பாமாலை 97 – அன்புள்ள
ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
(Herzliebster Jesu)
Johann Heermann |
Robert S. Bridges |
”அன்புள்ள ஸ்வாமி” எனும் இப்பாடல்
Herzliebster Jesu என்ற
ஜெர்மன் பாடலின் தமிழ் வடிவமாகும்.
இப்பாடலை ஜெர்மன் மொழியில் 1630ம் ஆண்டு Johann Heermann என்பவர்
லெந்துகாலங்களில் பாடப்படுவதற்கென்று எழுதினார். இப்பாடலை ஆங்கிலத்தில் Robert S. Bridges என்பவர்
கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்.
Ah,
holy Jesus, how hast Thou offended,
That man to judge Thee hath in hate pretended?
By foes derided, by Thine own rejected,
O most afflicted.
That man to judge Thee hath in hate pretended?
By foes derided, by Thine own rejected,
O most afflicted.
பாடலுக்கான இசையை Johann Crüger என்பவர்
எழுதியுள்ளார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர், தேவரீரின்
மீது
ஏன் இந்தத் தீது?
2. வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள் முடியும்
சூட்டப்பட்டீர்;
பிச்சுண்கத் தந்து உம்மைத்
தூக்கினார்கள்,
வதைத்திட்டார்கள்.
3. இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;
அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து
வதை செய்தது.
4. மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக
ஜீவன் தாரார்,
அடியார் தப்பக் குற்றமற்ற
மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.
5. ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி, யாவையும்
வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர்
பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.
6. இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால்
நீங்காது;
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.
7. அப்போ நான் உமதன் நிறைந்து,
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,
என் நெஞ்சை உமக்குண்மையாய்க்
கொடுக்கும்
பலம் இருக்கும்.
8. பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை, இயேசுவே,
துதிப்பேன்,
இஸ்தோத்திரிப்பேன்.
No comments:
Post a Comment