுமே.

Post Comment

Monday, March 25, 2013

பாமாலை 118 - துயருற்ற வேந்தரே (Petra)

பாமாலை 118 - துயருற்ற வேந்தரே 
Tune : Petra


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே;
எண்ணிறைந்த துன்பம் நீர்
மௌனமாகச் சகித்தீர்.

2.    பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.

3.    தெய்வ ஏக மைந்தனார்,
அபிஷேக நாதனார்,
‘தேவனே, என் தேவனே,
எந்தனை ஏன் கைவிட்டீர்?’
என்றுரைக்கும் வாசகம்
கேள், இருண்ட ரகசியம்.

4.    துயர் திகில் இருண்டே
சூழும்போது, தாசரை
கைவிடாதபடி நீர்
கைவிடப்பட்டிருந்தீர்;
இக்கட்டில் சமீபம் நீர்
என்றிதாலே கற்பிப்பீர்.  

Post Comment

Sunday, March 24, 2013

பாமாலை 117 - சிலுவையைப் பற்றி நின்று (Stabat Mater)

பாமாலை 117 - சிலுவையைப் பற்றி நின்று 
Tune : Stabat Mater


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.  பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.  யோவான் 19: 26,27

1.    சிலுவையைப் பற்றி நின்று
துஞ்சும் மகனைக் கண்ணுற்று,
விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;
தெய்வ மாதா மயங்கினார்;
சஞ்சலத்தால் கலங்கினார்;
பாய்ந்ததாத்துமாவில் வாள்.

2.    பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்;
அந்தோ, என்ன வேதனை!
ஏக புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
சோகமுற்றனர் அன்னை.

3.    இணையிலா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த,
மாதாவோடழார் யாரோ?

4.    தம் குமாரன் காயப்பட,
முள்ளால் கிரீடம் சூட்டப்பட,
இந்த நிந்தை நோக்கினார்;
நீதியற்ற தீர்ப்புப்பெற,
அன்பர், சீஷர் கைவிட்டோட
அவர் சாகவும் கண்டார்.

5.    அன்பின் ஊற்றாம், இயேசு ஸ்வாமீ
உமதன்னைக்குள்ள பக்தி
எந்தன் நெஞ்சில் ஊற்றிடும்!
அன்பினால் என் உள்ளம் பொங்க
அனல் கொண்டகம் உருக
அருளைக் கடாட்சியும். ஆமென்.

At the Cross her station keeping

Post Comment

பாமாலை 116 - உம் ராஜ்யம் வருங்காலை (Ellers)

பாமாலை 116 - உம் ராஜ்யம் வருங்காலை 
Tune : Ellers


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with  Soprano

Bass

Bass with Soprano


1.    உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.

2.    அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே;
தம் பெலனற்ற கையை நீட்டினார்;
முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.

3.    ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

4.    கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,
‘என்னை நினையும்’ என்று ஜெபித்தே
உம் சிலுவையை, தியானம் செய்கையில்,
உம் ராஜியத்தைக் கண்ணோக்கச் செய்யுமே.

5.    ஆனால், என் பாவம் நினையாதேயும்,
உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர்;
உம் திரு சாவால் பாவமன்னிப்பும்
ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர்.

6.    ’என்னை நினையும்’, ஆனால், உமக்கும்
என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ?
சிலுவை, நோவு, ரத்த வேர்வையும்,
சகித்த நீர், இவை மறப்பீரோ?

7.    ’என்னை நினையும்’, நான் மரிக்கும் நாள்
‘நீயும் என்னோடு தங்குவாய் இன்றே
நற்பரதீஸில்’ என்னும் உம் வாக்கால்
என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே.

Post Comment

Monday, March 18, 2013

பாமாலை 410 - சிலுவை சரிதை

I. கேள்வி (Stanzas 1 to 4)
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


II. மறுமொழி (Stanzas 5 to 8)
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

III.   சிலுவை சரிதை

The tune for this part of the song (Stanzas 9 to 18) is the same as that in Part I

IV.   சிலுவையின் அழைப்பு (குருவானர் பாடுவது)

The tune for this part of the song (Stanzas 19 to 22) is the same as that in Part II

V.    இயேசுவை நாம் வேண்டல் (Stanzas 23 to 26)

Unison
Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



I.          கேள்வி   
1.    தம் ரத்தத்தில் தோய்ந்த
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப
நடந்து;

2.    பாரச் சிலுவையால்
சோர்வுறவே,
துணையாள் நிற்கின்றான்
பாதையே.

