Sunday, July 27, 2014

பாமாலை 114 - வாதையுற்ற மீட்பரே

SATB 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano















x























































1. வாதையுற்ற மீட்பரே,
என் அடைக்கலம் நீரே;
நான் என் பாவப் பாரத்தால்
தொய்ந்து போய்க் கலங்கினால்,
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.

2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா
புண்ணியமும் விருதா;
தளரா முயற்சியால்,
மனஸ்தாபக் கண்ணீரால்
குற்றம் நீங்காதென்றைக்கும்;
கிருபைதான் ரட்சிக்கும்.

3. உள்ளவண்ணம் அண்டினேன்,
அன்பாய் என்னை நோக்குமேன்;
திக்கற்றோன் நான், ரட்சியும்;
அசுத்தன் நான், கழுவும்.
மூடும் என் நிர்வாணத்தை;
எழைக்கீயும் செல்வத்தை.

4. வாதையுற்ற மீட்பரே,
என் அடைக்கலம் நீரே,
என் இக்கட்டனைத்திலும்,
சாகும் தருணத்திலும்
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.


Post Comment

பாமாலை 108 - பாவ நாசர் பட்ட காயம் (Batty)

பாமாலை 108 - பாவ நாசர் பட்ட காயம் 
Sweet the moments rich in blessing
Tune : Batty


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1. பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம்,
ஆறுதலும் உள்ளது.

2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று;
தெய்வ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் 
தஞ்சம் என்று பற்றினேன்;
அவர் திவ்விய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்.

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன்.

5. சிலுவையை நோக்கி நிற்க,
உமதருள் உணர்வேன்;
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,
சமாதானம் பெறுவேன்.

6. அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்;
சோர்ந்த திரு முகத்தினில்
காண்பேன் திவ்விய உருக்கம்.

7. உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்,
உம்மை ஓயா தியானம் செய்ய
என்னை ஏவியருளும்.


Post Comment

Monday, July 21, 2014

பாமாலை 103 - என் அருள் நாதா (Rockingham)

பாமாலை 103 – என் அருள்நாதா, இயேசுவே
(When I survey the wondrous cross)
Tune : Rockingham


‘நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. கலாத்தியர் 6 : 14

இப்பாடலின் இரண்டாவது வரியாகிய, ‘சிலுவைக் காட்சி பார்க்கையில்’ என்பதில், ‘பார்க்கையில்’ என்பது ஆங்கிலத்தில், Survey என்றிருக்கிறது.  இப்பதம் நிலத்தை அளப்பதைக் குறிக்கும்.  நிலத்தை அளப்பவன், நிலத்தின் இருப்பிடம், வடிவம், பரப்பு, எல்கைகள் முதலியவற்றைத் தன் கண்களினாலும், அளக்கும் கருவிகளினாலும் தன் மனதில் திட்டவட்டமாகக் கணிக்கவேண்டும்.  இதையே இப்பாடலை எழுதியவர் தன் மனதில் எண்ணியிருக்கலாம்.  கிறிஸ்தவர்களாகிய நாம், அருள்நாதர் உயிர்துறந்த கல்வாரிச் சிலுவைக் காட்சியை இவ்விதமாகவே ஆராயவேண்டும்.

சிலுவைக் காட்சியை நாம் நுட்பமாக ஆராயும்போது, நமது வாழ்க்கையிலுள்ள குறைகள் தென்படும்.  நமது சாதனைகளைக் குறித்து பெருமைபாராட்ட இடமிராது.  மேலும், சிலுவைக்காட்சி வேதனை கொடுக்கும் ஒரு சின்னமாகத் தோற்றமளிக்கும்.  ஆண்டவரின் முகத்தில் முள்முடியினால் வடிந்த இரத்தம் பாய்ந்தோடுவதையும், கைகளிலும், கால்களிலும், ஆணிகளினால் பாய்ந்த இரத்தத்தையும் காண்கிறோம்.  கல்வாரிச் சிலுவை, ‘பேரன்பும், துன்பும் கலந்தே பாய்ந்தோடும்’ காட்சியையும் அளிக்கிறது.  நாம் இன்னும் பாவிகளாயிருக்கையில், அவர் நம்மை நேசித்தார்.  ஆகவே, இச்சிலுவைக் காட்சியின்முன் நாம் தலைகுனிந்து, நம்மை அவருக்கு அர்ப்பணம் செய்ய ஏவப்படுகிறோம்.  சராசரங்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமாய் இருந்தாலும், அவை ஆண்டவரின் அன்புக்கு ஈடாகமாட்டா.

