Praise the Lord O my soul..! I’ve come across many Tamil choristers who, although eager to sing “four part harmony”, find it difficult to master the art, because of their inability to read music notations. This blog is my humble attempt to help such friends in Christ, to continue to sing four part harmony, even without being able to read notations. So here it is made easy for you… listen to the parts.. Practice.. and Sing unto the Lord.
Thursday, May 30, 2013
பாமாலை 143 - வானமும் பூமியும் (Moscow)
SATB
1. வானமும் பூமியும்
2. மீட்பை உண்டாக்கவும்
3. பாவியின் நெஞ்சத்தை
4. ஞானம் நிறைந்தவர்
Wednesday, May 29, 2013
பாமாலை 279 - உங்களைப் படைத்தவர் (Maidstone)
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. உங்களைப் படைத்தவர்
சருவ தயாபரர்
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க,
என்றும் தம்மோடிருக்க
ஆசைப்பட்டோர் உங்களை
பார்த்து, “என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்?
திரும்புங்கள்,” என்கிறார்.
2. உங்களை ரட்சித்தவர்
தெய்வ சுதனானவர்
திரு ரத்தம் சிந்தினார்
சிலுவையில் மரித்தார்
“நீங்கள் வீணில் சாவதேன்!
மரித்துங்களை மீட்டேன்,”
என்று கூறி நிற்கிறார்
”திரும்புங்கள்,” என்கிறார்.
3. உங்களை நேசிப்பவர்
தூய ஆவியானவர்
நயம் பயம் காட்டினார்
குணப்பட ஏவினார்;
“தயை பெற வாரீரோ,
மீட்பைத் தேடமாட்டீரோ!”
என்றிரங்கிக் கேட்கிறார்,
“திரும்புங்கள்,” என்கிறார்.
Post Comment
Tuesday, May 28, 2013
பாமாலை 134 - தெய்வாட்டுக்குட்டிக்கு
பாமாலை 134 – தெய்வாட்டுக்குட்டிக்கு
(Crown Him with many Crowns )
Tune : Diademata
Godfrey Thring |
“Crown Him with Many Crowns” எனும் இப்பாடல் முதன்முதலில் 1851ம் ஆண்டு வெளியானது.. இப்பாடல் வெளியான ஆறு வருடங்கள் கழித்து, Godfrey Thring என்பவர், Matthew எழுதிய முதலாவது பல்லவியை மட்டும் வைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்த பல்லவிகளைத் தாம் எழுதி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, Matthew மற்றும் Godfrey எழுதிய பல்லவிகளை இணைத்து பல்வேறு வடிவங்களில் இப்பாடல் வெளியானது. 1931ம் ஆண்டு Percy Dearmer என்பவரால் இப்பாடல் மேலும் மாற்றியமைக்கப்பட்டு சுவிசேஷ நற்செய்தியைத் தாங்கிய இரண்டு பல்லவிகள் இணைத்து வெளியிடப்பட்டது.
Sir George Job Elvey
இப்படியாக இப்பாடல் பலவாறு மாற்றியமைக்கப்பட்டு, பல்வேறு வடிவங்கள் எடுக்கக் காரணம், Matthew முதலில் எழுதிய பல்லவியில் கன்னிமரியாளைப் பற்றிய சிக்கலான குறிப்புகள் இடம்பெற்றிருந்தன என்றும், Matthew Bridges இப்பாடலின் முதல் பல்லவிக்குப் பின்னர், கிறிஸ்துவின் பாடு மரணம் குறித்தும் நித்தியவாழ்வினைக் குறித்தும் பல்லவிகள் இருந்தால், பாடல் நிறைவாய் இருக்கும் என்று எண்ணி மற்ற பல்லவிகளைத் அவர் இணைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பாடலுக்கான “Diademeta” என்ற ராகத்தை Sir George Job Elvey (1816-1893) என்பவர் எழுதினார். 1868ம் ஆண்டு இப்பாடல் முதன்முறையாக “Ancient and Modern” பாடல் புத்தகத்தில் இடம்பெற்றது.
