Monday, February 12, 2018

SS 873 - இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன் (Blessed Assurance)

இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்
(SS 873 - Blessed Assurance)

P.P Knapp
நியூயார்க் நகரத்தில் வாழ்ந்துவந்த ஃபிபி நாப் (Phoebe Palmer Knapp) (1839-1908) என்ற இசைவல்லுனர் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர்.  இவர் நியூயார்க்கில் உள்ள John Street Methodist Episcopal Church எனும் ஆலயத்தில் தேவனை ஆராதித்து வந்தார். இவ்வாலயத்தில் பாடலாசிரியை ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) என்பவரும் தேவனைத் தொழுதுவந்தார். 

ஒருமுறை ஃபிபி நாப் தன் சிநேகிதியான ஃபானி கிராஸ்பியிடம் ஆர்கனில் (Organ) ஒரு ராகத்தை வாசித்துக்காண்பித்து, ’இந்த ராகம் உனக்கு எந்த உணர்ச்சியைத் தருகிறது ஃபானி..?’ என்று கேட்க, அதற்கு ஃபானி ‘இயேசு என்னுடையவர்!’ என்ற நல்நம்பிக்கையைத் தருகிறது’ என்று பதிலுரைத்தார். இசையை மீட்டிய தன் சிநேகிதியின் கேள்விக்குத் தயக்கமின்றிப் பதிலுரைத்த பார்வையற்ற பாடலாசிரியை ஃபானி கிராஸ்பி, தொடர்ந்து அப்பாடலையும் இசைக்கேற்றபடி Blessed Assurance என்று துவக்கித் துரிதமாக எழுதி முடித்தார்.

Fanny Crosby
இப்பாடலை எழுதிய ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார்.  ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.  ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை.  மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து ‘Poor little blind girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் பானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன் நிலை என்ன என்று சிந்திக்கலானார்.  தன்னைச் சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர்.  அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன் மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார். 

பானி கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம் உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச் சுற்றிலும் பூசினார்.  இதனால் கண்கள் வெந்து குருடாயிற்று.  பெண் ஐந்து வயதாயிருக்கையில் அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பினார்.  ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால் முடியவில்லை.  எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி, தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.

பானி கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார்.  அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் அவரே முதல் இடத்தைப் பெற்றார்.  அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில் காணலாம்.  அவர் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:

v  போற்றும் போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை 267)
v  இயேசுவே கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v  இயேசுவின் கைகள் காக்க (பாமாலை 353)
v  இயேசுவின் நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v  பாவி, உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v  முயல்வோம், முயல்வோம் (S.S. 751)
பானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




  
1.    இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் ரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார்

இயேசுவைப் பாடி போற்றுகிறேன்
நேசரைப் பார்த்து பூரிக்கின்றேன்
மீட்பரை நம்பி நேசிக்கின்றேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

2.         அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

3.         மெய்ச் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

Post Comment

No comments:

Post a Comment