3.    கூடியே செல்கின்றார்
அப்பாதையே;
பின்னே தாங்குகின்றான்
சீமோனே.

4.    குரூசைச் சுமந்தெங்கே
செல்லுகின்றார்?
முன் தாங்கிச் சுமக்கும்
அவர் யார்?

II.         மறுமொழி
5.    அவர்பின் செல்லுங்கள்
கல்வாரிக்கே,
அவர் பராபரன்
மைந்தனே

6.    அவரின் நேசரே,
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று
பாருமே.

7.    சிலுவைச் சரிதை
கற்றுக் கொள்வீர்;
பேரன்பை அதனால்
அறிவீர்

8.    பாதையில் செல்வோரே;
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ
சௌந்தரியம்?

III.       சிலுவை சரிதை
9.    குரூசில் அறையுண்ட
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன்
எனக்காய்.

10.   கூர் முள் உம் கிரீடமாம்,
குரூசாசனம்;
சிந்தினீர் எனக்காய்
உம் ரத்தம்.

11.   உம் தலை சாய்க்கவோ
திண்டு இல்லை;
கட்டையாம் சிலுவை
உம் மெத்தை.

12.   ஆணி கை கால், ஈட்டி
பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை
எவரும்.

13.   பட்டப்பகல் இதோ
ராவாயிற்றே;
தூரத்தில் நிற்கின்றார்
உற்றாரே.

14.   ஆ, பெரும் ஓலமே!
தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர்
மார்பினில்

15.   சாகும் கள்ளன் உம்மை
நிந்திக்கவும்,
சகிக்கின்றீரோ நீர்
என்னாலும்.

16.   தூரத்தில் தனியாய்
உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது
நிற்கின்றார்

17.   ”இயேசு நசரேத்தான்
யூதர் ராஜா”
என்னும் விலாசம் உம்
பட்டமா?

18.   பாவி என் பொருட்டு
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை
காண்கின்றீர்?

IV.       சிலுவையின் அழைப்பு (குருவானவர் பாடுவது)
19.   நோவில் பெற்றேன், சேயே;
அன்பில் காத்தேன்;
நீ விண்ணில் சேரவே
நான் வந்தேன்

20.   தூரமாய் அலையும்
உன்னைக் கண்டேன்;
என்னண்டைக் கிட்டிவா;
அணைப்பேன்.

21.   என் ரத்தம் சிந்தினேன்
உன் பொருட்டாய்
உன்னைக் கொள்ள வந்தேன்
சொந்தமாய்

22.   எனக்காய் அழாதே,
அன்பின் சேயே;
போராடு, மோட்சத்தில்
சேரவே.

V.        இயேசுவை நாம் வேண்டல்
23.   நான் துன்ப இருளில்,
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே;

24.   எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே.

25.   நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே?

26.   இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே,
மறுமையில் வாழ
செய்யுமே.

Post Comment

Wednesday, March 6, 2013

பாமாலை 120 - பூரண வாழ்க்கையே (Aber)

பாமாலை 120 - பூரண வாழ்க்கையே 
Tune : Aber


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!

2.    பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்;
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.

3.    அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே;
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே.

4.    முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்;
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்.

5.    எங்களை நேசித்தே,
எங்களுக்காய் மாண்டீர்;
ஆ, சர்வ பாவப் பலியே,
எங்கள் சகாயர் நீர்.

6.    எத்துன்ப நாளுமே,
மா நியாயத்தீர்ப்பிலும்
உம் புண்ணியம், தூய மீட்பரே,
எங்கள் அடைக்கலம்.

7.    இன்னும் உம் கிரியையை
எங்களில் செய்திடும்;
நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே
என் அன்பு ஈடாகும்.

Post Comment

Monday, March 4, 2013

பாமாலை 115 - கூர் ஆணி தேகம் (St. Margaret)

பாமாலை 115 - கூர் ஆணி தேகம் 
Tune : St. Margaret


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.

2.    தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.

3.    எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.

4.    நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே
நானும் கூர் ஆணியை.

5.    உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.

6.    ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.

Post Comment

Friday, March 1, 2013

தெய்வ ஆசீர்வாதத்தோடே (Come Thou Fount)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்;
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்.
இப்போதும்மைத் தேடி வந்து
மனதாரப் போற்றினோம்;
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.

Post Comment