Wednesday, March 27, 2013

பாமாலை 121 - இப்போது நேச (Strength and Stay)

பாமாலை 121 - இப்போது நேச 
Tune : Strength and Stay


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது
பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.

2.    சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்
நீர் தாங்கி, மனதார மரித்தீர்;
உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.

3.    நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

4.    நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;
என் தலையை உம் மார்பில் அணைத்தே
என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்;
அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே.

Post Comment

No comments:

Post a Comment