பாமாலை 115 - கூர் ஆணி தேகம்
Tune : St. Margaret
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.
2. தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.
3. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.
4. நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே
நானும் கூர் ஆணியை.
5. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.
6. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.
No comments:
Post a Comment