Tuesday, May 28, 2013

பாமாலை 134 - தெய்வாட்டுக்குட்டிக்கு

பாமாலை 134 – தெய்வாட்டுக்குட்டிக்கு
(Crown Him with many Crowns )
Tune : Diademata

Godfrey Thring
‘தெய்வாட்டுக்குட்டிக்கு’ எனும் இப்பாடல், நம் பாமாலைப் புத்தகத்தில் ‘கிறிஸ்து பரமேறுதல்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில் இப்பாடல் இதுவரை வெளியாகி பாடப்பட்டு வருகிறது என்றபோதிலும், இதன் மூல வடிவத்தை Matthew Bridges (1800-1893) என்பவர் எழுதி, Godfrey Thring (1823-1903) என்பவர் செய்த சில மாற்றங்களுடன், ஏராளமான பாடல் புத்தகங்களில் வெளியாகியுள்ளது. Matthew Bridges இங்கிலாந்தின் Maldon எனும் சிறிய நகரத்தில் பிறந்தார். Anglican பாரம்பரியக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டபோதும், பிற்பாடு அவர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் தன்னை இணைத்துக்கொண்டு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கனடா தேசத்தில் செலவிட்டார்.


“Crown Him with Many Crowns” எனும் இப்பாடல் முதன்முதலில் 1851ம் ஆண்டு வெளியானது.. இப்பாடல் வெளியான ஆறு வருடங்கள் கழித்து, Godfrey Thring என்பவர், Matthew எழுதிய முதலாவது பல்லவியை மட்டும் வைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்த பல்லவிகளைத் தாம் எழுதி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, Matthew மற்றும் Godfrey எழுதிய பல்லவிகளை இணைத்து பல்வேறு வடிவங்களில் இப்பாடல் வெளியானது. 1931ம் ஆண்டு Percy Dearmer என்பவரால் இப்பாடல் மேலும் மாற்றியமைக்கப்பட்டு சுவிசேஷ நற்செய்தியைத் தாங்கிய இரண்டு பல்லவிகள் இணைத்து வெளியிடப்பட்டது.




Sir George Job Elvey

இப்படியாக இப்பாடல் பலவாறு மாற்றியமைக்கப்பட்டு, பல்வேறு வடிவங்கள் எடுக்கக் காரணம், Matthew முதலில் எழுதிய பல்லவியில் கன்னிமரியாளைப் பற்றிய சிக்கலான குறிப்புகள் இடம்பெற்றிருந்தன என்றும், Matthew Bridges இப்பாடலின் முதல் பல்லவிக்குப் பின்னர், கிறிஸ்துவின் பாடு மரணம் குறித்தும் நித்தியவாழ்வினைக் குறித்தும் பல்லவிகள் இருந்தால், பாடல் நிறைவாய் இருக்கும் என்று எண்ணி மற்ற பல்லவிகளைத் அவர் இணைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பாடலுக்கான “Diademeta” என்ற ராகத்தை Sir George Job Elvey (1816-1893) என்பவர் எழுதினார். 1868ம் ஆண்டு இப்பாடல் முதன்முறையாக “Ancient and Modern” பாடல் புத்தகத்தில் இடம்பெற்றது.
 
Smule Recording of 'தெய்வாட்டுக்குட்டிக்கு'

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

Karaoke








































1.            தெய்வாட்டுக்குட்டிக்கு
பன் முடி சூட்டிடும்
இன்னிசையாப் பேரோசையாய்
விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு
உனக்காய் மாண்டோராம்
சதா காலமும் அவரே
ஒப்பற்ற வேந்தராம்.

2.    அன்பார்ந்த கர்த்தர்க்கு
பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள்
விண்ணிலும் விளங்கும்
பார்ப்பரோ தூதரும்
ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய்
மூடுவர் தம் கண்கள்.

3.    சமாதானக் கர்த்தர்
பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப
ஸ்தோத்ரமே
பூமியை நிரப்பும்
ஆள்வர் என்றென்றைக்கும்
ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு
விளங்கி வளரும்.

4.    ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு
பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர்
உன்னத தெய்வமும்
பாவிக்காய் ஆருயிர்
ஈந்த என் மீட்பரே
சதா நித்திய காலமாய்
உமக்குத் துதியே.

பதிவு தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Post Comment

No comments:

Post a Comment