Isaac Watts
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர் (Isaac Watts) 1674ம் ஆண்டு, ஜூலை மாதம் 17ம் தேதி, இங்கிலாந்தில் Southampton நகரில், ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார்.  அவரது தந்தை ஓர் ஆசிரியர்.  Southampton நகரிலுள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் குருவானவர், ஐசக் வாட்சுக்கு லத்தீன், கிரேக்க, எபிரேய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.  1690ல் அவர் சுய ஆளுகைச் சபையைச் சேர்ந்த ஒரு வேதசாஸ்திரப் பயிற்சி நிலையத்தில் பயின்று, 1697ல் தமது இருபத்துநான்காவது வயதில், லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகைச் சபையின் போதகராகத் திருப்பணியாற்ற ஆரம்பித்தார்.  சில ஆண்டுகள் பணியாற்றியபின், அவரது உடல் நலம் குன்றியதால், திருப்பணியை விட்டு, 1714 முதல், ஹெர்போர்டுஷயரிலிருந்த தமது நண்பர், ஸர் தாமஸ் அபினியுடன் (Sir Thoma Abney) நிரந்தரமாகத் தங்கியிருக்கவேண்டிவந்தது.

அவர் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தபோது, அக்காலத்திலிருந்த கிறிஸ்தவப் பாட்டுப் புத்தகங்களில் காணப்பட்ட பாடல்களில் அதிருப்தியடைந்து, தாமே பல பாடல்கள் எழுதினார்.  இரண்டு ஆண்டுகளாக அவர் எழுதிய பாடல்களை, ‘ஆவிக்குரிய பாடல்களும், ஞானப்பாட்டுகளும்’ (Hymns and Spiritual songs) என்னும் பெயருடன் வெளியிட்டார்.  ‘என் அருள்நாதா இயேசுவே’ என்னும் இப்பாடல் கலாத்தியர் 6:14ம் வசனத்தின்பேரில், 1707ம் ஆண்டு எழுதப்பட்டது.  பிரபல ஆங்கிலக்கவிஞரான மேத்யூ அர்னால்டு, இப்பாடலைப் பார்த்து, ‘ஆங்கிலமொழியில் எழுதப்பட்ட பாடல்களில் மிகச்சிறந்த பாடல்’ எனப் போற்றியுள்ளார்.  தனது மரணப் படுக்கையிலும் இதையே கடைசியாகப் பாடி மகிழ்ந்தார்.  

Edward Miller
இப்பாடலுக்கு எட்வார்ட் மில்லர் (Edward Miller) என்பவர் எழுதிய ‘Rockingham’ என்னும் ராகம் மிகவும் அழகாக அமைந்துள்ளது.

ஐசக் வாட்ஸ் பண்டிதர் ஒரு சிறந்த கவிஞர்.  மேலும் அநேக வேதவிளக்கங்களும், சரித்திரம், தத்துவசாஸ்திரம், முதலியனவற்றைக் குறித்த கட்டுரைகளும் எழுதியுள்ளார்.  ஆயினும் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலமாகவே அவர் புகழ் பெற்றார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் பிரபலமானவை:


வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் (பாமாலை 168)
பகலோன் கதிர்போலுமே (பாமாலை 212)
கர்த்தாவே யுகயுகமாய் (பாமாலை 253)
நான் உம்மைப்பற்றி ரட்சகா – S.S. 883

Isaac Watts Monument at
Westminister Abbey
அவர் 1748ம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ம் தேதி காலமானார், அவரது ஞாபகார்த்தமாக, லண்டன் மாநகரில் வெஸ்ட்மினிஸ்டர் ஆபி என்னும் தேசியப் பேராலயத்தில் ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

Pics Courtesy : Wikipedia



Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.

