Friday, April 26, 2013

பாமாலை 188 - உம்மாலேதான் என் இயேசுவே (Leicester)

 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.         உம்மாலேதான் என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்.
 
2.         இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.
 
3.         இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்.
 
4.         பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

Post Comment

Tuesday, April 23, 2013

பாமாலை 340 - என்னைத் தெய்வ சாயலான

 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.         என்னைத் தெய்வ சாயலான
சிஷ்டியாக்கிப் பின்பு நான்
கெட்டபோதென் மீட்பரான
கர்த்தரே, நீர் நேசந்தான்
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
 
2.         என்னை முன்னமே தெரிந்து,
காலம் நிறைவேறின
போதென் ரூபையே அணிந்து
நர ஜென்மமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
 
3.         எனக்காகப் பாடுபட்டு,
நிந்தையுள்ளதாகிய
சாவால் பரமண்டலத்து
பாக்கியத்தைத் தேடின
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
 
4.         எனக்கொளியும் வழியும்
சத்தியமும் நித்திய
ஜீவனும் பரகதியும்
சகலமுமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
 
5.         என் துர்ச்சிந்தையை அறுத்து,
என்னை வென்று, என்னுட
உள்ளத்தை யெல்லாம் இழுத்து,
பரவசமாக்கின
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
 
6.         என்றும் என்னை உண்மையாக
நேசித்துப் பிதாவுட
பாரிசத்தில் எனக்காக
வேண்டிக் கொண்டிருக்கிற
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
 
7.         என்னை மண்குழியை விட்டு
எழச்சொல்லி, பரம
ஜோதியால் அலங்கரித்து
சேர்க்கச் சித்தமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

Post Comment

Monday, April 22, 2013

பாமாலை 298 - ஆராய்ந்து பாரும்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.         ஆராய்ந்து பாரும், கர்த்தரே;
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்.
 
2.         ஆராயும் எந்தன் உள்ளத்தை,
நீர் சோதித்தறிவீர்;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்
 
3.         ஆராயும் சுடரொளியால்
துராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்.
 
4.         ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
 
5.         ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்.
 
6.         இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்.

Post Comment

Sunday, April 21, 2013

பாமாலை 80 - இன்னோர் ஆண்டு முற்றுமாய் (Tune - Calbach)

 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே
உம்மைத் துதி செய்வோமே.
 
2.    நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.
 
3.    யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.
 
4.    நாங்கள் உந்தன் தாசராய்,
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.
 
5.    ஏக கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே,
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.

Post Comment

பாமாலை 177 - நாதன் வேதம் என்றும் (Ravenshaw)

பாமாலை 177 - நாதன் வேதம் என்றும் 
Lord Thy word Abideth
Tune : Ravenshaw

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.
 
2. ஆறுதலின் வேதம்,
மீட்பின் சுவிசேஷம்,
சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.
 
3. புசல், அலை மோதின்,
மேகம் இருள் மூடின்,
வேதம் ஒளி வீசும்,
க்ஷேம வழி சேர்க்கும்.
 
4. வாக்குக்கெட்டா இன்பம்,
எண்ணில்லாத செல்வம்,
பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.
 
5. ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.
 
6. நாதா, உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து, உம்மை
நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்.
 

Post Comment

Saturday, April 20, 2013

பாமாலை 361 - ஒப்பில்லாத திவ்ய அன்பே

பாமாலை 361 - ஒப்பில்லாத திவ்ய அன்பே
Love Divine all Loves excelling


Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. ஒப்பில்லாத திவ்ய அன்பே,
மோட்சானந்தா, தேவரீர்
எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
அருள் பூர்த்தியாக்குவீர்
மா தயாள இயேசு நாதா
அன்பு மயமான நீர்,
நைந்த உள்ளத்தில் இறங்கி
உம் ரட்சிப்பால் சந்திப்பீர்.
 
2. உமது நல் ஆவி தாரும்,
எங்கள் நெஞ்சு பூரிப்பாய்
உம்மில் சார நீரே வாரும்,
சுத்த அன்பின் வடிவாய்;
பாவ ஆசை எல்லாம் நீக்கி
அடியாரை ரட்சியும்;
விசுவாசத்தைத் துவக்கி
முடிப்பவராய் இரும்.
 
3. வல்ல நாதா எங்கள்பேரில்
மீட்பின் அன்பை ஊற்றுமே;
விரைவாய் உம் ஆலயத்தில்
வந்து என்றும் தங்குமே
வானோர்போல நாங்கள் உம்மை
நித்தம் வாழ்த்திச் சேவிப்போம்;
ஓய்வில்லாமல் உமதன்பை
பூரிப்பாய்க்கொண்டாடுவோம்.
 
4. உந்தன் புது சிஷ்டிப்பையும்
சுத்த தூய்மையாக்குமேன்;
உந்தன் திவ்விய ரசிப்பையும்
பூரணப்படுத்துமேன்;
எங்கள் கிரீடம் உம்முன் வைத்து
அன்பில் மூழ்கிப் போற்றியும்,
மேன்மை மேலே மேன்மை பெற்று
விண்ணில் வாழச் செய்திடும்.


Post Comment

Friday, April 19, 2013

பாமாலை 252 - என்றென்றும் ஜீவிப்போர் (St. Denio)

பாமாலை 252 - என்றென்றும் ஜீவிப்போர்
Immortal, Invisible God only wise
Tune : St. Denio

Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர்,
எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர்,
மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்;
சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்.
 
2. ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல்,
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்,
வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும்.
 
3. பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர்,
யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர்,
மலர் இலைபோல் மலர்வோம், செழிப்போம்,
உதிர்வோம், சாவோம், நீரோ மாறாதோராம்.
 
4. மா மாட்சி பிதா, தூய ஜோதி தந்தாய்!
தாழுவர் உம் தூதர் மா வணக்கமாய்
துதிப்போம், மகத்தாய்க் காணத் தோற்றுவீர்,
கண் கூசும் ஜோதியாம் ஜோதி தேவரீர்.

Post Comment