Thursday, June 26, 2014

பாமாலை 316 - இயேசுநாதா காக்கிறீர்

பாமாலை 316 – இயேசு நாதா! காக்கிறீர்
(Jesus, Saviour pilot me)

’கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும் ……… என்றைக்குங் காப்பார்’. சங் 121:8

மனித வாழ்க்கை ஒரு கடல் யாத்திரையை ஒத்திருக்கிறது.  முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் பிரயாணம் செய்பவர்கள், புயலினாலும், கடல் கொந்தளிப்பினாலும், கப்பல் பாறைகளில் மோதினதாலும், யாத்திரையில் பல இன்னல்களை அனுபவித்தனர்.  சரியான கருவிகளின்றிக் கப்பல் அடிக்கடி வழிதவறிச் செல்வதுமுண்டு.  இதைப்போலவே, மனித வாழ்க்கையிலும், அடிக்கடிப் புயல்போன்ற இன்னல்களும், இன்னது செய்வதென்று தெரியாத திகைப்பும் குறுக்கிடுகின்றன.  இயேசுபெருமானே எல்லாவித வாழ்க்கைப் புயல்களிலும் உறுதியான வழிகாட்டியாயிருந்து, இறுதியில் மோட்சக்கரை சேர்க்கிறார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

Edward Hopper
அமெரிக்காவில் நியூயார்க் நகரின் கடற்கரையில், ‘Church of Sea and Land’ என்னும் பெயர்கொண்ட ஓர் ஆலயம் உண்டு.   கப்பலோட்டிகளும், கப்பல் வேலையில் ஈடுபட்ட வேலையாட்களும் வெகுவாக இவ்வாலய ஆராதனைகளில் பங்கு கொள்வார்கள்.  அவர்கள் கப்பல் பிரயாணத்தை ஆரம்பிக்கும்முன்னரும், பிரயாணம் முடித்துத் துறைமுகம் வந்து சேர்ந்தவுடனும், தவறாமல் இவ்வாலய ஆராதனைக்கு வருவதுண்டு.  1871ம் ஆண்டு முதல் இவ்வாலயத்தில் எட்வர்ட் ஹாப்பர் (Edward Hopper) என்னும் போதகர், திருப்பணியாற்றிவந்தார்.  அவரது சபையாரில் அதிகமானபேர் கப்பல் வேலையாளரானதால், ஆராதனையில் வாசிக்கப்படும் திருமறைப்பகுதிகள், பாடப்படும் பாடல்கள், போதகர் ஆற்றும் அருளுரைகள், எல்லாம் கடல் யாத்திரையைக் குறித்தவையாகவும், கிறிஸ்துவே நிலையான வழிகாட்டி என்பதை உணர்த்துவதாகவும் இருந்தன.  கடல் யாத்திரையில் தங்களுக்கு நேரிட்ட பல ஆபத்துகளையும், கவலையான நிலைமைகளையும், கப்பலோட்டிகள் அடிக்கடி ஹாப்பர் போதகரிடம் சொல்வதுண்டு.  ஆதலால், பிரயாணத்தின்போது அவர்கள் எப்போதும் பாடி ஆறுதல் பெறக்கூடிய ஒரு பாடல் எழுதப் போதகர் ஆவல்கொண்டு, ‘இயேசுநாதா காக்கிறீர்’ என்னும் பாடலை எழுதலானார்.  இப்பாடலை ஆங்கிலத்தில் பாடும்போது அதின் தாளம் (Rhythm), கப்பல் கடலில் மேலும் கீழும் ஆடிச் செல்வதையும், குழந்தையைத் தொட்டிலில் தாய் ஆட்டுவதையும் ஒத்திருக்கும்.  இப்பாடலை சபையார் வெகுவாகப் பாராட்டினர்.  அநேகருக்கு இப்பாடல் மனப்பாடமாகி, பிரயாணத்தில் எப்போதும் பாடிக்கொண்டிருந்தனர்.  முதல்முறையாக இப்பாடல் 1871ம் ஆண்டு, கப்பல் தொழிளாலருக்கான ஒரு மாதாந்திரப் பத்திரிகையில் (Sailor’s Magazine) பிரசுரிக்கப்பட்டு, அதே ஆண்டில் பாப்ட்டிஸ்ட் சபையாரின் பாட்டுப் புத்தகத்தில் (The Baptist Hymnal) சேர்த்துக்கொள்ளப்பட்டது.