2.    என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3.    கை, தலை, காலிலும், இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே.

4.    சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்.

5.    மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே.

When I survey the Wondrous cross

Post Comment

Sunday, July 20, 2014

பாமாலை 84 - ஆ மேசியாவே வாரும் (Crüger)

பாமாலை 84 - ஆ மேசியாவே வாரும்
Hail to the Lord Anointed
Tune : Crüger

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. ஆ மேசியாவே வாரும்
தாவீதின் மா மைந்தா!
பார் ஆள ஏற்ற காலம்
நீர் வந்தீர் மா கர்த்தா;
சிறைகளையே மீட்டு
கொடுங்கோல் முறிப்பீர்.
சிறப்பாய் நீதி செய்து
பாவமும் போக்குவீர். 

2. நிஷ்டூரம் யாவும் நீக்கி
சகாயம் நல்குவீர்;
கஷ்டத்தில் ஏழை தேற்றி
நல் பலம் ஈகுவீர்;
மாய்வோர் திரளை மீட்டு
களிப்பால் நிரப்பி,
உய்விப்பீர் ஒளி ஈந்து
இருளை அகற்றி.

3. நல் மாரிபோல் நீர் வாரும்
இப்பூமி செழிக்க
நம்பிக்கை மகிழ்வன்பும்
எங்கெங்கும் மலர
நாதர் முன்தூதனாக
நற் சமாதானமும்
நீதியும் நதியாக
எங்கெங்கும் பாய்ந்திடும்.

4. விழுவார் தாழ்ந்து வேந்தர்
பொன் போளம் படைத்தே
தொழுவாரே, பார் மாந்தர்
துதித்துப் பாடியே,
ஓயா மன்றாட்டு ஸ்தோத்ரம்
சமுகம் ஏறிடும்;
ஒழியாதோங்கும் ராஜ்யம்
என்றும் நிலைத்திடும்.

5. மாற்றார் எல்லாரும் மாய
மாண்பாக ஆளுவீர்
பேற்றின்மேல் பேறுண்டாக
ஆண்டாண்டும் ஆளுவீர்;
நிற்கும் ஓயாத காலம்
உமது ஆணையே,
அன்பாம் உமது நாமம்
ஆம், சதாகாலமே.


Post Comment

Friday, July 18, 2014

பாமாலை 83 - நீர் தந்த நன்மை (Contemplation)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1.    நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து, கர்த்தரே,
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்வேனே.

2.    குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே.

3.    என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தாங்கினீர்.

4.    அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே பொழிந்தீர்.

5.    இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்;
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன்.

6.    புகழ்ச்சி, துதி, தோத்திரம்
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே.

Post Comment

பாமாலை 80 - இன்னோர் ஆண்டு முற்றுமாய்-(Tune-Lubeck)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே
உம்மைத் துதி செய்வோமே.
 
2.    நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.
 
3.    யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.
 
4.    நாங்கள் உந்தன் தாசராய்,
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.
 
5.    ஏக கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே,
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.

Post Comment

பாமாலை 187 - உம் அருள் பெற இயேசுவே-Contemplation

பாமாலை 187 - உம் அருள் பெற இயேசுவே
I am not worthy Holy Lord
Tune : Contemplation

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. உம் அருள் பெற, இயேசுவே,
நான் பாத்திரன் அல்லேன்;
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய்,
மா நேச ரக்ஷகா;
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்;
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி, ஜீவன் இதினால்
நீர் விர்த்தியாக்குமேன்;
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.

7. என் ஆவி, தேகம், செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்;
ஆ இயேசுவே, சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

Post Comment

Thursday, July 17, 2014

பாமாலை 230 - ஆ இன்ப இல்லமே

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1. ஆ, இன்ப இல்லமே! நீ என்றும்
தழைத்து வாழ்க!
அன்புடன் பாலர் யாரும் அங்கு
ஐக்கியமாய் ஓங்க;
அன்னை தந்தை
ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.

2. ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம்,
சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
உகந்து செய்ய;
பக்தியுடன்
பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3. ஆ, இன்ப இல்லமே! நன்மை
பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ
நன்றியுடன் போற்று;
துன்பம் துக்கம்
துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.

4. ஆ, இன்ப இல்லமே! உன்
உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
என்றும் நடத்தும்;
எவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

Post Comment

Wednesday, July 16, 2014

பாமாலை 229 - அடியார் வேண்டல் (Penitentia)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே!
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும், நாயகா;
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

4. வாலிபர் நெறி தவறாமலும், 
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.

7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

Post Comment

Monday, July 14, 2014

பாமாலை 76 - கோடானுகோடி சிறியோர்

பாமாலை 76 - கோடானுகோடி சிறியோர்
Around the Throne of God in Heaven

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    கோடானுகோடி சிறியோர்
மேலோகில் நிற்கிறார்;
எப்பாவம் தோஷமின்றியும்
ஓயாமல் பாடுவார்
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
 
2.    பேரின்ப வீட்டில் சுகமும்
மெய் வாழ்வும் நிறைவாய்
உண்டாக, சிறு பாலரும்
சேர்ந்தார் எவ்விதமாய்?
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
 
3.    மா பாவம் போக்கச் சிந்தினார்
மீட்பர் தம் ரத்தத்தை;
அப்பாலர் மூழ்கி அடைந்தார்
சுத்தாங்க ஸ்திதியை;
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
 
4.    ஏரோதின் வாளால் மடிந்து,
தம் பாலன் மீட்பர்க்காய்
ஆருயிரை நீத்ததாலே
உம் பாதம் சேர்ந்தோர்க்காய்,
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
 
5.    பெத்தலை தூய பாலர்போல்
வியாதி ஆபத்தால்
சுத்த இளமையில் சென்றோர்
எண்ணற்ற பாலரால்,
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
 
6.    இப்பூமியில் நல்மீட்பரின்
பேரன்பை அறிந்தார்
விண் வீட்டில் அவர் அண்டையில்
நின்றாரவரிப்பார்
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.

Post Comment

Sunday, July 13, 2014

பாமாலை 74 - முதல் ரத்தச் சாட்சியாய் (Lubeck)

பாமாலை 74 - முதல் ரத்தச் சாட்சியாய் 
First of Martyr's thou whose name
Tune : Lubeck

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    முதல் ரத்தச் சாட்சியாய்
மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;
வாடா கிரீடம் உன்னதாம்
என்றுன் நாமம் காட்டுமாம்.

2.    உந்தன் காயம் யாவிலும்
விண் பிரகாசம் இலங்கும்
தெய்வதூதன் போலவே
விளங்கும் உன் முகமே.

3.    மாண்ட உந்தன் மீட்பர்க்காய்
முதல் மாளும் பாக்கியனாய்,
அவர்போல் பிதா கையில்
ஆவி விட்டாய் சாகையில்.

4.    கர்த்தர்பின் முதல்வனாய்
ரத்த பாதையில் சென்றாய்
இன்றும் உன்பின் செல்கின்றார்
எண்ணிறந்த பக்தர், பார்!

5.    மா பிதாவே, ஸ்தோத்திரம்,
கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,
வான் புறாவே, ஸ்தோத்திரம்
நித்தம் நித்தம் ஸ்தோத்திரம்.


Post Comment

பாமாலை 3 - உன்னதம் ஆழம் எங்கேயும் (Tune - St. Magnus)

 SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
 
2.    பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே!
 
3.    முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்
 
4.    மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்
 
5.    மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே
 
6.    கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்
 
7.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை; செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

Post Comment

Friday, July 11, 2014

பாமாலை 63 - சபையே இன்று வானத்தை (St. Magnus)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    சபையே இன்று வானத்தை
திறந்து தமது
சுதனைத் தந்த கர்த்தரை
துதித்துக் கொண்டிரு.

