Monday, May 28, 2018

SS 657 - Sweet Peace (இனிய சமாதானம்)

இனிய சமாதானம்
(SS 657 - Sweet Peace)

இப்பாடலை எழுதி இசையமைத்தவர் பீட்டர் பில்ஹார்ன் (Peter P. Bilhorn).  இப்பாடல் பிறந்த கதையை அவரே பின்வருமாறு விவரிக்கிறார்.

‘நியூ ஜெர்ஸியிலுள்ள ஓஷன் குரோவ் (Ocean Grove) என்ற இடத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் பாடுவதற்கு நான் அழைக்கப்பட்டேன்.  எனவே ஆரம்ப நாட்களில் நான் அடிக்கடி பாடும் “அதிசயக் கதையை நான் பாடுவேன்” (I Will Sing the Wondrous Story) என்ற பாடலைப் பாடினேன்.

கூட்டமுடிவில் என் நண்பரான திருமதி ஐடா ஸ்டாட்டர்ட் டெமெரஸ்ட் (Ida Stoddard Demerast) என்ற சகோதரி என்னிடம் வந்து, ‘பில்ஹார்ன்.. நீங்கள் பாடிய பாடல் உங்கள் குரலுக்கு மிகவும் பொருத்தமாயிருக்கிறது.  அதுபோல என் குரலுக்குப் பொருத்தமான பாடலொன்றை நீங்கள் எழுதமுடியுமா?” என்று கேட்டார்.

‘என்ன தலைப்பில் அப்பாடல் இருக்கவேண்டும்?” என்று நான் கேட்டேன்.  அதற்கு அவர், ‘ஏதேனும் ஓர் இனிய பாடல்! அவ்வளவுதான்’ என்றார்.  ‘இனிய பாடல்’ என்ற அவரின் பதிலை நான் குறித்துக்கொண்டேன்.

இரவில் சகோ S.T. கார்டனின் (S.T. Gordon) இல்லத்தில் நான் பியானோவின் முன் அமர்ந்திருந்த வேளையில், புதிய ராகம் ஒன்று எனக்குள் உருவானது.  எனினும் பாடலோ ‘இனிய பாடல்’ என்ற தலைப்போடு, வேறு வார்த்தைகளின்றி நின்றுகொண்டிருந்தது.

அதன்பின்னர், பனிக்காலத்தில் D.L. மூடி (D. L. Moody) என்னிடம் தொடர்பு கொண்டு, அயோவாவில் (Iowa) நடைபெறும் மேஜர் விட்டிலின் (Major Whittle) நற்செய்திக் கூட்டங்களில் பங்கேற்குமாறு அழைத்தார்.  அதை ஏற்று நானும், மேஜர் விட்டிலும் சிக்காகோவிலிருந்து புறப்பட்டோம்.

Peter P. Bilhorn
இல்லினாஸிலுள்ள வீட்டன் (Wheaton, Illinois) என்ற நகரை நெருங்கும் நேரத்தில், திடீரென நாங்கள் சென்ற புகைவண்டியின் எஞ்சின் உச்ச தொனியில் எச்சரிக்கைக் குரலெழுப்பி நின்றது.  நாங்கள் இருவரும் இறங்கிச் சென்று பார்த்தோம்.  எங்கள் ரயிலில் ஒரு வயதான பெண்மணி அடிபட்டு இறந்து போயிருந்தார்.  அவரது சிதைந்து போன உடல் ஒரு குழியில் கிடந்தது.  அச்சடலத்தை அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அச்சரீரம் இருந்த குழியில் ரத்தம் மட்டும் சிறு குளம் போலத் தேங்கியிருந்தது.

மேஜர் விட்டில் என் தோளில் தட்டி “இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இதை மட்டுமே விட்டுச் சென்றார் என்று உனக்குத் தெரியுமா? நம்மை நீதிமான்களாக்க அவருடைய சரீரம் உயிர்த்தெழுந்தது.  ஆனால் அவரது ரத்தமோ நமது பாவங்களை நிவிர்த்தி செய்ய சிந்தப்பட்டது என்றார்.

‘ஆம் மேஜர்.  இயேசுவின் ரத்தம் எனது பாவங்களை நிவிர்த்தி செய்கிறதென்பதே எனக்கு இனியதோர் சமாதானத்தைத் தருகிறது’ என்றேன்.

நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.


பாடல் பிறந்த கதையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே செல்லவும்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  என் உள்ளத்தில் தொனிக்குதே
மகிழ்ச்சியின் கீதமதே
தேவன்பின் ஈவாக வந்ததே
இனிய சமாதானம்.

     சமாதானம்
     உன்னத சமாதானம்
     தேவன்பின் அற்புத ஈவே
     இனிய சமாதானம்

2. கிறிஸ்து சிலுவையிலே
என் கடன் செலுத்தித் தீர்த்தார்
தேவன்பு தான் என் அஸ்திபாரம்
இனிய சமாதானம்.

3. இயேசுவே என் கர்த்தரானார்
என் உள்ளத்தில் சமாதானம்
அளவில்லா ஆசீர்வாதமே
இனிய சமாதானம்.

4. இயேசுவை நான் பற்றிக்கொண்டே
சமாதானத்தில் நிலைப்பேன்
கலக்கமின்றி வாழுவேன்
இனிய சமாதானம்.





























1.      There comes to my heart one sweet strain,
A glad and a joyous refrain;
I sing it again and again--
Sweet peace, the gift of God’s love.

Chorus:

Peace, peace, sweet peace!
Wonderful gift from above!
O wonderful, wonderful peace!
Sweet peace, the gift of God’s love!

2.      Thro' Christ on the cross peace was made,
My debt by His death was all paid;
No other foundation is laid
For peace, the gift of God’s love. (Chorus)

3.      When Jesus as Lord I had crowned,
My heart with this peace did abound;
In Him the rich blessing I found--
Sweet peace, the gift of God’s love. (Chorus)

4.      In Jesus for peace I abide,
And as I keep close to His side,
There’s nothing but peace doth betide--
Sweet peace, the gift of God’s love. (Chorus)



Post Comment

No comments:

Post a Comment