Smule Recording of 'தெய்வாட்டுக்குட்டிக்கு'
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Karaoke
1. தெய்வாட்டுக்குட்டிக்கு
பன் முடி சூட்டிடும்
இன்னிசையாப் பேரோசையாய்
விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு
உனக்காய் மாண்டோராம்
சதா காலமும் அவரே
ஒப்பற்ற வேந்தராம்.
2. அன்பார்ந்த கர்த்தர்க்கு
பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள்
விண்ணிலும் விளங்கும்
பார்ப்பரோ தூதரும்
ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய்
மூடுவர் தம் கண்கள்.
3. சமாதானக் கர்த்தர்
பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப
ஸ்தோத்ரமே
பூமியை நிரப்பும்
ஆள்வர் என்றென்றைக்கும்
ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு
விளங்கி வளரும்.
4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு
பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர்
உன்னத தெய்வமும்
பாவிக்காய் ஆருயிர்
ஈந்த என் மீட்பரே
சதா நித்திய காலமாய்
உமக்குத் துதியே.
பதிவு தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley
Post Comment
Wednesday, May 15, 2013
பாமாலை 206 - கர்த்தர்தாம் எங்கள்
பாமாலை 206 – கர்த்தர்தாம்
எங்கள் துர்க்கமும்
(A safe stronghold our God is still)
’கர்த்தர்
என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர்’ 2 சாமு 22 : 2
Martin Luther |
கிறிஸ்தவ உலகத்தில் மார்ட்டின்
லூதர் (Martin Luther) என்னும் சீர்திருத்தவாதியைக் குறித்துக் கேள்விப்படாதவர் இல்லை. பதினாறாம் நூற்றாண்டில் இவர், என்றும் அழியாத ஓர்
இயக்கத்தை ஆரம்பித்தார். அக்காலத்தில் பாப்பரசர்
தலைமையில் செயல்பட்டுவந்த ரோமச்சபையின் ஒழுங்கீனங்களையும், திருமறையின் போதனைக்கு மாறாக
ஏற்பட்டிருந்த பழக்கவழக்கங்களையும் லூதர் பலமாகக் கண்டித்ததால், அவரைப் பிடித்துக்கொலை
செய்ய ரோமச் சபைத் தலைவர்கள் திட்டமிட்டு, அவரைப் பல நீதிமன்றங்களுக்கு அழைத்து, அவரது
கொள்கைகளை விட்டுவிடும்படி வற்புறுத்தினர்.
ஆனால் லூதர் மறுத்துவிட்டார். கடைசியில்
ஸ்பயர்ஸ் என்னுமிடத்தில், லூதரின் கொள்கைகளை ஆதரித்த பல ஜெர்மனி நாட்டு சிற்றரசர்கள்
கூடி ரோமச் சபையின் தவறான கொள்கைகளை எதிர்த்து ஒரு பிரகடனம் (Protest of Spires) வகுத்தனர். இதனால் ஜெர்மன் மக்களிடையே ஏற்பட்ட மதப்பிரிவுகளைச்
சீர்படுத்த, ஆக்ஸ்பர்க் நகரத்தில், ஜெர்மன் சக்கரவர்த்தியான ஐந்தாம் சார்ல்ஸ் ஒரு நீதிமன்றத்தைக்
கூட்டி, லூதரை ஆதரித்த ஜெர்மன் சிற்றரசர்களை அழைத்தார். லூதர் இம்மன்றத்துகு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மன்றத்துக்குச் சென்ற பிரபுக்களுடன் பாதிவழி
சென்று, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, பிரயாணத்தின்போதே, ‘கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்’
என்ற பாடலை எழுதி, அதற்கேற்ற ராகத்தையும் அமைத்துப் பாடினார். மிகவும் ஆபத்தான அந்நிலையிலிருந்த அவரது நண்பர்களுக்கு
இப்பாடல் மிகுந்த தைரியத்தையும், மன உறுதியையும் அளித்தது. இப்பாடலை நாம் வாசிக்கும்போது,
அவர் எத்தகைய ஆபத்துகளுக்குட்பட்டிருந்தார் என்பதையும், கடவுளின் பாதுகாப்பை எவ்வளவாக
நம்பியிருந்தார் என்பதையும் காண்போம்.
