Tuesday, April 9, 2019

பாமாலை 277 – மா தூய ஆவி!

பாமாலை 277 – மா தூய ஆவி! இறங்கும்
(Come Holy Ghost, our souls inspire)

இந்தப் பாடலின் வயது 1000 என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! நம் பாமாலைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மிகத் தொன்மையான பாடல்களுள் ‘மா தூய ஆவி! இறங்கும்’ பாடல் சிறப்பான ஒன்றாகும். தற்போது உள்ள வடிவில் கடந்த 350 ஆண்டுகளாக மட்டுமே இப்பாடல் பாடப்பட்டுவந்தாலும் இதன் தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகும் என்று பாடல் ஆய்வாளர் Ian Bradley தனது ‘Book of Hymns’ல் குறிப்பிடுகிறார்.

Rabanus Maurus (left) presents his work to Otgar of Mainz. Illustration from a Fulda manuscript, c. 830–840.
(Pic Credits - Wikipedia)
இப்பாமாலையின் மூல வடிவம் 9ம் நூற்றாண்டில் பாடப்பட்டுவந்த ‘Veni, creator spiritus’ என்ற லத்தீன் மொழி பாடலாகும்.  இப்பாடலை எழுதியவர் யார் என்பது குறித்த தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள், Emperor Charles the Fat, Gregory the Great, St Ambrose என்று நிறைய பெயர்களை முன்வைக்கின்றபோதும், Rhabanus Maurus (c. 780 – 4 February 856) (Archbishop of Mainz in East Francia) என்ற போதகரே இதை எழுதியவர் என்று நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பத்தாம் நூற்றாண்டு முதலே இப்பாடல் பாடப்பட்டு வருவதற்கான ஆதாரங்களை நிறைய ஆய்வர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.  அந்நாட்களில், ஆலயமணிகள் முழங்க, மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, தூபவர்க்கத்துடன் பக்திசிரத்தையோடு ஒரு Ceremonial Hymnஆகப் பாடப்பட்டு வந்துள்ளது இப்பாடல்.

Rabanus (c. 780 – 4 February 856) கிழக்கு Francia’வில் Archbishop’ஆக ஊழியம் செய்து வந்தார். வேத ஆராய்ச்சி மட்டுமல்லாது, கவிதை எழுதுதல், Encyclopaedia உருவாக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளல், கல்வி, இலக்கணம், என்று பன்முகத்திறமை கொண்டவராக அறியப்படுகிறார். அவருடைய சரியான பிறந்த தேதி தெரியாவிட்டாலும் 801ம் ஆண்டு Benedictine Abbey of Fuldaவில் Deacon’ஆக அபிஷேகம் செய்யப்பட்டதற்கான குறிப்புகள் இருக்கின்றன.  803ம் ஆண்டு Abbey பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்ற அவர் அநேக பாடல்கள் எழுதியிருந்தாலும், Veni Creator Spiritus என்ற ராகத்தில் அமையப்பெற்ற இந்தப் பாடலே மிகப்பிரபலமாக விளங்குகிறது

Rev. John Cosin (1594-1672)
பதினோராம் நூற்றாண்டில் ஆயர்கள் அபிஷேக ஆராதனைகள் (Ordination Services) பேராயர்கள் பிரதிஷ்டை (Consecration of Bishops) ஆகிய ஆராதனைகள்/நிகழ்வுகளில் பாடப்பட்டு வந்த இப்பாடல், இன்றும் உலகமெங்கும் உள்ள அநேக திருச்சபைகளில் இந்த ஆராதனைகளில் பாடப்படுகிறது. “Come Holy Ghost Our souls inspire” எனும் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கிலாந்தில் வசித்து வந்த John Cosin (1594-1672) எனும் ஆயர் எழுதினார். 1627ம் ஆண்டு வெளியான ”Collection of Private Devotions in the Practice of the Ancient Church” எனும் புத்தகத்தில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு முதன்முதலில் வெளியிடப்பட்டது.  Cosin, ஆவியானவர் சபையின் மேல் இறங்கிவருவதைக் குறிக்கும் வண்ணமாக இந்தப் பாடலை தனது திருச்சபையில் காலைதோறும் பாடச்செய்தார்.  இப்பாடலின் நான்காவது சரணம் பாடப்பட்டபின்னர் Doxology என்றழைக்கப்படும் திரியேகத் துதி பாடப்படுகிறது.

பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns by Ian Bradley & Wikipedia
Unison (சரணங்கள் 1 to 3)

Soprano (சரணங்கள் 1 to 3)

Alto (சரணங்கள் 1 to 3)

Alto with Soprano (சரணங்கள் 1 to 3)

Tenor (சரணங்கள் 1 to 3)

Tenor with Soprano (சரணங்கள் 1 to 3) 
 Bass  (சரணங்கள் 1 to 3)

Bass with Soprano  (சரணங்கள் 1 to 3) 
 Unison (சரணம் 4)

Soprano (சரணம் 4)

Alto (சரணம் 4)

Alto with Soprano (சரணம் 4)

Tenor (சரணம் 4)

Tenor with Soprano (சரணம் 4)

Bass (சரணம் 4)

Bass with Soprano (சரணம் 4)







































1. மா தூய ஆவி! இறங்கும்,
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்;
ஞானாபிஷேக தைலம் நீர்
நல் வரம் ஏழும் ஈகிறீர்.

2. மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்
உம் அபிஷேகம் தந்திடும்;
ஓயாத ஒளி வீசியே
உள்ளத்தின் மருள் நீக்குமே.

3. துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே
ஏராள அருள் பெய்யுமே;
மாற்றார் வராமல் காத்திடும்
சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்.

4. பிதா, குமாரன், ஆவியும்
திரியேகர் என்று போதியும்;
யுகயுகங்களாகவே
உம் தாசர் பாடும் பாட்டிதே:

பிதா, சுதன், சுத்தாவி! உமக்கே
சதா நித்தியமும் ஸ்துத்தியமே!
ஆ மென்

Post Comment

No comments:

Post a Comment