2.    பிதாவுக்கொத்த இவரே
குழந்தை ஆயினார்
திக்கற்று முன்னணையிலே
ஏழையாய்க் கிடந்தார்.

3.    தெய்வீக ஸ்பாவம் நம்மிலே
உண்டாக ஆண்டவர்
நரரின் ஸ்பாவமாய் இங்கே
வந்து பிறந்தனர்.

4.    சிறியோராக ஆண்டவர்
பலத்தை மாற்றினார்;
பண்செய்வன் ரூபை சிஷ்டிகர்
தாமே எடுக்கிறார்.

5.    அவர் புவியில் பரம
இராஜ்ஜியத்தையே
உண்டாக்க வந்தோராகிய
தாவீதின் மைந்தனே.

6.    தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம்
இதென்ன அற்புதம்?
இதுன்னத சிநேகம் ஆம்
அன்பதின் பூரணம்.

7.    திரும்பப் பரதீசுக்கு
வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று
மகிழ்ந்து பாடுவோம்.

Post Comment

Wednesday, July 9, 2014

பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    ஆத்துமாவே உன்னை ஜோடி
தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி
நன்றாய் ஜாக்கிரதைப்படு
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்

2.    இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்
உம்மையே இம்மானுவேலே
பக்தியாய் உட்கொள்ளுவேன்
தேவரீரே
ஜீவ அப்பமானவர்

3.    மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே

4.    உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று
அப்பமாக
உம்மை நான் அருந்தவே.

Post Comment

Monday, July 7, 2014

பாமாலை 47 - உலகின் வாஞ்சையான (Ellacombe)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி இயேசுவே,
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதென்ன?
நான் தேவரீருக்கு
செலுத்த உமக்கென்ன
பிரியமானது?

2. நீர் சேர்கையில் களிக்கும்
சீயோன்; கிளைகளை
வழியிலே தெளிக்கும்;
நான் உமதுண்மையை
சங்கீதத்தால் துதிப்பேன்,
மகிழ்ச்சியுடனே
நான் உம்மைத் தோத்திரிப்பேன்,
மா வல்ல கர்த்தரே.

3. நான் நன்மையான ஏதும்
இல்லாத தீயோனாய்
நிர்ப்பந்தம், பயம், நோவும்
நிறைந்தவனுமாய்
இருந்தபோதன்பாக
நீர் என்னை நோக்கினீர்;
உம்மை என் மீட்புக்காக
வெளிப்படுத்தினீர்.

4. கட்டுண்டு நான் கிடந்தேன்,
என் கட்டை அவிழ்த்தீர்;
மா சாபத்தைச் சுமந்தேன்,
நீர் அதை நீக்கினீர்;
நீர் என்னை மேன்மையாக்கி
என் ஆத்துமத்திலே
இன்ப நிறைவுண்டாக்கி,
ரட்சிக்க வந்தீரே.

5. வியாகுலம் அடைந்த
நரரின் கூட்டமே,
இக்கட்டினால் நிறைந்த
நிர்ப்பந்த மாந்தரே,
இதோ! சகாயர் வந்தார்;
கர்த்தர் கெட்டோருக்கு
இரட்சகரைத் தந்தார்,
அதால், மகிழ்ந்திரு.

6. நெஞ்சே துன்மார்க்கருக்கும்
பகைஞர் உனக்கு
உண்டாக்கும் துன்பத்துக்கும்
பயப்படாதிரு;
உன் மீட்பர் ராஜாவாக
வருகிறாரல்லோ,
அவருக்கு முன்பாக
பேய்க் கூட்டம் நிற்குமோ?

7. பொல்லாதவர்களுக்கு
அநந்த துக்கமும்,
நல்லோரின் கூட்டத்துக்கு
அநந்த பூரிப்பும்
முடிவிலே உண்டாக
அந்நாள் வருவாரே;
ஆம், எங்கள் மீட்புக்காக
நீர் வாரும், இயேசுவே.