     இப்பாடலை எழுதிய எட்வர்ட் ஹாப்பர், 1816ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 17ம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார்.  நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து ஐக்கியத் திருமறைக் கல்லூரியில் ஆயர் பயிற்சி பெற்றார்.  நியூயார்க் வட்டாரத்தில் கிரீன்வில் (Greenville), சாக்ஹார்பர் (Sag Harbour) என்னுமிடங்களில் பதினோரு ஆண்டுகள் திருப்பணியாற்றியபின், 1871 முதல் கப்பல் தொழிலாளருக்கான Church of Sea and Land என்னும் ஆலயத்தில் பணியாற்றினார்.  இங்கிருக்கும்போதுதான், ‘இயேசுநாதா காக்கிறீர்’ முதலிய பல பாடல்களை எழுதினார்.  அவர் எழுதிய பாடல்களைத் தன் பெயரில்லாமலேயே பிரசுரித்தார்.  அவரது அரிய சேவையைப் பாராட்டி, 1871ல் லாபாயட் கல்லூரி அவருக்குப் பண்டிதர் பட்டத்தை (Doctor of Divinity) வழங்கியது.  ஹாப்பர் போதகர் 1888ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம் தேதி, ஒரு பாடல் எழுதிக்கொண்டிருக்கும்போது, திடீரென மாரடைப்பால் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            இயேசு நாதா! காக்கிறீர்,
இளைப்பாறச் செய்கிறீர்;
மோசம் நேரிடாமலும்,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர்,
நேச நாதா! காக்கிறீர்.

2.    வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில்
சூறைக் காற்று மோதினும்
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர்;
நேச நாதா காக்கிறீர்.

3.    சற்றுத் தூரம் செல்லவே,
மோட்ச கரை தோன்றுமே!
துன்பம் நீங்கி வாழுவேன்;
இன்பம் பெற்று போற்றுவேன்;
அதுமட்டும் தாங்குவீர்;
நேச நாதா! காக்கிறீர்.
Jesus Savior Pilot me

Post Comment

பாமாலை 273 - இறங்கும் தெய்வ ஆவியே (Warrington)

பாமாலை 273 - இறங்கும் தெய்வ ஆவியே 
Tune : Warrington

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. இறங்கும், தெய்வ ஆவியே
அடியார் ஆத்துமத்திலே
பரத்தின் வரம் ஈந்திடும்
மிகுந்த அன்பை ஊற்றிடும்.

2. உம்மாலே தோன்றும் ஜோதியால்
எத்தேசத்தாரையும் அன்பால்
சம்பந்தமாக்கி, யாவர்க்கும்
மெய் நம்பிக்கையை ஈந்திடும்.

3. பரத்தின் தூய தீபமே,
பரத்துக்கேறிப் போகவே
வானாட்டு வழி காண்பியும்
விழாதவாறு தாங்கிடும்.

4. களிப்பிலும் தவிப்பிலும்
பிழைப்பிலும் இறப்பிலும்
எப்போதும் ஊக்கமாகவே
இருக்கும்படி செய்யுமே

Post Comment

Monday, June 23, 2014

பாமாலை 212 - பகலோன் கதிர் (Duke Street)

பாமாலை 212 - பகலோன் கதிர் போலுமே
Jesus shall reign where'er the sun
Tune : Duke Street

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.     பகலோன் கதிர்போலுமே   
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடுழி காலம் வர்த்திக்கும்.

2.    பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.

3.    நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார்
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.

4.    பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்
”நீர் வாழ்க, ராயரே” என்பார்.


Post Comment

Monday, June 16, 2014

பாமாலை 191 - சாந்த இயேசு ஸ்வாமி (Caswall)

பாமாலை 191 - சாந்த இயேசு ஸ்வாமி 
Jesus gentlest Saviour
Tune : Caswall


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. சாந்த இயேசு ஸ்வாமி,
வந்திந்நேரமும்,
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்.

2. வானம், பூமி, ஆழி,
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும்
கொள்ள ஏலாதே.

3. ஆனால், பாலர் போன்ற
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை
ஏற்கப் பெறுவார்.

4. விண்ணின் ஆசீர்வாதம்
மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள்
போற்றல் எவ்வாறே?

5. அன்பு, தெய்வ பயம்,
நல்வரங்களும்,
சாமட்டும் நிலைக்க
ஈயும் அருளும்.

