திவ்ய அன்பின் சத்தத்தை
(SS 607 – I am
thine O Lord)
ஃபானி
கிராஸ்பி (Fanny
Crosby) அம்மையார் 8500க்கும்
மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். கிராஸ்பி எழுதி,
வில்லியம் டோன் (William Doane) இசையமைத்த அற்புதமான பல பாடல்களுள் ‘திவ்ய அன்பின்
சத்தத்தை’ பாடலும் ஒன்றாகும்.
William Doane |
ஒரு
மாலை வேளையில் கிராஸ்பியும் அவரது தோழர் வில்லியம் டோன்’ம் ஆண்டவர் தங்கள் வாழ்வில்
எவ்வளவு நெருக்கமாக இருந்துவந்திருக்கின்றார் என்பதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய உரையாடல் முடிந்து, கிராஸ்பி தம் அறைக்குத்
திரும்பிய பின்னரும், வில்லியம் டோன்’உடன் அவர் பகிர்ந்துகொண்ட ஆவிக்குரிய கருத்துகள்
அவர் மனதில் ஒலித்தவண்ணம் இருந்தன. அன்றிரவு
அவர் உறங்கச் செல்வதற்கு முன்னர் ‘I
am thine, O Lord’ என்ற வரி
அவர் மனதில் ஆழமாகப் பதிந்துபோய் இருந்தது.
மறுநாள் காலையில் எழுந்ததும், முழுப்பாடலுக்கான வரிகளையும் தனது தோழர் வில்லியம்
டோன்’இடம் அவர் வாய்மொழியாகக் கூற, வில்லியம் அதை ஒரு தாளில் எழுதி, அப்பாடலுக்கான
ராகத்தையும் அங்கேயே அமைத்தார்.
I
am Thine, O Lord, I have heard Thy voice,
And
it told Thy love to me;
But
I long to rise in the arms of faith
And
be closer drawn to Thee.
Refrain
Draw me nearer, nearer blessèd
Lord,
To the cross where Thou hast
died.
Draw me nearer, nearer, nearer
blessèd Lord,
To Thy precious, bleeding side.
Consecrate
me now to Thy service, Lord,
By
the power of grace divine;
Let
my soul look up with a steadfast hope,
And
my will be lost in Thine. Refrain
O
the pure delight of a single hour
That
before Thy throne I spend,
When
I kneel in prayer, and with Thee, my God
I
commune as friend with friend! Refrain
There
are depths of love that I cannot know
Till
I cross the narrow sea;
There
are heights of joy that I may not reach
Till
I rest in peace with Thee. Refrain
இப்பாடல்
வரிகளுக்கான மூலத்தை கிராஸ்பி, “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும்,
சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின்
பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” எபிரேயர் 10:22 என்ற வசனத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார். தான் எழுதிய பல்வேறு பாடல்களைப் போலவே, இப்பாடலும்
கடவுளுக்கும் தனக்குமான ஒரு தனிப்பட்ட ஆன்மீக உறவைக் குறித்துப் பேசுவதாக எழுதியுள்ளார்,
கிராஸ்பி அம்மையார்.
Fanny Crosby |
ஃபானி
கிராஸ்பி (Fanny
Crosby) அம்மையார் ஆறுவாரக்
குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார். ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு
கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.
ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை. மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து
‘Poor little blind
girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் ஃபானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன்
நிலை என்ன என்று சிந்திக்கலானார். தன்னைச்
சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர். அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன்
மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார்.
ஃபானி
கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள
ஒரு கிராமத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்
மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம்
உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச்
சுற்றிலும் பூசினார். இதனால் கண்கள் வெந்து
குருடாயிற்று. பெண் ஐந்து வயதாயிருக்கையில்
அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம்
அனுப்பினார். ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால்
முடியவில்லை. எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில்
நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு
ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி,
தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.
ஃபானி
கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார். அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை
எழுதினார். சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில்
அவரே முதல் இடத்தைப் பெற்றார். அவர் எழுதிய
நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில்
காணலாம். அவர் எழுதிய இதர பாடல்களில் நாம்
பாடி வருபவை:
v
போற்றும்
போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை
267)
v
இயேசுவே
கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v
இயேசுவின்
கைகள் காக்க (பாமாலை 353)
v
இயேசுவின்
நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v
பாவி,
உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v
முயல்வோம்,
முயல்வோம் (S.S. 751)
v
இயேசுவை
நம்பிப் பற்றிகொண்டேன் (S.S. 873)
ஃபானி
கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.
UnisonSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. திவ்ய
அன்பின் சத்தத்தை, ரட்சகா!
கேட்டு
உம்மை அண்டினேன்;
இன்னும்
கிட்டி சேர, என் ஆண்டவா!
ஆவல்
கொண்டிதோ வந்தேன்.
இன்னும் கிட்ட கிட்டச்
சேர்த்துக்கொள்ளுமேன்!
பாடுபட்ட நாயகா!
இன்னும் கிட்டக் கிட்டச்
சேர்த்துக்கொள்ளுமேன்!
ஜீவன் தந்த இரட்சகா!
2. என்னை
முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடி தேடச் செய்யுமேன்.
3. திருப்பாதத்தில்
தங்கும்போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்;
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய்ச் சந்தோஷமாகிறேன்.
4. இன்னும்
கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன்.
Wow really awesome thanks a lot may God bless u forever 🥰
ReplyDeleteThank you. God Bless.
DeleteMay I know who translated the hymn inTamil?
ReplyDeleteNot sure. Found the lyrics from an old book.
Delete