பாமாலை 8 - தந்தாய் உம்மைத் துதித்தே
Holy God Thy Name we bless
Tune : Grosser Gott
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. தந்தாய்! உம்மைத் துதித்தே
உந்தன் நாமம் போற்றுவோமே;
அற்பர் பாவம் யாவுமே
தற்பரா நீர் மன்னிப்பீரே;
தூதரோடும் வேந்தே உம்
பாதம் வீழ்ந்தே சேவிப்போம்.
2. வான சேனையாருமே
மோன தூய பக்தரோடும்
கேரூப் சேராப் கோஷ்டிகள்
சேரும் உந்தன் நாமம் போற்ற;
தூய தூயரே, உம்முன்
தாழ்ந்து வீழ்ந்து பாடுவார்.
3. தூய வானோர் போற்றிடும்
தூய தூய தூய கர்த்தா,
மாந்தர் யாவரும் பாடிடும்
வேந்தர், மீட்பர், உம் தயாளம்
அன்பு யார்க்கும் ஈவதால்
நன்றியோடு ஏற்றுவோம்.
4. உந்தன் சமாதானமே
எந்தத் தேசம்தன்னில் ஊன்ற,
யுத்தம் பகை ஓய்ந்திட
அத்தன் அன்பால் மாந்தர் கூட;
வீழ்வார் உந்தன் பாதமே
தாழ்வார் உந்தன் நாமத்தில்.
5. தந்தை சுதன் ஆவிக்கே
எந்த நாளும் மேன்மை ஸ்துதி
ஆதரிக்கும் மூர்த்தியே
பாதம் வீழ்ந்து நீசர் நாங்கள்
அன்பா! உந்தன் மா அன்பை
என்றும் என்றும் ரூபிப்போம்.
No comments:
Post a Comment