Wednesday, May 30, 2018

Old Rugged Cross (கொல்கொதா மலைமேல்)

ஈனச்சிலுவை
(Old Rugged Cross)

பெரிய வெள்ளிக்கிழமை மும்மணி ஆராதனை.  ஆலயம் நிரம்பி வழிகின்றது.  சிலுவைக் காட்சியின் அடிப்படையில் செய்திகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.

‘என்ன? கிறிஸ்தவர்கள் விக்கிரகத்திற்குப் பதிலாக சிலுவையை வணங்குகிறார்களோ?”

தப்புக்கணக்குப் போடவேண்டாம்.  சிலுவைக் காட்சியின் மையக் கதாநாயகனான தியாகச் செம்மல் இறைஇமகன் இயேசுவையே தியானம் செய்கின்றோம்.  ஆம்.  இறைவனின் தியாக அன்பை அறிய சிலுவைத் தியானம் அவசியமே.  இதன் அருமையை அறிந்த பவுல் ‘ரோமர்களும் மற்றவர்களும் கீழ்த்தரமாக மதித்த இந்த ஈனச் சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன்” என்று வெற்றிப் பெருமிதம் கொள்கிறான்.

எனவே 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடலாகிய இப்பாடலும், சிலுவையின் பின்னணியில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  பாடுகள் நிறைந்த தன் வாழ்க்கையின் பிரச்சனைகளின் மத்தியில், ஆறுதலைத் தேடி, சிலுவைத் தியானத்தை மேற்கொண்ட ஒரு தேவ மனிதனின் உள்ளத்தில் எழுந்ததே இப்பாடலாகும்.

George Bennard
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் பென்னார்டு (George Bennard) 1873ம் ஆண்டு ஓகியோவிலுள்ள யங்க்ஸ்டவுனில் (Youngstown, Ohio) பிறந்தார்.  பின்னர் அயோவாவிலுள்ள லூக்காஸ் என்ற ஊரில் சிறுவனாக இருக்கும்போதே, இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார்.  பதினாறு வயதாகுமுன்பே தந்தையை இழந்தார்.  உடனே இரட்சணிய சேனையில் (Salvation Army) சேர்ந்தார்.

பென்னார்டு மெதடிஸ்ட் சபை போதகராக சிறப்பாக ஊழியம் செய்தார்.  பின்னர் மிச்சிகன் நியூயார்க் மாநிலங்களில் உயிர் மீட்சிப் பணியில் ஈடுபட்டார்.  மீண்டும் மிச்சிகனுக்கு வந்த அவர், கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவித்தார்.  அந்நாட்களில் கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைப் பற்றிப் பவுல் எழுதிய வேதவசனங்களை தியானித்தார்.  சிலுவையைப் பற்றிய உபதேசம், நற்செய்தியின் மையக் கருத்தாக இருப்பதை பென்னார்டு உணர்ந்தார்.

இச்சிலுவைத் தியானங்களின்போது, 1913ம் ஆண்டு ஒருநாள் இப்பாடலை எழுத ஆரம்பித்தார்.  அதை எழுதியவுடன் தன் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்திக்கவே, தேவன் இப்பாடலைக் கொடுத்ததாக எண்ணினார்.  பின்னர் 7.6.1913 அன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இப்பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.  அதன்பின் சிக்காகோ நற்செய்திக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டங்களில் பாடப்பட்டு பிரபலமானது.

இப்பாடலின் ராகத்தையும் பென்னார்டே அமைத்தார்.  உலகப் பிரசித்திபெற்ற இப்பாடலை எழுதிய பென்னார்டு 85ம் வயதில், 9.10.1958 அன்று, தனது இவ்வுலக வாழ்வின் சிலுவையை, பரலோகத்தின் பொற்கிரீடமாக மாற்றிக்கொண்டார். 

நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




























1.    கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
     அல்லல் பழிப்பின் சின்னமதாம்
     நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
     நேசிப்பேன் அத்தொல் சிலுவையை



அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்

2.    தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது
                - அந்தச் சிலுவையை

3.    என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் !
                - அந்தச் சிலுவையை

4.    குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில்
                - அந்தச் சிலுவையை
******************************************************************************
































1.       On a hill far away stood an old rugged cross,
the emblem of suffering and shame;
and I love that old cross where the dearest and best
for a world of lost sinners was slain.

          Refrain:

So I'll cherish the old rugged cross,
till my trophies at last I lay down;
I will cling to the old rugged cross,
and exchange it some day for a crown.

2.       O that old rugged cross, so despised by the world,
has a wondrous attraction for me;
for the dear Lamb of God left his glory above
to bear it to dark Calvary. [Refrain]

3.       In that old rugged cross, stained with blood so divine,
a wondrous beauty I see,
for 'twas on that old cross Jesus suffered and died,
to pardon and sanctify me. [Refrain]

4.       To that old rugged cross I will ever be true,
its shame and reproach gladly bear;
then he'll call me some day to my home far away,
where his glory forever I'll share. [Refrain]

Post Comment

No comments:

Post a Comment