Post Comment

பாமாலை 28 - ஆ பிதா குமாரன் ஆவி

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass


1.    ஆ, பிதா குமாரன் ஆவி,
விண்மண் உலகை எல்லாம்
தாங்கும் சருவ வியாபி
உம்மால் ராப்பகலுமாம்
உம்மால் சூரியன் நிலா
ஓடுது தயாபரா.

2.    சாத்தான் தீவினை வீணாக,
என்னைப் போன ராவிலே
தேவரீர் மா தயவாக
கேடும் தீதுமின்றியே
காத்ததால், என் மனது
தேவரீரைப் போற்றுது.

3.    ராப்போனாற்போல் பாவராவும்
போகப் பண்ணும், கர்த்தரே
அந்தகாரம் சாபம் யாவும்
நீங்க, உம்மை இயேசுவே
அண்டிக்கொண்டு நோக்குவேன்
உம்மால் சீர் பொருந்துவேன்.

4.    வேதம் காண்பிக்கும் வழியில்
என்னை நீர் நடத்திடும்
இன்றைக்கும் ஒவ்வோரடியில்
என்னை ஆதரித்திடும்
எனக்கு நீர்மாத்திரம்
பத்திர அடைக்கலம்.

5.    தேகம் ஆவி என்னிலுள்ள
சிந்தை புத்தி யாவையும்
ஸ்வாமி, உமதுண்மையுள்ள
கைக்கும் ஆதரிப்புக்கும்
ஒப்புவிப்பேன், என்னை நீர்
பிள்ளையாக நோக்குவீர்.

6.    வானதூதர்கள் அன்பாக
என்னைப் பேயின் கண்ணிக்கு
தப்புவிக்கவும் நேராக
கடைசியில் மோட்சத்து
வாழ்வில் கொண்டு போகவும்
தயவாகக் கற்பியும்.

7.    என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும்
ஆ, திரியேக வஸ்துவே,
என் மனுக்காமென்று சொல்லும்
வேண்டிக்கொள்ளச் சொன்னீரே
ஆமேன், உமக்கென்றைக்கும்
தோத்திரம் புகழ்ச்சியும். 

Post Comment

Sunday, July 6, 2014

பாமாலை 25 - கர்த்தாவே இப்போ உம்மை (Ellers)

பாமாலை 25 – கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம்
(Saviour again to Thy dear Name we raise)

’சமாதானத்தோடே போ’. லூக்கா 8 : 48

உலகரட்சகராகிய இயேசு பெருமான் பெத்லகேமில் பிறந்தபோது, தெய்வதூதரின் சேனைத்திரள் மேய்ப்பர்முன் தோன்றி, ‘பூமியிலே சமாதானம்’ எனப்பாடினர்.  உலகம் உண்டானதுமுதல், மனித இனம் சமாதானத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது.  நமதாண்டவரும் மலைப்பிரசங்கத்தில், ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்’ எனப்போதித்தார்.  தன் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு சுகமடைந்த ஸ்திரீயைப் பார்த்து, ‘சமாதானத்தோடே போ’ என்றார்.  அவர் உயிர்த்தெழுந்தபின் சீஷருக்குக் காணப்பட்டு, ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார்.  ஒவ்வொரு ஆலய ஆராதனையின் முடிவிலும் குருவானவர், ‘சமாதானத்தோடே போகக்கடவோம்’ என்னும் ஆசீர்வாதத்துடன் சபையாரை அனுப்பி வைக்கிறார்.  நாம் எப்போதும் ஆண்டவரிடத்தில் சமாதானத்தைப்பெற ஆவலாயிருக்கிறோம்.

