Sunday, March 24, 2019

பாமாலை 127 - கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!

பாமாலை 127 - கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
(Christ is Risen! Christ is Risen!)

Archer T. Gurney (1820–1887)

இந்தப் பாடலை இயற்றியவர் Archer Thompson Gurney (1820–1887). ஆங்கிலேயரான இவர், சட்டக்கல்லூரியில் தமது வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்தபின்னர், 1849ம் ஆண்டு கடவுளின் ஆண்டவரின் ஊழியத்திற்கென்று தம்மை அர்ப்பணித்தார்.  பின்னர் இங்கிலாந்தின் Exeter நகரில் ஆயராக அபிஷேகம் பெற்று, France தேசத்தில் உள்ள Paris நகரில் உள்ள Court Chapel’ல் Chaplain’ஆக பணியாற்றிவந்தார். 1871க்குப் பின்னர் இங்கிலாந்து திரும்பிய இவர், Westminster, Brighton, Hastings, London ஆகிய பல்வேறு ஊர்களில் தமது ஊழியத்தைத் தொடர்ந்தார். தமது ஊழியக்காலங்களில் வேத ஆராய்ச்சியிலும், கவிதைகள் எழுதுவதிலும் ஈடுபட்ட இவரின் படைப்புகள் ”Words of Faith and Cheer” என்ற தலைப்பில் 1874ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Arthur S. Sullivan (1842–1900)
பாடல்கள் எழுதும் வரம் பெற்றிருந்த Archer, தம் வாழ்நாளில் கிட்டத்தட்ட 147 பாடல்களை இயற்றினார்.  இத்தனை பாடல்களை எழுதியிருந்தபோதும், அவரது ‘Christ is Risen” என்ற உயிர்த்தெழுதலின் பாடலே இன்றும் பரவலாக உலகம் முழுவதும் பாடப்படுகிறது.  Arthur Seymour Sullivan என்ற ஆங்கில இசையமைப்பாளர் இப்பாடலுக்கான ‘Resurrexit” என்ற ராகத்தை இயற்றினார். ஆர்த்தர் தமது Operas, Orchestral வடிவ இசை, Choral works, Oratorios, Ballets, Church pieces, Songs, Piano & chamber pieces என்று பல்வேறு வகையான இசைவடிவங்களை அமைப்பதில் தேர்ச்சி பெற்று விளங்கினார். ‘யுத்தம் செய்வோம் வாரும்’ (Onward Christian Soldiers) என்ற பாடலுக்கான இசையை இயற்றியவரும் இவரே.

Unison

Soprano
Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano






































1. கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
சாவின் கூரை முறித்தார்;
கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
அல்லேலூயா பாடுங்கள்!
நம்மை மீட்க சகித்தார்
தெய்வ சித்தத்தால்
சிலுவையில் மரித்தார்,
அவர் ஸ்வாமியாம்.

கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
சாவின் கூரை முறித்தார்;
கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
அல்லேலூயா பாடுங்கள்!

2. நாதன் சாவை ஜெயங்கொண்டார்,
விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்;
நேசக் கர்த்தர் எழுந்ததோ
மா அதிசயமன்றோ?
தந்தை வலப் பக்கத்தில்
என்றும் ஆளுவார்;
மீண்டும் நடுத்தீர்ப்பினில்
நம்மை அழைப்பார்.

3. வான தூதர் சேனை வந்து
விண்பதியை வாழ்த்தவே
வார்த்தை அவதாரர்க்கே விண்
வாஞ்சித்தக மகிழ்ந்தே;
வான ஜோதி இலங்க
பூமி மகிழ,
கிறிஸ்துவே சர்வாதிபர்
என்குதே சிஷ்டி.

Post Comment

No comments:

Post a Comment