Post Comment

Sunday, June 8, 2014

பாமாலை 142 - பிதாவே மா தயாபரா (Rivaulx)

பாமாலை 142 - பிதாவே மா தயாபரா 
Father of Heaven whose love profound
Tune : Rivaulx

SATB


Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


 

1.            பிதாவே, மா தயாபரா,
ரட்சிப்பின் ஆதி காரணா,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பாக மன்னிப்பீயுமேன்.

2.    பிதாவின் வார்த்தை மைந்தனே,
தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
சிம்மாசனமுன் தாழுவேன்
ரட்சணிய அருள் ஈயுமேன்.

3.    அநாதி ஆவி, உம்மாலே
மரித்த ஆன்மா உய்யுமே
சிம்மாசனமுன் தாழுவேன்
தெய்வீக ஜீவன் ஈயுமேன்.

4.    பிதா குமாரன் ஆவியே,
திரியேகரான ஸ்வாமியே,
சிம்மாசனமுன் தாழுவேன்

Post Comment

Wednesday, June 4, 2014

பாமாலை 254 - களிப்புடன் கூடுவோம் (Monkland)

பாமாலை 254 – களிப்புடன் கூடுவோம்
(Let us with a gladsome mind)
Tune : Monkland

‘கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது’. சங் 36:1

பழைய ஏற்பாட்டுக்காலத்தில், யூத ஜனங்களின் தெய்வ வழிபாடுகளில் சங்கீதங்களே பாடல்களாக உபயோகிக்கப்பட்டுவந்தன.  ஒவ்வொரு வசனமும் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சபையாரின் ஒரு பகுதியினர் முதல் பாகத்தையும் மற்ற பகுதியினர் இரண்டாம் பாகத்தையும் வாத்தியக் கருவிகளுடன் பாடிவந்தனர்.  120ம் சங்கீதம் முதல் பல சங்கீதங்கள் ‘ஆரோகண சங்கீதம்’ என்னும் தலைப்பைக் கொண்டவை. இவை யூத ஜனங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பிவரும்போதும், தேவாலயப் பிரகாரங்களில் செல்லும்போதும், பண்டிகைக்காலங்களில் எருசலேமுக்குச் செல்லும்போதும் பாடிக்கொண்டுபோவதற்காக எழுதப்பட்டவை.  கிறிஸ்தவ வழிபாடுகளிலும் முதலில் சங்கீதங்களே பாடப்பட்டுவந்தன. நமது பாட்டுப்புத்தகங்களிலும், சங்கீதங்களைத் தழுவி எழுதப்பட்ட அனேக பாடல்களைக் காணலாம்.  136ம் சங்கீதமானது, கடவுள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, பார்வோனுடைய சேனைகளை சிவந்த சமுத்திரத்தில் அழித்து, கானான் தேசத்திலுள்ள பல ராஜாக்களை அழித்து, அத்தேசத்தை அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்ததற்காகவும் அவரைத் துதித்துப் பாடப்பட்டிருக்கிறது.

John Milton
1623ம் ஆண்டு, ஜான் மில்ட்டன் (John Milton) என்னும் பிரபல ஆங்கிலக்கவிஞர் தனது திருமறையைப் படித்துக்கொண்டிருக்கையில், சங்கீத புத்தகத்திலுள்ள பல சங்கீதங்கள் பாடல் ரூபத்தில் அமையக்கூடியதாக இருப்பதைக் கண்டார்.  அவற்றில் 136ம் சங்கீதத்தில் ஒவ்வொரு வசனமும் ‘அவர் கிருபை என்றுமுள்ளது’ என்னும் பல்லவியோடு முடிவடைவதைப் பார்த்தவுடன், அதேவிதமான பல்லவியோடு முடிவடையும் ஒரு பாடல் எழுத ஆவல் கொண்டார். ஆகவே, 26 வசனங்கள் கொண்ட அந்த சங்கீதத்தை 24 கவிகள் கொண்ட ஒரு பாடலாக எழுதி முடித்தார். இப்பாடலே ‘களிப்புடன் கூடுவோம்’ என்னும் பாடலாகும்.  இதிலுள்ள எல்லா கவிகளும் மிகச் சிறந்ததாயிருப்பினும், பாட்டுப்புத்தகத் தொகுப்பாளர்கள் நான்கு அல்லது ஐந்து கவிகளை மட்டும் சேர்த்துக்கொண்டனர். இப்பாடல் கிறிஸ்தவ மாநாடுகளில் ஒரு துதிப்பாடலாகவும், அன்பின் விருந்துகளில் நன்றிகூறும் பாடலாகவும் பாடப்பட்டு வருகின்றது.