மார்ட்டின் லூதர் ஜெர்மனி
நாட்டில் எய்லிபென் (Eisleben) நகரத்தில் 1483ம் ஆண்டு, நவம்பர் மாதம், 10ம் தேதி,
பரி. மார்ட்டின் திருநாளன்று பிறந்தார். அவரது
தந்தை ஒரு எளிய சுரங்கத் தொழிலாளி. ஆயினும்,
மகனுடைய கல்வியை முக்கியமாகக் கருதி, அதற்கேற்ற வசதிகள் செய்துகொடுத்தார். மகன் ஒரு வழக்கறிஞராக வேண்டுமென்று தந்தை ஆவல் கொண்டாலும்,
கடவுள் ஊழியத்திற்கென்றே தம்மைத் தத்தம் செய்தார். அவர் எர்பர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து (University
of Erfurt), 1505’ல் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
பின் அந்நகரிலுள்ள ஒரு துறவி மடத்தில் சேர்ந்து, 1507ல் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். மறு ஆண்டில் விற்றன்பர்க் பல்கலைக்கழகத்துக்கு (University
of Wittenberg) மாற்றப்பட்டு, பேராசிரியராகப் பணியாற்றினார். அங்குள்ள நூலகத்தில் ஒரு லத்தீன் வேதபுத்தகத்தைக்
கண்டு, அதை வாசிக்கும்போது, ரோமச் சபையின் சித்தாந்தங்கள் திருமறையின் போதனைகளுக்கு
முற்றிலும் மாறாக இருப்பதைக் கண்டு வியப்புற்றார். ஒருமுறை அவர் ரோம் நகருக்குச் செல்ல நேர்ந்தது. அங்குள்ள துறவிகளும் மதத்தலைவர்களும் நடத்திய வாழ்க்கையைக்
கண்டு, ரோம் நகரமே நரகத்தின் மையம் என்னும் எண்ணத்தோடு விற்றன்பர்க் திரும்பினார்.
இக்காலத்தில்தான் ரோம் நகரில்
பரி. பேதுரு பேராலயம் கட்டத் திரளான பணம் தேவைப்பட்டது. இதற்காகப் பாப்பரசர் உத்தரவுப்படி ஏராளமான பாவமன்னிப்புச்
சீட்டுகள் (Indulgences) தயாரிக்கப்பட்டுப் பல இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. லூதர் இதை பலமாக கண்டித்து, விற்றன்பர்க் ஆலயத்தின்
கதவில் 95 குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு காகிதத்தை ஒட்டிவைத்தார். அப்போது, அங்கு ஒரு பண்டிகைக் காலமாயிருந்ததால்,
ஏராளமானபேர் அதைப் படித்து, அதின் உண்மையை ஒத்துக்கொண்டனர். இது பாப்பரசர் கவனத்துக்கு வரவே, லூதர் ஆஸ்பர்க்
நகரத்துக்கு வரவழைக்கப்பட்டு, பாப்பரசரின் பிரதிநிதியால் விசாரணை செய்யப்பட்டார். இவ்விசாரணையில் அவரது கொள்கைகளைக் குறித்துப் பேசவிடாமல்,
அவற்றைக் கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டது. ஆனால்
லூதர் தன் கொள்கைகளை திருமறையின் ஆதாரமாகக் கொண்டதால் அவற்றைக் கைவிடமறுத்துவிட்டார். அன்றிரவே அவரது நண்பர்கள் அவரை இரகசியமாக விற்றன்பர்குக்கு
அனுப்பிவிட்டனர். இதைக் கேட்ட பாப்பரசர் அவரைச் சபைக்குப் புறம்பாக்கினார்.
