Monday, May 22, 2017

பாமாலை 98 - இதோ மரத்தில் சாக

பாமாலை 98 – இதோ மரத்தில் சாக

(O Welt, sieh hier dein Leben)

Paul Gerhardt
Pic Thanks : Wikipedia
இப்பாடலை எழுதியவர் Paul Gerhardt என்பவராவார்.  ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இப்பாடல் முதன்முதலில் 1647ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது.  பின்னர், ஆங்கிலத்திலும் இப்பாடல் பல்வேறு வகையில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றுள், 1858ம் ஆண்டு Catherine Winkworth மொழிபெயர்த்த ‘O World! Behold upon the tree’ எனும் பதிப்பு மிகவும் பிரபலமாக இன்றும் உலகமெங்கும் பாடப்படுகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்விலும் கிறிஸ்துவின் பாடுகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனும் கருத்தை விளக்கும் இப்பாடல், நம் பாமாலைப் புத்தகத்தில் ‘பாடுபட்ட வாரம்’ எனும் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் நுட்பமான தாள அமைப்பின் காரணமாக, மிக அரிதாகவே நமது ஆராதனைகளில் பாடப்படுகிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    இதோ, மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம், லோகமே;
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள், மாந்தர்களே.

2.    இதோ, மா வேகத்தோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்
நல் நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின்மேல் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்;

3.    ஆர் உம்மைப் பட்சமான
கர்த்தா, இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்?
நீர் பாவம் செய்திலரே,
பொல்லாப்பை அறியீரே;
ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?

4.    ஆ! இதைச் செய்தேன் நானும்
என் அக்கிரமங்கள் தானும்,
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதகங்கள் இந்த
வதைப்புக் காதிமூலங்கள்.

5.    நானே கை கால் கட்டுண்டு
பாதாளத்தில் தள்ளுண்டு
கிடத்தல் நியாயமே
நானே முடிவில்லாமல்
சந்தோஷத்தைக் காணாமல்
வதைக்கப்படல் நீதியே.

6.    நீரோ என்மேல் உண்டான
அழுத்தும் பாரமான
சுமை சுமக்கிறீரே;
ஆசீர்வதிக்க நீரே
போய்ச் சாபமாகிறீரே;
நான் தப்ப நீர் படுகிறீர்.

7.    நீர் என் கடனைத் தீர்க்க
பிணையாய் என்னை மீட்க
மரத்தில் ஏறினீர்; 
ஆ, சாந்தமான சிந்தை,
நீர் முள் முடியின் நிந்தை
எத் தீங்கையும் பொறுக்கிறீர்.

8.    நான் சாவின் வாய்க்குத் தப்ப,
நீரே அதை நிரப்ப
அதில் விழுகிறீர்;
நான் நீங்க நீர் முன்னிற்பீர்,
நான் வாழ நீர் மரிப்பீர்,
அவ்வாறு என்னை நேசித்தீர்.

9.    கர்த்தாவே, நீர் பகைக்கும்
பொல்லாப்பை என்றென்றைக்கும்
வெறுத்தரோசிப்பேன்;
என் இச்சையை நாள்தோறும்
ஆகாத சிந்தையோடும்
நான் சிலுவையில் அறைவேன்.

10.   ஆ, உமது ஜெபமும்
அவஸ்தையும் தவமும்
கண்ணீருங் கிலேசமும்,
நான் செத்தால் பரலோக
சந்தோஷத்துக்குப் போக
வழித் துணைக்குதவவும்.

Post Comment

No comments:

Post a Comment