Friday, February 17, 2017

பாமாலை 11 - மகா அதிசயங்களை

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மகா அதிசயங்களைச்
செய்தென்னைப் பூரிப்பித்து,
உபத்திரவத்தின் பாரத்தை
இரக்கமாய்க் கழித்து,
ரட்சிக்கிற தயாபரர்
இஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

2.    கர்த்தாதி கர்த்தா, தேவரீர்
யாவற்றையும் நன்றாக
சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர்
என்றும்மைப் பணிவாக
விண் மண் கடல் ஆகாசத்து
சேனைத் திரள்கள் போற்றுது;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

3.    ஆ, கேளும் என்தன் துன்பத்தில்
கர்த்தாவைக் கெஞ்சிவந்தேன்
அப்போது ஏற்ற வேளையில்
மகா ரட்சிப்பைக் கண்டேன்,
இதற்கென் நாவே, கீதம்சொல்
என்னோடெல்லோரும் பாடுங்கள்,
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

4.    நான் தேவரீரை என்றைக்கும்
மகிழ்ச்சியாய்த் துதிப்பேன்;
நான் உம்மை நித்தநித்தமும்
புகழ்ந்து ஸ்தோத்திரிப்பேன்,
என் ஆத்துமமும் தேகமும்,
கர்த்தாவே, உம்மைப் போற்றவும்;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

5.    மெய்மார்க்கத்தாரே, கர்த்தரை
துதித்துக் கொண்டிருங்கள்,
அவருடைய நாமத்தை
எந்நேரமும் தொழுங்கள்.
பொய்த் தேவர் செவிடூமையர்,
கர்த்தா கர்த்தாவே ஆண்டவர்,
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

6.    நாம் தெய்வ சன்னிதியிலே
மகா மகிழ்ச்சியாக
வந்துன்னத கர்த்தாவையே
வணக்கம் செய்வோமாக
பராபரனைப் போலே யார்,
யாவற்றையும் நன்றாக்கினார்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

Post Comment

No comments:

Post a Comment