லூதரின் சீர்திருத்தக் கொள்கைகளை
ஒழித்துக் கட்டுவதற்காக, ஜெர்மன் சக்கரவர்த்தியான சார்ல்ஸ் என்பவர் வெர்ம்ஸ் நகரில்
ஒரு நீதிமன்றத்தைக் கூட்டினார். இதிலும் அவர்
தன் கொள்கைகளைக் கைவிட இயலாது என உறுதியாகக் கூறினார். ஜெர்மனியிலுள்ள பல சிற்றரசர்களும், பிரபுக்களும்
அவரை ஆதரித்ததால், யாதொரு ஆபத்துமின்றி லூதர் விற்றன்பர்க் திரும்பினார். ஆயினும், லூதர் இன்னமும் மிகுந்த ஆபத்திலிருந்ததால்,
அவரது நண்பர்கள் அவரை வார்ட்பர்க் என்னும் மலைக்கோட்டையில் (Wartburg Castle) ரகசியமாக
ஒளித்து வைத்தனர். இதையறியாத ரோமச் சபையினர்,
லூதர் இறந்தார் என மகிழ்ச்சியடைந்தனர். கோட்டையினுள்ளிருந்து
அவர் புதிய ஏற்பாட்டை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். ஓராண்டுக்குப் பின் அவர் வெளிவந்து தமது ஊழியத்தைத்
தொடர்ந்தார்.
1529ல் சார்ல்ஸ் மன்னர் ஜெர்மனியில்
லூதரை ஆதரித்த பிரபுக்களை ஸ்பயர்ஸ் என்னுமிடத்தில் ஒரு நீதிமன்றத்துக்கு அழைத்தார். இதில் அவர்கள் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரித்து
ஒரு பிரகடனம் வகுத்தனர். இப்பிரகடனம்,
‘Protest of Spires’ என்றும், அதை ஆதரித்தவர்கள், ‘Protestants’ என்றும் அழைக்கப்பட்டனர். இதற்குப்பின் சீர்திருத்தக் கொள்கைகள் காட்டுத்தீபோல்
உலகமெங்கும் பரவி, சீர்திருத்தச் சபைகள் உருவாகின.
மார்ட்டின் லூதர் ஆரம்பத்தில்
ரோமச்சபையின் ஒழுங்கீனங்களைச் சுட்டிக்காட்டும்போது, அச்சபையை விட்டுப் பிரியும் நோக்கமே
கிடையாது. ஆனால் அச்சபையினரின் பிடிவாதமான
போக்கினால் சீர்திருத்தச் சபை உண்டாயிற்று.
அவரது பிற்கால வாழ்க்கை, திருமறையை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பதிலும், பாடல்கள்,
ராகங்கள் எழுதுவதிலும் செலவிடப்பட்டது. அவர்
ஒரு சிறந்த சங்கீத நிபுணர்.
மார்ட்டின் லூதர் எய்லிபென்
நகரத்தில், 1546ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18ம் தேதி மறுமைக்குட்பட்டார்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும் –
நிகர் புவியில் இல்லை.
2. எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
ஆர்? இயேசு கிறிஸ்துதான்;
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்;
சேனாபதி அவர்
ஜெயிப்பார் அவர்தாமே.
3. விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்
இருளின் பிரபு
சீறினாலும், அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.
4. பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும், அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்;
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ;
இராஜ்ஜியமல்லோ
எங்களுக்கே யிருக்கும்.
A safe stronghold our God is still
Post Comment
பாமாலை 183 - எப்போதும் இயேசுநாதா (Day of Rest)
பாமாலை 183 - எப்போதும் இயேசுநாதா
O Jesus, I have promised
Tune : Day of Rest
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. எப்போதும், இயேசு நாதா,
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்;
முன்சென்று பாதை காட்டும்,
நான் வழி தவறேன்.
2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.
3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.
4. ”பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்”,
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்,
“இதோ, பின்செல்வேன்,” என்று
பிரதிக்னை பண்ணினேன்.
5. ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்.