Rev. John Ellerton
1866-ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் செஷயர் மாகாணத்தில் ஜான் எல்லர்ட்டன் போதகர் (Rev. John Ellerton) திருப்பணியாற்றி வந்தார்.  அவர் இருந்த ஊரில் ஆண்டுதோறும் ஒரு பாடல் விழா (Hymn Festival) கொண்டாடப்பட்டு வந்தது.  அவ்வாண்டில் நடக்கவிருந்த விழாவுக்கு எல்லர்ட்டன் போதகர் தலைமை தாங்கினார்.  அவ்விழாவின் முடிவில் பாடப்படுவதற்காக ஒரு பாடல், தாமே எழுத போதகர் ஆவல்கொண்டு, ஆழ்ந்து சிந்திக்கலானார்.  இதற்காக அவர் மேசையிலிருந்த பல கைப்பிரதிகளைப் புரட்டும்போது, அதற்கு முந்தின வாரம், ‘சமாதானத்தோடே போ’ (லூக் 8:48) என்னும் வசனத்தில் அவர் செய்த அருளுரைக் குறிப்புகள் கையில் கிடைத்தன.  இதைக்குறித்து அவர் ஆழ்ந்து சிந்திக்கவே, ‘கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம்’ என்னும் பாடலவர் மனதில் உதித்தது. 
Edward J. Hopkins
உடனே அக்குறிப்பேட்டுக்குப் பின்புறம், அப்பாடலை எழுதி வைத்தார்.  மறுநாள், விழாவின் முடிவில், இப்பாடல் அதற்கேற்ற ஒரு ராகத்தில் முதல்முதலாகப் பாடப்பட்டு, வெகுவாகப் போற்றப்பட்டது.  இப்போது இப்பாடல் பல பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆராதனைகளில் ஒரு முடிவுப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. இப்பாடலுக்கான இசையை எட்வர்ட் ஹாப்கின்ஸ்
(Edward J. Hopkins) எழுதியுள்ளார்.

இப்பாடலை எழுதிய ஜான் எல்லர்ட்டன் என்பவர் 1826ம் ஆண்டு, ஜூன் மாதம், 15ம் தேதி, லண்டன் மாநகரில் பிறந்தார்.  அவரது முன்னோர்களில் பலர் நற்செய்திப் பணியில் ஆர்வமுடையவர்கள்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக் கல்லூரியில் சேர்ந்து (Trinity College, Cambridge), பி.ஏ., எம்.ஏ., பட்டங்கள் பெற்றார்.  1850ல் ஆயர் பட்டம் பெற்று, க்ரூகிரீன் (Crewe Green), ஹின்ஸ்டாக் (Hinstock, Shropshire), ஈஸ்ட்போர்ன் (Eastbourne), ப்றைட்டன் (Brighton) முதலிய பல சபைகளில் திருப்பணியாற்றினார்.  ஊழியத்தில் பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையுள்ளவர், பொது ஜன சேவைக்காக அதிக நேரம் செலவிட்டார்.  அவர் அநேக சிறந்த பாடல்கள் எழுதினாலும், அவற்றிற்குப் பதிப்புரிமை பெற்றுக்கொள்ள மறுத்து, அவை கிறிஸ்து சபைக்கே சொந்தமெனக் கூறினார்.  அவர் கிறிஸ்தவப் பாடல்களை அதிகமாக நேசித்துப் பாடிக்கொண்டிருந்தார்.  அவர் இறப்பதற்க்கு முந்தின ஆண்டில் தூய அல்பான்ஸ் சபையினர் அவருக்குக் கனோன் (Canon) என்னும் உயர்நிலையை அளித்தனர்.  ஆனால் உடல்நிலையின் பொருட்டு, அவ்வுயர் நிலையை அவர் வகிக்க முடியவில்லை.  அவர் 1893ம் ஆண்டு தமது 67ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

‘நீர் தந்த நாளும் ஓய்ந்ததே’ – பாமாலை 38
‘துயருற்ற வேந்தரே’ – பாமாலை 118
‘வாழ்க பாக்கிய காலை’ – பாமாலை 131


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்
வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.

2.    உம் சமாதானம் தந்து அனுப்பும்,
உம் நாளை முடிப்போமே உம்மோடும்
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்

3.    உம் சமாதானம் இந்த ராவிலும்;
இருளை நீக்கி ஒளி தந்திடும்
பகலோ ராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே.

4.    உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்
நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்

பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.

Post Comment