இப்பாடலை எழுதிய ஜான் மில்ட்டன் 1608ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தார். இவரது தந்தை ஓர் எழுத்தாளர். இளம் வயதிலேயே மகனுடைய சிறந்த திறமையையுணர்ந்து, நல்ல கல்வி பயில வசதியளித்தார்.  முதலில் தூய பவுல் பள்ளியிலும், பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.  அவரது சிறந்த ஒழுக்கத்தையும், நேர்மையான நடத்தையையும் கவனித்த அவரது உடன் மாணவர் அவரை, ‘கிறிஸ்துவின் மனையாட்டி’ (Lady of Christ’s) என அழைத்தனர். தமது வாழ்க்கையில் அவர் கவிஞராகவும், கட்டுரையாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.  சிறிது காலம் அவர் அரசாங்கத் துறையில் லத்தீன் மொழி மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார்.  மில்ட்டன் 1652 முதல் கண்பார்வையை இழந்தபோதிலும், கவிகள் எழுதுவதைக் கைவிடவில்லை.  அவர் கவிகளைச் சொல்லும்போது, அவரது மகள்கள் அவற்றை எழுதி வைத்தனர்.  அவர் எழுதிய கவிகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது 1667ல் அவர் வெளியிட்ட, ‘Paradise Lost’ என்னும் ஆங்கிலக் காவியமாகும்.  ஆங்கிலக் கவிஞர்களில் ஷேக்ஸ்பியர் என்பவருக்கு அடுத்தபடியாக ஜான் மில்ட்டன் வைக்கப்பட்டுள்ளார்.


Milton Memorial
ஜான் மில்ட்டன் 1674ம் ஆண்டு, நவம்பர் மாதம், 8ம் தேதி தமது 66வது வயதில் மறுமைக்குட்பட்டார். அவரது உடல் தூய ஜைல்ஸ் (St. Giles) ஆலயத்தில் அடக்கம் பண்ணப்பட்டது.  அவரது ஞாபகார்த்தமாக லண்டன் மாநகரிலுள்ள, ‘வெஸ்ட் மின்ஸ்டர் அபே (Westminster Abbey)’ என்னும் பேராலயத்தில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2.    ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.

3.    இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழி காட்டினார்;
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.

4.    வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.
Let us with a Gladsome mind

Post Comment

பாமாலை 198 - விருந்தைச் சேருமேன்

பாமாலை 198 - விருந்தைச் சேருமேன்
Come for the feast is spread

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




































1.    விருந்தைச் சேருமேன்
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன்
போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.

2.    ஊற்றண்டை சேரவும்
ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும்
நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.

3.    மீட்பரின் பாதமும்
சேராவிடில்,
தோல்வியே நேரிடும்
போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்;
வா, பாவி, வா.

4.    மோட்சத்தின் பாதையில்
முன் செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில்
ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.

5.    சேருவேன், இயேசுவே
ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே
சுத்தம் செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.

Post Comment

Tuesday, June 3, 2014

பாமாலை 138 - தெய்வ ஆவியே (Thuringia)

பாமாலை 138 - தெய்வ ஆவியே 
Tune : Thuringia

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  தெய்வ ஆவியே,
பூர்வ நாளிலே
பலபாஷை பேசும் நாவும்
மேன்மையான வரம் யாவும்
உம்மால் வந்ததே,
தெய்வ ஆவியே.

2.    சத்திய ஆவியே,
போதகர் நீரே;
மீட்பர் அருமையைக் காட்டி,
அவர் சாயலாக மாற்றி
என்னை ஆளுமே,
சத்திய ஆவியே.

3.    ஜீவ ஊற்று நீர்,
என்னில் ஊறுவீர்,
சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,
ஆத்துமாவின் தாகம் தீர்க்க
ஜீவ ஊற்று நீர்,
என்னில் ஊறுவீர்.

4.    நேச ஆவியே,
எந்தன் நெஞ்சிலே
ஐயம் நீங்க இச்சை மாள,
தெய்வ சமாதானம் ஆள,
வாசம் பண்ணுமே,
நேச ஆவியே.

Post Comment