Post Comment
Tuesday, May 14, 2013
பாமாலை 339 - என் மீட்பர் ரத்தம் (Sagina)
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.
2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்
மாறாதவர் என்றறிவேன்
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.
3. மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்துபோயினும்,
உம் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.
4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல்தான்.
Post Comment
Monday, May 13, 2013
பாமாலை 260 - உன்னதமான மா இராஜாவான
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. உன்னதமான
மா இராஜாவான
சீர் சிறந்த இயேசுவே;
உம்மில் களித்து
உம்மைத் துதித்து
நேசித்துக்கொண்டிருப்பேனே.
2. பூ மலர் காடும்
பயிர் ஓங்கும் நாடும்
அந்தமும் சிறப்புமாம்;
இயேசுவின் அந்தம்
எனக்கானந்தம்
என் மனதின் குளிர்ச்சியாம்
3. அண்டங்கள் யாவும்
சூரியன் நிலாவும்
அந்தமாய் பிரகாசிக்கும்;
அவர் முன்பாக
மா ஜோதியாக
மினுங்கும் யாவும் மங்கிப்போம்.
4. விண் மண்ணுடைய
மகிமை மறைய
அவர் அந்தமானவர்;
வானத்திலேயும்
பூமியிலேயும்
நான் நாடினோர் என் ரட்சகர்.
Post Comment
பாமாலை 267 - போற்றும் போற்றும்
பாமாலை 267 - போற்றும் போற்றும்
Praise Him, praise Him, Jesus
Songs & Solos 208
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.
2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
வல்லநாதா, கருணை நாயகா!
3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சி செய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு சுவாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சி செய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு சுவாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.
Post Comment
Sunday, May 12, 2013
பாமாலை 187 - உம் அருள் பெற இயேசுவே-Beatitudo
பாமாலை 187 - உம் அருள் பெற இயேசுவே
I am not worthy Holy Lord
Tune : Beatitudo
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. உம் அருள் பெற, இயேசுவே,
நான் பாத்திரன் அல்லேன்;
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம் வையுமேன்.
2. நீர் எனக்குள் பிரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே.
3. ஆனாலும் வாரும் தயவாய்,
மா நேச ரக்ஷகா;
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா.
4. நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப் பாருமேன்.
5. தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்;
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச் செய்கிறீர்.
6. என் பக்தி, ஜீவன் இதினால்
நீர் விர்த்தியாக்குமேன்;
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.
7. என் ஆவி, தேகம், செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்;
ஆ இயேசுவே, சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்.
Post Comment
பாமாலை 387-ஆ என்னில் நூறு (Creation)
பாமாலை 387 – ஆ என்னில்
நூறு வாயும்
(O DASS ICH
TAUSEND ZUNGEN HÄTTE)
O that I had a thousand voices
Tune : Creation
Johann Metzner என்பவரால் 1704ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் இப்பாடல்
எழுதப்பட்டது. கேத்ரின் விங்க்வர்த் [Catherine Winkworth,
1827-1878] என்பவர் 1863ம் ஆண்டு இப்பாடலுக்கான ஆங்கில வரிகளை எழுதினார். இங்கிலாந்து
நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக்
கழித்த இவர், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம்
ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார்
வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை
மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for
England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of
Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின. ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள்
இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.
தமிழில் ‘சர்வத்தையும் அன்பாய்’ (பாமாலை 386) கேத்ரின் அம்மையாரின் ஜெர்மன்
– ஆங்கில மொழிபெயர்ப்புகளுள் ஒன்றாகும்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
****************************************************************
1. ஆ என்னில் நூறு வாயும்
நாவும்
இருந்தால் கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
2. என் சத்தம் வானமளவாக
போய் எட்ட வேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.
4. வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
என்னோடே கூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.
5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
துதியாய் உங்கள் சத்தமும்
இருந்தால் கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
2. என் சத்தம் வானமளவாக
போய் எட்ட வேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.
4. வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
என்னோடே கூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.
5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்.
Post Comment
Subscribe to:
Posts (Atom)